நோய் எதிர்ப்பு சக்தி என்பது ஒருவரின் ஆரோக்கியமான உடலுக்கு அடித்தளம் அமைக்கிறது. இதற்காக மருத்துவ நிபுணர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய சில எளிமையான உணவு குறிப்புகளை பரிந்துரைக்கின்றனர். அதனை இக்கட்டுரையில் பார்க்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் 5 எளிதான குறிப்புகள்: தொற்றுநோய் காலத்தின் போது, உடலை ஆரோக்கியமாக பராமரிப்பது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மிகவும் முக்கியம். சிலர் அவர்களின் மரபியல் காரணமாக நல்ல நோய் எதிர்ப்பு சக்தியுடன் காணப்பட்டாலும், அது காலப்போக்கில் உருவாக்கவும்படலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது. சரியான ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமான உணவுகள், ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவற்றால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உங்கள் அன்றாட வாழ்வில் இணைக்கக்கூடிய 5 விரைவான குறிப்புகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
புரோபயாடிக் உணவுகளை உட்கொள்ளுங்கள்: ஆரோக்கியமான குடலுக்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் இடையே பிரிக்கமுடியாத தொடர்பு உள்ளது. இதனால்தான் நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்தை அதிகரிக்க புரோபயாடிக்குகள் மற்றும் தயிர், லஸ்ஸி போன்ற குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை சாப்பிட நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மூலிகை தேநீர்: இந்த தேநீர் சுவைகளை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் நம் பாரம்பரிய மருத்துவ நடைமுறைகளில் உள்ளன. இஞ்சி, ஏலக்காய், மசாலா மற்றும் மூலிகைகளை உங்கள் தேநீரில் சேர்த்து அருந்தலாம். தினசரி சமையலில் இஞ்சி, ஏலக்காய், பூண்டு போன்றவற்றை சேர்ப்பதும் சிறந்த நோய் எதிர்ப்பு சக்திக்கு வழிவகுக்கும்.