புத்துணர்ச்சியூட்டும் சுவை மற்றும் அதிக நீர்சத்து உள்ள காரணத்திற்காக வெயில் நேரத்தில் வெள்ளரிகள் மிக பிரபலமாக உள்ளன. வெள்ளரிகள் பூக்களிலிருந்து வளரும் மற்றும் விதைகளைக் கொண்டிருப்பதால் ஒரு பழமாகும். ஆனால் இதன் சமையல் பயன்பாடு வெள்ளரியை ஒரு காய்கறி லிஸ்ட்டில் சேர்த்துள்ளது. வெள்ளரிகள் பூஜ்ஜிய கொழுப்பு மற்றும் மிக குறைந்த கலோரிகளை கொண்டுள்ளது. எடை இழப்பிற்கு உதவும் அற்புத காய்கறிகளில் ஒன்றாகும். உலகம் முழுவதும் சுமார் 8 வகையான வெள்ளரிகள் உள்ளன. அவற்றை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்..
வெள்ளரி வகைகள் : வெள்ளரிகள் பொதுவாக அவற்றின் பயன்பாட்டின் அடிப்படையில் ஸ்லைசிங் செய்ய கூடிய வெள்ளரிகள் மற்றும் ஊறுகாய்க்காக பயன்படும் வெள்ளரிகள் (Pickling Cucumbers) என 2 வகைகளாக பிரிக்கப்படுகின்றன. ஊறுகாய் வகைகளில் இவை கிர்பி, கெர்கின்ஸ் மற்றும் லெமன் என்றும் அழைக்கப்படுகின்றன. ஸ்லைசிங் வகை என்பது ஜாப்னிஸ் , அமெரிக்கன், பெர்சியன், அர்மேனியன் மற்றும் இங்லீஷ் போன்ற வெள்ளரிகளை குறிக்கிறது. இவ்வகை வெள்ளரிகள் சொந்த குணாதிசயங்களைக் கொண்டுள்ளன மற்றும் ஒன்றுக்கொன்று மிகவும் வித்தியாச சுவை கொண்டவை.
பிக்லிங்க் வெள்ளரிகள் (Pickling Cucumbers): இந்த வெள்ளரிகள் ஒழுங்கற்ற வடிவம் மற்றும் 3-4 இன்ச் அளவு கொண்டு சிறியதாக இருக்கும். பெரும்பாலும் இவை bumpy skin அதாவது புள்ளி புள்ளியான தோலை கொண்டிருக்கும். இது மஞ்சள் அல்லது வெளிர் பச்சை நிறம் கொண்டிருக்கும். இந்தியாவில் கிடைக்கும் வெள்ளரிகளை ஒப்பிடும் போது இவை மிகவும் திக்காக இருக்கும் மற்றும் காஸ்பாச்சோ போன்ற மெக்சிகன் உணவுகளை தயாரிக்கப் பயன்படுகிறது.
ஸ்லைசிங் வெள்ளரிகள் (Slicing Cucumbers): இந்த வகை வெள்ளரிகள் பெரும்பாலும் ஸ்லைசர்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை சாலட்ஸ், பர்கர்ஸ் மற்றும் சாண்ட்விச்கஸ் போன்ற ஸ்னாக்ஸ்களில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வெள்ளரிகள் ஒரு மென்மையான சதையை கொண்டுள்ளன. இவை சராசரியாக 7-8 இன்ச் உயரம் கொண்டவை மற்றும் ஒரே மாதிரியான கரும் பச்சை நிற தோலை கொண்டிருக்கும்.
கெர்கின்ஸ் (Gherkins): அளவில் சிறியதாக மற்றும் தட்டையாக காணப்படும் இவ்வகை வெள்ளரிகள் பிரெஞ்சு உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இவை பெரும்பாலும் சைட் டிஷ்ஷாகவே விரும்பப்படுகின்றன. சுமார் 2-3 இன்ச் நீளம் மற்றும் வெளிர் பச்சை மற்று சொரசொரப்பான தோலை கொண்டிருக்கும். ஊறுகாய்களுக்கு இவை சிறந்த தேர்வாகும். மேலும் இவை பல காக்டெய்ல்களில் அலங்காரமாக பயன்படுத்தப்படுகின்றன.
கிர்பி (Kirby): இந்த வகை வெள்ளரியும் குட்டையாக இருக்கும். மெல்லிய மற்றும் சொரசொரப்பான தோலுடன் மஞ்சள் முதல் டார்க் க்ரீன் நிறத்தில் இருக்கும். இந்த வெள்ளரிகள் மிகவும் மிருதுவாகவும்,மைல்டான சுவையுடன் இருக்கும். இவற்றின் அமைப்பு மற்றும் சுவை காரணமாக இந்த வெள்ளரிகள் பெரும்பாலும் காஸ்பாச்சோ மற்றும் சாலட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன.
லெமன் (Lemon): இவ்வகை வேலரிகள் பார்ப்பதற்கு எலுமிச்சை போல தோற்றத்தை கொண்டிருப்பதால் லெமன் என்று குறிப்பிடப்படுகின்றன. இவை முழுமையாக பழுத்தவுடன் இனிப்பாக, மிருதுவாக இருக்கும். குறைந்த விதைகள் மற்றும் கசப்பு இல்லாததால் இவை பிரபலமான வெள்ளரிகளில் ஒன்றாகும். இவை ஊறுகாயை தவிர, பெரும்பாலும் ஸ்மூத்திஸ் மற்றும் காக்டெய்ல்களில் இந்த வெள்ளரிகள் பயன்படுத்தப்படுகின்றன.
அர்மேனியன் (Armenian): ஸ்நேக் மெலன் அல்லது ஸ்நேக் குக்கூம்பர் என்றும் அழைக்கப்படும் இவை முறுக்கப்பட்ட அமைப்புடன் சற்று நீளமாக காணப்படும். இந்த வெள்ளரிகள் கரும் பச்சை நிறம் மற்றும் மெல்லிய தோலை கொண்டுள்ளது. இந்த வெள்ளரியின் மேலே முழுவதும் வெளிர் பச்சை நிற கோடுகள் காணப்படும். இவ்வகை வெள்ளரிகள் ஒரு மிதமான சுவை கொண்டது. பெரும்பாலும் சாலட்கள் மற்றும் சாண்ட்விச்களில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
இங்லீஷ் (English): இவை விதை இல்லாத வெள்ளரிகள் என்று அழைக்கப்படுகின்றன. இங்லீஷ் வெள்ளரிகள் பெரும்பாலும் 12-24 இன்ச் உயரம் வரை வளரும் மற்றும் கரும் பச்சை தோல் கொண்டவை. இந்த வெள்ளரிகளின் சிறந்த குணங்களில் ஒன்று, லேசான மற்றும் இனிமையான சுவை கொண்டது. எனவே இது martini மற்றும் sake போன்ற பானங்களுக்கு ஏற்றது.
அமெரிக்கன் (American): நேரான மற்றும் அடர் பச்சை நிற வெள்ளரிகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அமெரிக்கன் வெள்ளரி இப்படி தான் இருக்கும். இந்த வெள்ளரி மிகுந்த நீர்ச்சத்து கொண்டது என்பதால் ஜூஸியாக இருக்கும். இதன் ஈரப்பதத்தை தக்க வைக்க இதன் மேல் வேக்ஸ் செய்வார்கள். இதனை சாஸ் அலல்து சாலட்களில் பயன்படுத்தலாம்.