ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » பழங்கள் பளபளக்க பூசப்படும் மெழுகுப்பூச்சு என்னென்ன பாதிப்புகளை உண்டாக்கும்..? நன்மைகளும் உள்ளதா..?

பழங்கள் பளபளக்க பூசப்படும் மெழுகுப்பூச்சு என்னென்ன பாதிப்புகளை உண்டாக்கும்..? நன்மைகளும் உள்ளதா..?

மெழுகுப்பூச்சி பளபளப்பிற்கு மட்டுமன்றி அதன் காலத்தை நீட்டிக்கவும் உதவுகிறது. பழங்களில் இருக்கும் இயற்கை மெழுகு தண்ணீரில் நனைத்தவுடன் போய்விடும். இதனால் அதன் ஈரப்பதம் குறைந்து கெட்டுப்போய்விடும். எனவே அதன் ஈரப்பதத்தை தக்க வைக்கவும் மெழுகு பூசுகின்றனர்.

 • 14

  பழங்கள் பளபளக்க பூசப்படும் மெழுகுப்பூச்சு என்னென்ன பாதிப்புகளை உண்டாக்கும்..? நன்மைகளும் உள்ளதா..?

  ஆரோக்கியமான உடலுக்கு காய்கறி , பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் அதிலும் கலப்படம், இரசாயனம் என்று இருந்தால் ஆரோக்கியத்தை வேறு எதில் தேடி அலைவது..? இந்த கேள்வில் பலரிடம் எழுந்திருக்கலாம். குறிப்பாக காய்கறி , பழங்களில் கண்ணிற்குத் தெரிந்தே பூசப்படும் மெழுப்பூச்சிகளை பார்க்கும்போது தெரிந்தே அதை வாங்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். ஏனெனில் அதையும் விட்டால் வேறு வழியில்லை.

  MORE
  GALLERIES

 • 24

  பழங்கள் பளபளக்க பூசப்படும் மெழுகுப்பூச்சு என்னென்ன பாதிப்புகளை உண்டாக்கும்..? நன்மைகளும் உள்ளதா..?

  இந்த மெழுகுப்பூச்சி பழங்கள் பளபளப்பாக இருப்பதற்காக பூசப்படுகிறது. இதனால் பார்ப்பவர்களுக்கும் ஃபிரெஷாக இருக்கிறதே என பார்த்ததும் வாங்கிவிடுவார்கள். இந்த மெழுகுப்பூச்சி பளபளப்பிற்கு மட்டுமன்றி அதன் காலத்தை நீட்டிக்கவும் உதவுகிறது. பழங்களில் இருக்கும் இயற்கை மெழுகு தண்ணீரில் நனைத்தவுடன் போய்விடும். இதனால் அதன் ஈரப்பதம் குறைந்து கெட்டுப்போய்விடும். எனவே அதன் ஈரப்பதத்தை தக்க வைக்கவும் மெழுகு பூசுகின்றனர். அது பழத்தை நீண்ட நாட்கள் பாதுகாத்தாலும் நம் உடலுக்கு அவை ஆரோக்கியக் கேடு. அவை பல வகைகளில் நமக்கு பாதிப்பை உண்டாக்குகின்றன. அவை என்னென்ன பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 34

  பழங்கள் பளபளக்க பூசப்படும் மெழுகுப்பூச்சு என்னென்ன பாதிப்புகளை உண்டாக்கும்..? நன்மைகளும் உள்ளதா..?

  உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை விதிமுறைகளின்படி, இயற்கை மெழுகுகளான கேண்டிலிலா மெழுகு, தேன் மெழுகு மற்றும் கார்னூபா மெழுகு மட்டுமே பயன்படுத்த வேண்டும். FSSAI வும் இயற்கையான மெழுகுகளை மட்டுமே அனுமதிக்கிறது. இந்த மெழுகுப் பூச்சுகள் உடலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.

  MORE
  GALLERIES

 • 44

  பழங்கள் பளபளக்க பூசப்படும் மெழுகுப்பூச்சு என்னென்ன பாதிப்புகளை உண்டாக்கும்..? நன்மைகளும் உள்ளதா..?

  ஆனால் பெரும்பாலும் பெட்ரோலியம் மற்றும் மார்போலின் போன்ற மெழுகுதான் பூசப்படுகிறது. இவை கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பை உண்டாக்குகின்றன. அப்படி FSSAI ஆல் அனுமதிக்கப்படாத மெழுகுப் பூச்சுகளை பயன்படுத்துவதால் வயிறுப் பிரச்சனை, வாந்தி, குமட்டல் என உண்டாக்குகின்றன. சில சமயங்களில் ஃபுட் பாய்சன் கூட ஆகலாம். எனவே ஆரோக்கியமான பழங்களை வாங்க வேண்டுமெனில் FSSAI அங்கீகரிக்கப்பட்ட பழங்களாக பார்த்து வாங்குங்கள்.

  MORE
  GALLERIES