முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » இந்த 7 உணவுகளை தினசரி சாப்பாட்டுடன் சேர்த்துக் கொண்டால் கால்சியம் குறைபாடே வராது..!

இந்த 7 உணவுகளை தினசரி சாப்பாட்டுடன் சேர்த்துக் கொண்டால் கால்சியம் குறைபாடே வராது..!

Calcium Rich Food : ப்ரக்கோலி, கீரை, டர்னிப்ஸ், முட்டைக்கோஸ் ஆகியவை கால்சியம் நிறைந்த சில காய்கறிகள். இவற்றை நீங்கள் உணவில் சேர்ப்பதன் மூலம் தினசரி தேவைக்கான கால்சியத்தைப் பெறலாம்.

 • 19

  இந்த 7 உணவுகளை தினசரி சாப்பாட்டுடன் சேர்த்துக் கொண்டால் கால்சியம் குறைபாடே வராது..!

  உடலின் நரம்பு மண்டலம், திசுக்களின் இணைப்பு, இதயம் மற்றும் செரிமான அமைப்பு போன்ற அனைத்து முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாடுகளுக்கும் கால்சியம் முக்கியம். அதுமட்டும் அல்ல, பற்கள் மற்றும் எலும்புகளின் வலிமையை உறுதிப்படுத்தவும் கால்சியம் இன்றியமையாதது ஆகும். மூளும், இரத்தம் உறைதல், தசைச் சுருக்கம், ஹார்மோன்களின் சமிக்ஞை மற்றும் நரம்புகளில் சமிக்ஞை பரிமாற்றம் போன்ற செயல்களுக்கும் கால்சியம் மிகவும் முக்கியம்.

  MORE
  GALLERIES

 • 29

  இந்த 7 உணவுகளை தினசரி சாப்பாட்டுடன் சேர்த்துக் கொண்டால் கால்சியம் குறைபாடே வராது..!

  உடலுக்கு போதுமான கால்சியம் சத்துகள் கிடைக்கவும், எலும்புகள் பலம் அடையவும் பால் அருந்த வேண்டும் என சிறு வயதில் இருந்து அம்மா சொல்லி கேள்விப்பட்டிருப்போம். அதற்கு எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லை. பால் சார்ந்த ஒவ்வொரு உணவுப் பொருளிலும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் ஏராளமாக நிரம்பியுள்ளது. ஆனால், பாலில் மட்டும் தான் கால்சியம் இருக்கிறதா என்றால், அது தான் இல்லை. 250 மில்லி கொண்ட ஒரு கிளாஸ் பாலில் 300 மி.கி அளவு கால்சியம் இருக்கிறது. நம் உடலுக்குத் தேவையான கால்சியம் அளவில், வெறும் 25 சதவீதத்தை மட்டுமே பால் நிரப்பும். ஒருவருக்கு நாளொன்றுக்கு 100 மி.கி. அளவுக்கு கால்சியம் தேவைப்படும்.

  MORE
  GALLERIES

 • 39

  இந்த 7 உணவுகளை தினசரி சாப்பாட்டுடன் சேர்த்துக் கொண்டால் கால்சியம் குறைபாடே வராது..!

  டோஃபூ (Tofu) : இதுவும் பன்னீரைப் போன்ற உணவுப் பொருள் ஆகும். சுமார் 200 கிராம் அளவுக்கு டோஃபூ எடுத்துக் கொண்டால் கூட, அதில் இருந்து 700 மி.கி. அளவுக்கு கால்சியம் கிடைக்கும். காட்டேஜ் சீஸ்-க்கு பதிலாக இதை எடுத்துக் கொள்ளலாம். நேரடியாக அல்லது பிற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.

  MORE
  GALLERIES

 • 49

  இந்த 7 உணவுகளை தினசரி சாப்பாட்டுடன் சேர்த்துக் கொண்டால் கால்சியம் குறைபாடே வராது..!

  பாதாம் பருப்பு : இதை நேரடியாகவும், ஊற வைத்தும் சாப்பிடலாம். ஒரு கப் நிறைய பாதாம் பருப்புகளை சாப்பிட்டீர்கள் என்றால் 300 மி.கி. அளவுக்கு கால்சியம் சத்து கிடைக்கும். பாதாம் பால் சாப்பிடலாம். இதை சாலட் மற்றும் பிற உணவுகளுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

  MORE
  GALLERIES

 • 59

  இந்த 7 உணவுகளை தினசரி சாப்பாட்டுடன் சேர்த்துக் கொண்டால் கால்சியம் குறைபாடே வராது..!

  புளிக்காத தயிர் : புளிக்காத தயிரை ஒரு கப் அளவுக்கு எடுத்துக் கொண்டால் சுமார் 300 முதல் 350 மி.கி. வரையிலான கால்சியம் கிடைக்கும். தினசரி காலை உணவு, மதிய உணவு, சில சமயங்களில் இரவில் கூட இதை எடுத்துக் கொள்ளலாம். நறுக்கிய பழங்கள் மற்றும் நட்ஸ் உடன் சேர்த்தும் இதை சாப்பிடலாம்.

  MORE
  GALLERIES

 • 69

  இந்த 7 உணவுகளை தினசரி சாப்பாட்டுடன் சேர்த்துக் கொண்டால் கால்சியம் குறைபாடே வராது..!

  எள்ளு விதைகள் : வெறும் 4 ஸ்பூன் அளவுக்கு எள்ளு விதைகள் உட்கொண்டால் அதில் இருந்து 350 மி.கி. அளவுக்கு கால்சியம் சத்து நமக்கு கிடைக்கிறது. சாலட் தயாரிக்கும் போது, அதைன் மேற்பரப்பில் எள்ளு விதைகளை சேர்த்துக் கொள்ளலாம். வறுக்கப்பட்ட எள்ளு விதைகளை லட்டு மற்றும் அல்வா போன்றவற்றில் சேர்த்துக் கொள்ளலாம். எள்ளு, வெள்ளம் சேர்க்கப்பட்ட உருண்டை மிக சுவையானதாக இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 79

  இந்த 7 உணவுகளை தினசரி சாப்பாட்டுடன் சேர்த்துக் கொண்டால் கால்சியம் குறைபாடே வராது..!

  சுண்டல் : சாம்பாரில் இதை சேர்த்துக் கொள்ளலாம். அவித்த சுண்டலை ஸ்நாக்ஸ் போல சாப்பிடலாம். ஒரு கப் அளவிலான சுண்டலில் 420 மி.கி. அளவிலான கால்சியம் சத்தை நாம் பெற முடியும். காய்கறி கூட்டுகளுடன் இதை சேர்த்துக் கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 89

  இந்த 7 உணவுகளை தினசரி சாப்பாட்டுடன் சேர்த்துக் கொண்டால் கால்சியம் குறைபாடே வராது..!

  சப்ஜா விதைகள் : 4 டேபிள் ஸ்பூன் சப்ஜா விதைகளில் நமக்கு 350 மி.கி. கால்சியம் கிடைக்கும். இதனை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, பிறகு தண்ணீர் அல்லது ஜூஸில் கலந்து குடிக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 99

  இந்த 7 உணவுகளை தினசரி சாப்பாட்டுடன் சேர்த்துக் கொண்டால் கால்சியம் குறைபாடே வராது..!

  கேழ்வரகு : பாரம்பரிய சிறுதானிய உணவான கேழ்வரகை 100 கிராம் அளவுக்கு எடுத்துக் கொண்டால், அதில் 345 மி.கி. அளவுக்கு கால்சியம் நமக்கு கிடைக்கும். வாரத்தில் 4 நாட்களுக்கு நீங்கள் இதை எடுத்துக் கொள்ளலாம்.

  MORE
  GALLERIES