

காய்கறிகள் ஆரோக்கியமான வாழ்க்கைகான ஊட்டச்சத்து. எனவேதான் காய்கறிகள் நிறைந்த உணவு அவசியம் என்கின்றனர். சராசரியாக ஒரு நாளைக்கு பெண்கள் 2 முதல் 2.5 கப் காய்கறிகளை சாப்பிட வேண்டும். ஆண்கள் எனில் 2.5 முதல் 3 கப் காய்கறிகளை சாப்பிட வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் அவ்வாறு சாப்பிடவில்லை அல்லது மிகவும் குறைவான காய்கறிகளை சாப்பிடுகிறீர்கள் இந்த அறிகுறிகளை சந்திப்பீர்கள்.


சோர்வு : காய்கறிகள் அல்லாத திடமான, கொழுப்பு நிறைந்த , அதிக நேர ம் செரிமானிக்கக் கூடிய உணவுகளை உட்கொள்கிறீர்கள் எனில் அவற்றை செரிமானிக்க நீண்ட நேரம் வேலை செய்யும். இதனால் உங்கள் உடல் விரைவில் களைப்படைந்து சோர்வான உணர்வைத் தரும்.


பார்வை குறைபாடு : கேரட், பச்சைக் காய்கறிகள் கீரை வகைகள் போன்றவற்றை அதிகம் உட்கொள்ளாவிட்டால் வைட்டமின் ஏ குறைபாடு உண்டாகும். இதனால் பார்வைக் குறைபாடு ஏற்படும்.


உடல் எடை அதிகரிக்கும் : காய்கறிகள் அல்லாத இறைச்சி, பதப்படுத்தப்பட்ட உணவு, சுத்தீகரிக்கப்பட்ட உணவு, கொழுப்பு நிறைந்த உணவு என சாப்பிடுகிறீர்கள் எனில் செரிமான ஆற்றல் குறைவதால் கொழுப்பு சேரும். அவை உடல் எடை அதிகரிக்க காரணமாக இருக்கும். இந்த எடையைக் குறைப்பதும் மிகவும் கடினம்.


மன அழுத்தம் அதிகரிக்கும் : காய்கறிகளை குறைவாக உட்கொள்வதால் மெக்னீசியம் குறைபாடு உண்டாகும். இதனால் மன அழுத்ததிற்கான கார்டிசோல் ஹார்மோன்கள் சுரக்கத் துவங்கும். இதனால் மன அழுத்தம் அதிகரிக்கும்.


மலச்சிக்கல் : பொதுவாகவே காய்கறிகளை தவிர்த்தால் நார்ச்சத்து குறைந்துவிடும். நார்ச்சத்து இல்லை எனில் செரிமானம் சீராக இருக்காது. எனவே நார்ச்சத்து குறைபாடு காரணமாக மலச்சிக்கல் உண்டாகும்.எனவே நார்ச்சத்தை அதிகரித்து, அதிக தண்ணீர் குடித்தாலே இந்த பிரச்னையை தவிர்க்கலாம்.


தசை பிடிப்பு : தசைகளின் ஆரோக்கியத்திற்கு பொட்டாசியம் சத்து அவசியம். எனவே உங்கள் இரத்ததில் பொட்டாசியம் அளவு மிகவும் குறைவாக இருந்தால் தசைகள் ஆங்காங்கே பிடித்துக்கொள்ளும். பொட்டாசியம் சத்துக்கு போதுமான காய்கறிகளை சாப்பிடுவது அவசியம்.


சருமம் பொலிவி இழத்தல் : உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து, ஆண்டி ஆக்ஸிடண்ட், சருமத்தில் உள்ள நச்சுகளை சுத்திகரிக்கும் ஆற்றல் காய்கறிகளுக்குத்தான் உண்டு, எனவே அதைக் குறைப்பதால் இந்த எந்த வேலையும் நடக்காது. எனவே சருமம் பொலிவிழந்து விரைவில் இளமைத் தோற்றத்தை இழப்பீர்கள்.


நிறைவான உணவாக இருக்காது : காய்கறிகள் இல்லாமல் சாப்பிடும் உணவு ஒருபோதும் வயிறு நிறைவைத் தராது. முழுமையாக சாப்பிட்ட திருப்தி கிடைக்காது. சத்து குறைந்த, கொழுப்பு குறைந்த உணவாக இருப்பின் விரைவில் பசிக்கத் துவங்கும்.


உடலுறவில் ஈடுபாடின்மை : ஹார்வர்ட் ஹெல்த் வெளியிட்டுள்ள ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டதில் நாம் சாப்பிடும் உணவுக்கும் உடலுறவு ஈடுபாடிற்கும் தொடர்பு உண்டு என்கின்றனர். அப்படி காய்கறிகளை குறைத்து சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தின்மையால் உடலுறவில் ஈடுபாடு குறையுமாம். அதேபோல் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட முடியாமல் விரைவில் ஆற்றலை இழப்பீர்கள் என்கிறது.