முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » ஈறுகளை வலுப்படுத்தும் சூயிங்கம்.. இத்தனை நன்மைகள் இருக்கா..?

ஈறுகளை வலுப்படுத்தும் சூயிங்கம்.. இத்தனை நன்மைகள் இருக்கா..?

சூயிங்கம் சாப்பிடுவது வாயை புத்துணர்ச்சி அடைய செய்வதோடு, இன்னும் ஏராளமான நன்மைகளை வழங்குகிறது என்பது பலருக்கு தெரியாது. சூயிங்கம் சாப்பிடுவது உமிழ் நீர் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமாக உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கிறது.

  • 19

    ஈறுகளை வலுப்படுத்தும் சூயிங்கம்.. இத்தனை நன்மைகள் இருக்கா..?

    சூயிங்கம் சாப்பிடுவது உமிழ் நீர் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமாகவும், செரிமான அமைப்பை தூண்டுவதன் மூலமாகவும் செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது வயிற்றில் உள்ள அமிலத்தை சமநிலைப்படுத்தி நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து ஒருவரை விடுவிக்கிறது.

    MORE
    GALLERIES

  • 29

    ஈறுகளை வலுப்படுத்தும் சூயிங்கம்.. இத்தனை நன்மைகள் இருக்கா..?

    ஒரு சிலருக்கு சூயிங்கம் சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். எப்போது பார்த்தாலும் வாயில் சூயிங்கம் போட்டு மென்று கொண்டே இருப்பார்கள். சூயிங்கம் சாப்பிடுவது வாயை புத்துணர்ச்சி அடைய செய்வதோடு, இன்னும் ஏராளமான நன்மைகளை வழங்குகிறது என்பது பலருக்கு தெரியாது. சூயிங்கம் சாப்பிடுவது உமிழ் நீர் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமாக உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கிறது. சூயிங்கத்தில் காணப்படும் சர்க்கரை காரணமாக ஒரு சிலர் அதை சாப்பிடுவதை தவிர்த்து விடுகின்றனர். எனினும் சர்க்கரை இல்லாத சூயிங்கம் கூட கடைகளில் கிடைக்கிறது. இந்த பதிவில் சர்க்கரையற்ற சூயிங்கம் சாப்பிடுவதால் பற்கள் மற்றும் ஈறுகளுக்கு கிடைக்கும் சில நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 39

    ஈறுகளை வலுப்படுத்தும் சூயிங்கம்.. இத்தனை நன்மைகள் இருக்கா..?

    உமிழ் நீர் உற்பத்தியை அதிகரிக்கிறது : நீங்கள் சூயிங்கம் மெல்லும் பொழுது அதிக அளவிலான உமிழ்நீர் உற்பத்தி ஆகிறது. வாயில் காணப்படும் கெட்ட பாக்டீரியாக்களால் வெளியிடப்படும் ஆபத்தான அமிலங்களை சமநிலைப்படுத்த இந்த உமிழ்நீர் உதவுகிறது. மேலும் வாயில் உள்ள உணவு துகள்களை நீக்கவும் இது உதவுகிறது. அதிகரித்த உமிழ்நீர் உற்பத்தி பற்கள் மற்றும் ஈறு தொடர்பான நோய்களிலிருந்து நம்மை விலக்கி வைக்கிறது.

    MORE
    GALLERIES

  • 49

    ஈறுகளை வலுப்படுத்தும் சூயிங்கம்.. இத்தனை நன்மைகள் இருக்கா..?

    சுவாசப் புத்துணர்ச்சி அளிக்கிறது : சர்க்கரை இல்லாத சுவிங்கம் மெல்லுவது வாயில் உள்ள உணவு துகள்கள் அல்லது பாக்டீரியாக்களை நீக்குவதன் மூலமாக சுவாசத்தை புத்துணர்ச்சி அடைய செய்கிறது. புகைப்பிடித்தல் அல்லது வலிமையான வாசனை கொண்ட உணவுகளை சாப்பிடும் பொழுது வாயில் ஏற்படும் வாசனையிலிருந்து விடுபட சூயிங்கம் உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 59

    ஈறுகளை வலுப்படுத்தும் சூயிங்கம்.. இத்தனை நன்மைகள் இருக்கா..?

    பிளேக் உருவாகும் அபாயத்தை குறைக்கிறது : பிளேக் என்பது பற்கள் மற்றும் ஈறுகளின் மீது படியும் ஒரு ஒட்டும் தன்மை கொண்ட பாக்டீரியாக்கள் ஆகும். இதனை கவனிக்காமல் விட்டுவிட்டால் இதனால் பற்சிதைவு மற்றும் ஈறுகள் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம். சுவிங்கம் மெல்லுவது உமிழ்நீர் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமாக வாயில் தங்கி இருக்கும் உணவுத் துகள்கள் மற்றும் பாக்டீரியாக்களை நீக்குகிறது.

    MORE
    GALLERIES

  • 69

    ஈறுகளை வலுப்படுத்தும் சூயிங்கம்.. இத்தனை நன்மைகள் இருக்கா..?

    பற்களின் எனாமலுக்கு வலிமை சேர்கிறது : ஒரு சில சர்க்கரை இல்லாத சூயிங்கத்தில் காணப்படும் சைலிட்டால் என்ற இயற்கை இனிப்பானானது பற்களுக்கு ஏராளமான நன்மைகளை வழங்க கூடியது. சைலிட்டால் பற்களின் எனாமலுக்கு வலிமை சேர்த்து பற்சிதைவு ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

    MORE
    GALLERIES

  • 79

    ஈறுகளை வலுப்படுத்தும் சூயிங்கம்.. இத்தனை நன்மைகள் இருக்கா..?

    செரிமானத்தை மேம்படுத்துகிறது : சூயிங்கம் மெல்லுவதால் அதிகப்படியான உமிழ்நீர் உற்பத்தியாகிறது. மேலும் செரிமான அமைப்பானது தூண்டப்படுகிறது. இதன் காரணமாக செரிமான ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது. அதோடு நெஞ்செரிச்சல் மற்றும் ஆசிட் ரிஃப்ளக்ஸ் போன்ற அறிகுறிகளில் இருந்தும் நம்மை பாதுகாக்கிறது.

    MORE
    GALLERIES

  • 89

    ஈறுகளை வலுப்படுத்தும் சூயிங்கம்.. இத்தனை நன்மைகள் இருக்கா..?

    மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கிறது : மனதிற்கு ஒரு அமைதியான விளைவை அளிப்பதன் மூலமாக மன அழுத்தம் மற்றும் பதட்டத்தில் இருந்து ஒருவரை விலக்கி வைக்கிறது. இதனால் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ஆகவே ஒருவரின் மனநிலை மேம்படுகிறது. இதன் காரணமாக மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறைகிறது.

    MORE
    GALLERIES

  • 99

    ஈறுகளை வலுப்படுத்தும் சூயிங்கம்.. இத்தனை நன்மைகள் இருக்கா..?

    உடனடி ஆற்றல் ஊக்கியமாக செயல்படுகிறது : சூயிங்கம் மெல்லும் பொழுது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது மற்றும் நரம்பு அமைப்புகள் தூண்டப்படுகிறது. இதன் காரணமாக உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கிறது. அதோடு இது கவனம் செலுத்துதலை மேம்படுத்த உதவுவதால் மாணவர்கள் அல்லது உடனடி கவனம் தேவைப்படுவோருக்கு சூயிங்கம் மெல்லுதல் உதவக்கூடும்.

    MORE
    GALLERIES