சில சூப்பர் ஃபுட்ஸ்கள் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைப்பதாக கூறுகிறர்கள் நிபுணர்கள். ஆரோக்கியமான உணவுகளாக அறியப்படும் சூப்பர் ஃபுட்ஸ்களை வழக்கமான அடிப்படையில் டயட்டில் சேர்த்து கொள்வதன் மூலம் காலப்போக்கில் புற்றுநோய் வருவதற்கான அபாயத்தைக் குறைக்கலாம் என பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன. புற்றுநோயை தடுக்க உதவும் இயற்கை சேர்மங்களை (Natural Compounds) கொண்ட நிபுணர்கள் பரிந்துரைக்கும் சூப்பர் ஃபுட்ஸ்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃபிளவர் மற்றும் காலே :
ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃபிளவர் மற்றும் காலே உள்ளிட்ட இந்த சூப்பர் ஃபுட்ஸ் என குறிப்பிடப்படும் காய்கள் ஐசோதியோசயனேட்ஸ் (isothiocyanates) எனப்படும் எலமென்ட்ஸ்களை கொண்டுள்ளன. இவற்றில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை செல் டேமேஜ் மற்றும் புற்றுநோயை தடுக்கின்றன. ப்ரோக்கோலியில் ஈஸ்ட்ரோஜன் வளர்சிதை மாற்றத்தை மாற்றவும், மார்பகக் கட்டியின் உயிரணு வளர்ச்சியை அடக்கவும் உதவும் இந்தோல்-3-கார்பினோல் எனப்படும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் சேர்மங்கள் உள்ளன. மேலும் ப்ரோக்கோலியில் இருக்கும் sulforaphane என்ற சேர்மம் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் வகையில் நமது உடலில் Protective Enzymes-களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
ஆப்பிள் : ஆப்பிள்களில் டயட்ரி ஃபைபர் பெக்டின் அதிகம் உள்ளது. இவை வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க, இதய ஆரோக்கியத்தை பராமரிக்க மற்றும் ரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த உதவுகிறது. அதே போல ஆப்பிள்களில் இருக்கும் பாலிஃபீனால்ஸ் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. புற்றுநோய் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் சில ப்ராசஸ்களை பாலிபினால்ஸ் மாற்றியமைக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.
மஞ்சள் : மஞ்சளில் முக்கியமாக காணப்படும் மூலப்பொருளான குர்குமின் (Curcumin) ஒரு சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் சிறந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டதாகும். மஞ்சளில் இருக்கும் குர்குமின் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடுவது உட்பட இன்னும் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தக்காளி : தக்காளியில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது தக்காளியில் காணப்படும் Glycoalkaloids. இவை தக்காளியில் இயற்கையாக காணப்படும் சேர்மங்களாகும். தக்காளியில் புற்றுநோயை எதிர்க்கும் லைகோபீன் (lycopene) உள்ளது. பல ஆய்வுகள் லைகோபீனுக்கும் புற்றுநோய் எதிர்ப்பு நடவடிக்கைக்கும் இடையே உள்ள தொடர்பை நிரூபித்துள்ளன. இரைப்பை புற்றுநோய் அபாயத்தை குறைக்க மற்றும் புரோஸ்டேட், மார்பக மற்றும் நுரையீரலில் புற்றுநோய் அபாயத்தை தடுக்க இது உதவுவதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.