கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க இரும்புச்சத்து அவசியம். எனவே, தான் மருத்துவர்கள் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள் என பரிந்துரைக்கிறார்கள். ஏனென்றால், கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் அளவு சீராக இருந்தால் தான் குழந்தைக்கு தேவையான இரத்த ஓட்டம் சீராக்கி, குழந்தையின் வளர்ச்சி அதிகரிக்கும். கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
பயறு மற்றும் பீன்ஸ் வகைகள் : பீன்ஸ் கொட்டை வகைகள், பயறு வகைகள், மூக்கடலை, பட்டாணி வகைகள், சோயா போன்றவை இரும்புச்சத்து நிறைந்தவை. இதில் ஒரு கப் வீதம் எடுத்துக்கொண்டாலே 6.6 மி.கி அளவுக்கு இரும்புச் சத்தை தினம் பெறலாம். மேலும் அதில் ஃபோலேட், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன.