முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » கோடை சீசனில் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணின் டயட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய உணவுகள்.!

கோடை சீசனில் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணின் டயட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய உணவுகள்.!

ஒரு கர்ப்பிணி தன் உடல்நலத்தோடு வயிற்றில் இருக்கும் பிறக்காத குழந்தையின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்த வேண்டும்.

  • 110

    கோடை சீசனில் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணின் டயட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய உணவுகள்.!

    பிற சீசன்களை விட கோடை காலம் கர்ப்பிணிப் பெண்களுக்கு சவாலானதாக இருக்கும். கோடை நேரத்தில் நிலவும் அதிக வெப்பம் கர்ப்பிணிகளுக்கு டிஹைட் மற்றும் பிற உடல்நல பிரச்சனைகளை எளிதாக ஏற்படுத்தி விடும்.

    MORE
    GALLERIES

  • 210

    கோடை சீசனில் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணின் டயட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய உணவுகள்.!

    எனவே வயிற்றில் குழந்தையுடன் இருக்கும் பெண்கள் கோடை காலத்தில் ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுவது மிக முக்கியம். ஒரு கர்ப்பிணி தன் உடல்நலத்தோடு வயிற்றில் இருக்கும் பிறக்காத குழந்தையின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்த வேண்டும். உணவு மற்றும் ஊட்டச்சத்து கர்ப்பிணிகளின் உடல்நலனில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    MORE
    GALLERIES

  • 310

    கோடை சீசனில் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணின் டயட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய உணவுகள்.!

    கர்ப்பிணிகள் தங்களது கர்ப்ப காலத்தில் கோடை சீசனை சந்திக்க நேர்ந்தால் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்று குறிப்பிடும் ஊட்டச்சத்து நிபுணர் ரோஹித் ஷெலட்கர், இந்த கோடையில் கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமாக டயட்டில் சேர்க்க வேண்டிய உணவுகளின் பட்டியலையும் பகிர்ந்துள்ளார். கோடை சீசனில் கர்ப்பிணி பெண்களின் டயட்டில் இருக்க வேண்டிய உணவுகள்..

    MORE
    GALLERIES

  • 410

    கோடை சீசனில் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணின் டயட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய உணவுகள்.!

    முட்டைகள் : பெண்களின் கர்ப்ப காலத்தில் அவர்கள் வயிற்றில் இருக்கும் கருவின் வளர்ச்சி, நோயெதிர்ப்பு மண்டலத்திற்கான ஆன்டிபாடிகளின் உற்பத்தி உள்ளிட்ட பல முக்கியமானவற்றுக்கு புரோட்டீன் அவசியம். கூடுதலாக புரோட்டீன் வயிற்றில் இருக்கும் கருவினுடைய குழந்தையின் எலும்புக்கூடு மற்றும் தசை வளர்ச்சியை ஆதரிப்பதோடு பிறக்காத குழந்தையின் எலும்புகளை வலுப்படுத்துகின்றன. எனவே புரோட்டீனின் அற்புத ஆதாரமாக இருக்கும் முட்டைகளில் கோலின், லுடீன், வைட்டமின்கள் பி12 மற்றும் டி, ரிபோஃப்ளேவின் மற்றும் ஃபோலேட் உள்ளிட்ட சத்துக்களும் ஏராளமாக உள்ளன.

    MORE
    GALLERIES

  • 510

    கோடை சீசனில் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணின் டயட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய உணவுகள்.!

    இலை காய்கறிகள் : வைட்டமின்கள் சி, ஈ மற்றும் கே நிறைந்துள்ளதால் கர்ப்பிணிப் பெண்கள் பச்சை இலை காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர் ரோஹித் பரிந்துரைக்கிறார். பச்சை காய்கறிகளில் ஃபைபர் சத்துக்கள் ஏராளம் எனவே இது கர்ப்ப காலத்தில் மலச்சிக்கலை எதிர்த்து போராட கர்ப்பிணிகளுக்கு உதவுகின்றன.

    MORE
    GALLERIES

  • 610

    கோடை சீசனில் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணின் டயட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய உணவுகள்.!

    முழு தானியங்கள் : பெண்கள் தங்கள் கர்ப்பகாலத்தில் போதுமான அளவு கார்போஹைட்ரேட்ஸ்களை பெறுவதை உறுதிசெய்ய, முழு தானியங்களை தங்கள் டயட்டில் சேர்த்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்கள். பொதுவாக கர்ப்பிணிகள் தங்கள் டயட்டில் முழு தானியங்களை சேர்த்து கொள்வதால் செரிமானம் மேம்படுவதோடு, முழு கார்போஹைட்ரேட்ஸ் ஆரோக்கியமான ரத்த சர்க்கரை அளவும் பராமரிக்கப்படுகிறது. தவிர முழு தானியங்களில் இருக்கும் வைட்டமின் பி, மினரல்ஸ் மற்றும் ஃபைபர் சத்து கரிப்பினிக்கலைன் ஆரோக்கியத்தை உறுதி செய்கின்றன.

    MORE
    GALLERIES

  • 710

    கோடை சீசனில் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணின் டயட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய உணவுகள்.!

    நட்ஸ் மற்றும் சீட்ஸ் : கர்ப்ப காலத்தில் கரிப்பிணிகளுக்கு மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் லிப்பிட்ஸ் மிகவும் அவசியமானவை. நல்ல கொழுப்புகள் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை மற்றும் கண்கள், நஞ்சுக்கொடி மற்றும் பிற திசுக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. நட்ஸ், சீட்ஸ் மற்றும் நட் பட்டர்ஸ் உள்ளிட்டவற்றில் நல்ல லிப்பிட்ஸ்கள் அதிகம் காணப்படுகின்றன. ஆளி விதைகள், நேச்சுரல் பீனட் பட்டர் மற்றும் ஆலிவ் ஆயில் போன்றவற்றில் ஆரோக்கியமான லிப்பிட்ஸ்கள் ஏராளமாக காணப்படுகின்றன.

    MORE
    GALLERIES

  • 810

    கோடை சீசனில் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணின் டயட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய உணவுகள்.!

    சிட்ரஸ் பழங்கள் : சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு அல்லது சாத்துக்குடி உள்ளிட்டவற்றில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்றவை. சிட்ரஸ் பழங்கள் கர்ப்பிணிகளின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுவதோடு மற்றும் வெயில் அதிகம் இருக்கும் நாட்களில் எனர்ஜி அளவை அதிகரிக்கின்றன.

    MORE
    GALLERIES

  • 910

    கோடை சீசனில் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணின் டயட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய உணவுகள்.!

    சீமை சுரைக்காய் : சீமை சுரைக்காயில் ஃபோலேட், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி உள்ளிட்டவை நிறைந்திருப்பதால், எப்போதும் கர்ப்பிணி பெண்கள் சீமை சுரைக்காய் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் இதில் நீர்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கல் அபாயத்தை குறைக்கிறது.

    MORE
    GALLERIES

  • 1010

    கோடை சீசனில் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணின் டயட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய உணவுகள்.!

    மீன் : அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு புரோட்டின், இரும்பு மற்றும் ஜிங்க் உள்ளிட்டவற்றின் அருமையான ஆதாரமாக மீன் இருக்கிறது. கருவின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு அத்தியாவசிய தாதுக்கள் மீனில் நிறைந்துள்ளன. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் டோகோசாஹெக்ஸெனோயிக் அமிலம் நிறைந்த மீன்கள் கருவிலிருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

    MORE
    GALLERIES