நாம் சமைக்கும்போது ஆணுக்கும், பெண்ணுக்கும் தனித்தனியாக சமைப்பதில்லை. ஒரே உணவைத்தான் ஆணும், பெண்ணும் சாப்பிடுகின்றனர். ஆனால், உடல் அமைப்பை பொருத்து ஆணுக்கும், பெண்ணுக்குமான ஊட்டச்சத்து தேவைகள் மாறுபடுகின்றன என்ற கருத்தை மறுக்க இயலாது.குறிப்பாக, ஒவ்வொரு உணவிலும் கட்டாயம் சேர்த்துக் கொள்ளப்படுகின்ற உப்பின் அளவு குறைந்தாலும், அளவு கூடினாலும் அந்த உணவின் சுவை மாறிவிடும்.
உதாரணத்திற்கு மெனொபாஸ்க்கு முந்தைய காலகட்டம் மற்றும் மெனோபாஸ்க்கு பிறகான காலகட்டம் என எப்போதுமே உப்பின் விளைவுகள் பெண்களுக்கு கூடுதலாக இருக்கும் என்று அறியப்படுகிறது. நம் உடலில் உள்ள தசைகளை ரிலாக்ஸ் செய்யவும், மினரல்கள் மற்றும் நீர்ச்சத்து இடையே சமநிலையை கடைப்பிடிக்கவும் சோடியம் சத்து தேவையானதாக இருக்கிறது.
எப்படி குறைப்பது? வாழ்வியல் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதன் மூலமாகவும், உப்பின் அளவை குறைப்பதன் மூலமாகவும் பெண்களுக்கான விளைவுகளை கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவர் ஷ்ராய் ஸ்ரீவத்ஸவ் தெரிவிக்கிறார். இளம் வயதிலேயே ஹைப்பர்டென்சிவ் பிரச்சினை ஏற்படும் பெண்களுக்கு அதை கட்டுப்படுத்துவதற்கான மருந்துகளை கொடுக்க வேண்டும் என்றார் அவர்.
பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவர் பிரியங்கா ரோஹத்கி இதுகுறித்து பேசுகையில், “முன்பெல்லாம் ஒரே அளவில் உப்பு உட்கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விளைவுகள் ஒரே மாதிரியாக தென்பட்டன. ஆனால், வயது, இன பாகுபாடு இல்லாமல் அனைத்து பெண்களுக்குமே உப்பு மூலமாக ஏற்படும் விளைவுகள் கூடுதலாக இருப்பது தெரியவந்தது. பெண்களுக்கான ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக அவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது’’ என்று தெரிவித்தார்.
உடலில் ரத்த ஓட்டம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் சோடியம் - பொட்டாசியம் சீரான நிலையில் இருக்க வேண்டும். அதற்கு பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழம், உருளைக்கிழங்கு, பச்சை காய்கறிகள், வால்நட்ஸ் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். தர்பூசணி விதைகளும் கூட நல்ல பலனை தரும். இவற்றையெல்லாம் விட உடல் எடை கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி அவசியம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.