நம்மில் பெரும்பாலோனோருக்கு நமது மனநிலையை பொறுத்து நமது உணவு பழக்க வழக்கமும் மாறுபடும் அந்த வகையில் சமீபத்திய ஆய்வின்படி இந்தியர்களில் 72% மக்கள் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது நொறுக்கு தீனிகளை சுவைக்க விரும்புவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இது ஆண் பெண் என இரு பாலினத்தாருக்குமே பொதுவான ஒன்றாக இருந்து வருகிறது.
சமீபத்தில் சந்தை ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய அந்த ஆய்வறிக்கையில், நொறுக்கு தீனிகளை சாப்பிட்ட பிறகு 70% இந்தியர்கள் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்வதாக கருத்து தெரிவித்துள்ளார்கள். இந்த ஆய்வானது இந்தியாவின் வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என மொத்தம் பத்து நகரங்களில் உள்ள மக்களில் இடமிருந்து பெறப்பட்டது. அதில் மும்பை, புனே, அகமதாபாத், டெல்லி, ஜெய்ப்பூர், லக்னோ, கொல்கத்தா, சென்னை. ஹைதராபாத் மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் இருந்து தரவுகள் திரட்டப்பட்டுள்ளன.
டெல்லியில் உள்ள 81% மக்கள் தங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது நொறுக்கு தீனிகளை உட்கொள்ள விரும்புகிறார்கள். கிடைத்த தரவுகளிலேயே இந்த பகுதியை சேர்ந்தவர்கள் தான் நொறுக்கு தீனிகள் உட்கொள்வதில் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். அந்த வகையில் ஹைதராபாத்தில் 77 சதவீதமும், சென்னையில் 77 சதவீதமும், கொல்கத்தாவில் 75%, மும்பை 28%, அகமதாபாத் 67%, புனே 66%, பெங்களூர் 26% மற்றும் ஜெய்ப்பூரில் 61% மக்கள் நொறுக்கு தீனியை சுவைக்கிறார்கள்.
இவ்வாறு நொறுக்கு தீனிகளை சுவைப்பது என்பது பல்வேறு குடும்பங்களிலும் ஒரு பழக்கமாக இருந்து வருகிறது. கிட்டத்தட்ட இந்திய குடும்பங்களில் உள்ள பெரும்பாலான பெற்றோர்கள் நொறுக்கு தீனிகளை ஒரு மினி மீல்ஸ் ஆக கருதுகின்றனர். அதில் தற்போது அதிக அளவிலான பெற்றோர் நொறுக்கு தீனிகளை ஒருவேளை உணவாகவே உட்கொள்ளும் அளவிற்கு வந்து விட்டனர். 34 சதவீத ஆண்களும், 35 சதவீத பெண்களும் இவ்வாறு ஒரு பழக்கம் அதிகரித்து வருவதை உறுதி செய்துள்ளனர்.
இதைத் தவிர நொறுக்கு தீனிகள் உட்கொள்ளும் பழக்கமானது வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் அவற்றை செய்ய எடுத்துக் கொள்ளும் கால அவகாசம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடுகிறது. 44 சதவீத இந்தியர்கள் தங்கள் வீடுகளில் வேலைக்கு பணியாளர்கள் இல்லாத போது, நொறுக்கு தீனிகள் அதிகம் உதவுவதாக குறிப்பிட்டுள்ளனர். அதில் 60% பேர் இளம் வயதினராகவும் திருமணமாகாதவராகவும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 2815 நபர்களிடமிருந்து பதில்கள் பெறப்பட்டன. அதில் 25% பேர் வட இந்தியாவில் இருந்தும், 36 சதவீதம் பேர் தென்னிந்தியாவிலிருந்தும், 25% பேர் இந்தியாவின் மேற்கு பகுதியில் இருந்தும், மீதமுள்ளவர் அனைவரும் இந்தியாவின் கிழக்கு பகுதியில் இருந்தும் பங்கேற்றுள்ளனர். இதில் 42% பேர் திருமணமாகாதவர் என்றும், 52% பேர் திருமணமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தமாக இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் பார்க்கும்போது நொறுக்கு தீனிகளை உட்கொள்வது மக்களின் மனநிலையை மகிழ்ச்சியாக உதவுகிறது என்று தெரிய வந்துள்ளது. மேலும் வரும் காலங்களில் இந்த ஆய்வு அறிக்கை அடிப்படையில் பல்வேறு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை குறி வைத்து புதிய நொறுக்கு தீனி வகைகளை சந்தைகளுக்கு கொண்டு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.