எல்லா பருவத்திலும் நாம் அனைவரும் பிளாக் காபியை விரும்புகிறோம். மேலும் நம்மில் பல ஃப்ளேவர்ஸ் மற்றும் கிரீம்ஸ் கொண்ட காபியை பருக விரும்புகிறோம். வழக்கம் போல பருவ சீசன் துவங்கி பல மாநிலங்களில் நல்ல மழை பெய்ய துவங்கி இருக்கிறது. இந்த சமயத்தில் அடிக்கடி நம் மனம் ஏங்கும் விஷயம் காஃபிதான். சூடாக காஃபி குடித்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம்தான் அடிக்கடி உதிக்கும். இப்படிபட்ட சமயத்தில் ஒரே மாதிரியான காஃபியை குடிப்பதை காட்டிலும் இந்த மசாலா வகைகளையும் சேர்த்து சுவைத்துப் பாருங்கள்.. கூடுதல் புத்துணர்ச்சி கிடைக்கும்.
இலவங்கப்பட்டை.. நீங்கள் காலை நேரத்தில் பருகும் காபியில் சிறப்பான மசாலா ஒன்றை சேர்க்க விரும்பினால் அதற்கு இலவங்கப்பட்டை சரியான தேர்வு ஆகும். இது நல்ல சுவை மட்டுமல்ல, பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. அதிக அளவு ஆன்டிஆக்சிஜனை கொண்டிருப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. உங்கள் காபியை சூடாக தயாரிக்கும் போது அதில் சிறிது இலவங்கப்பட்டை தூளை சேர்த்து பின் பருகினால் உங்கள் நாளை புத்துணர்ச்சியுடன் தொடங்கலாம்.
வெண்ணிலா எக்ஸ்ட்ராக்ட் (Vanilla extract): வெண்ணிலா எக்ஸ்ட்ராக்ட் கலக்கப்பட்ட கூடிய காபி உங்கள் காபியை தனித்துவமாக்க ஒரு எளிய வழியாகும். இது காபிக்கு கூடுதல் சுவையை சேர்க்கிறது மற்றும் அதை இனிமையாக்குகிறது. காபியில் ஒரு கிரீமி சுவை வேண்டும் ஆனால் அதற்காக சேர்க்கும் பொருளால் கூடுதல் கலோரிகள் உடலில் என்ற கூடாது வெண்ணிலா எக்ஸ்ட்ராக்ட் சரியான தேர்வாகும். காபி தயாரிக்க பால் காய்ச்ச துவங்கும் முன்பே வெண்ணிலா எக்ஸ்ட்ராக்ட் சேர்த்து கொதிக்க வைப்பது காபியின் சுவையை ஸ்ட்ராங்காக்கும். வெண்ணிலா எக்ஸ்ட்ராக்ட் கலக்கப்பட்ட காபி வயிற்று வலி மற்றும் செரிமான பிரச்சனைகளை நீக்குகிறது, மூட்டு வலியை குறைக்கிறது மற்றும் மன அழுத்தத்தை குறைக்கிறது.
ஏலக்காய்.. பலர் ஏலக்காயை டீ-யில் சேர்த்து குடிப்பதை பார்த்திருக்கிறோம். இந்த நல்ல ஒரு சுவையை கொண்டுள்ளது, எனவே காபியில் இதை சரியாகப் பயன்படுத்தும் போது இது உங்களுக்கு ஒரு தனித்துவ சுவையை தரும். ஏலக்காய் பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. நார்ச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய தாதுக்களால் நிரம்பியுள்ளது. காபி கொட்டைகளை அரைத்து பயன்படுத்துபவர் என்றால் அரைப்பதற்கு முன், சில ஏலக்காய் விதைகளை சேர்க்கலாம். அல்லது புதிதாக காய்ச்சிய காபியில் ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடியை தூவலாம்.
ஜாதிக்காய்: காபியில் ஜாதிக்காய் சேர்த்து பருகுவது உங்கள் நாவின் சுவை மொட்டுக்களை மகிழ்விக்கும். ஜாதிக்காய் உங்கள் காபிக்கு சற்று இனிமையான வாசனை மற்றும் சுவையை அளிக்கிறது. இதன் சுவை உண்மையிலேயே தனித்துவமானது. அதே போல இந்த மூலப்பொருளை துல்லியமாக எடைபோடுவது கடினம் என்பதால், சுவை மற்றும் வாசனையை அளவிடும் அளவுருக்களாகப் பயன்படுத்த வேண்டும்.
பெப்பர்மின்ட் ஆயில்: உங்கள் காபியில் 1 அல்லது 2 துளி பெப்பர்மின்ட் ஆயில் சேர்ப்பது உங்கள் காபிக்கு அற்புதமான சுவையை கொடுக்கும். மிளகு கீரையில் அதாவது பேப்பர் மின்ட்டில் இரும்பு மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி மற்றும் அஜீரண பிரச்சனைகளை சரி செய்ய உதவும். நீங்கள் வேலை செய்து மிகவும் சோர்வாக உணரும் நாட்களில் எடுத்து கொள்ளும் இந்த மசாலா கலக்கப்பட்ட காபி உங்கள் மனநிலையை மேம்படுத்தும். ஆனால் உங்கள் காபியின் சுவையை பெப்பர்மின்ட் ஆயிலால் எளிதில் முறியடிக்க முடியும் என்பதால் குறைவாக கலந்தால் நல்ல சுவையான காபியை அனுபவித்து குடிக்கலாம்.