சமையல் என்பது கலை என்று கூறுவது சாதாரண வார்த்தை அல்ல. கெமிஸ்ட்ரியில் எப்படி சில கெமிக்கல் ரியாக்ஷன்கள் பலன் தருகிறதோ அதேபோல்தான் சமையலும். இதுவும் ஒரு கெமிஸ்ட்ரி எக்ஸ்பிரிமெண்டுகள் போன்றுதான். சமையலில் கற்றுக்கொள்ள எண்ணற்ற விஷயங்கள் இருக்கின்றன. அவை நம்மை தினம் தினம் ஆச்சரியப்படுத்தும். மகிழ்ச்சிபடுத்தும். அப்படி உங்களுக்கே தெரியாமல் இருக்கும் சில குக்கிங் ஹேக்குகளை இங்கு பார்க்கலாம்.
பேக்கிங்கிற்கான பொருட்களைக் கலக்கும்போது ஒரு மரக் கரண்டியைப் பயன்படுத்தினால், அந்த மாவை மென்மையாக்கும் என்கின்றனர். மற்றொரு காரணம், இது மற்ற உலோகம் அல்லது பிளாஸ்டிக் ஸ்பூனை விட நன்றாக கலக்க உதவும். அதோடு மரக் கரண்டி வெப்பத்தைக் கடத்தாது என்பதால், கறிகளைக் கிளற இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
டெண்டர் சிக்கன் என்னும் வார்த்தை இன்று மார்கெட்டிங் ஸ்ட்ராட்டஜியால் பிரபலமாகிவிட்டது. டெண்டர் சிக்கன் எனில் நன்கு மென்மையான மற்றுன் ஜூஸியான சுவையுடன் இருக்கும். அப்படி நீங்கள் சமைக்கும் சிக்கனும் டெண்டர் சுவையில் இருக்க வேண்டுமெனில் சமைப்பதற்கு முன் சிக்கனை பாலில் ஊற வையுங்கள். அது 48 மணி நேரத்திற்கு நன்கு ஊற வேண்டும். இப்படி செய்வதால் சாப்பிடும்போது கடினமாக அல்லாமல் மென்மையான சுவையில் இருக்கும்.
பிஸ்கட் வீட்டிலேயே செய்யக்கூடியவர் எனில் இந்த குறிப்பு நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். அதாவது பிஸ்கட்டிற்கு நீங்கள் பிசையும் மாவு நன்கு குளிர்ந்திருந்தால் நன்கு கெட்டிப்பதத்தில் வரும் என்கின்றனர். எனவே ஒரு இரவு முழுவதும் ஃபிரிட்ஜில் வைத்து கூட மறுநாள் பேக் செய்யலாம். சாப்பிடவும் சூப்பராக இருக்கும்.
சமைக்கும்போது சேர்க்கும் மசாலாக்கள் அல்லது இலைகள் என எதுவாயினும் அவற்றை ஒன்றும் பாதியுமாக இடித்து போட்டால் அந்த மசாலாவின் ஃபிளேவரை முழுமையாக பெற முடியும் என்கின்றனர். எனவே பூண்டு, கறிவேப்பிலை , கொத்தமல்லி அல்லது பட்டை, கிராம்பு, சீரகம் என இப்படி எதை சேர்த்தாலும் அவற்றை இடித்து சேர்த்து பாருங்கள்.