தற்போதைய காலத்தில் வயதானவர்கள் மட்டும் அல்ல, இளைஞர்களும் நீரிழிவு நோயால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். சர்க்கரை நோய் ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரை உணவுகளை தவிர்ப்பது நல்லது. இது இரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்க உதவும். அந்தவகையில், நீரழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய உணவுகள் குறித்து இங்கு காண்போம்.
ஒரு மீடியம் சைஸ் ஆப்பிளில் 28 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 5 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது, சுவையான மற்றும் சத்தான உணவுகளில் ஒன்று. இதில், குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ளது. தினமும் சாப்பாடு சாப்பிடுவதற்கு முன், ஒரு ஆப்பிளை உட்கொள்வது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது என்று ஆய்வுகள் கூறுகிறது.
சியா விதை புட்டிங் மிகவும் ஆரோக்கியமானது மற்றும் எளிய பொருட்களைப் பயன்படுத்தி செய்யக்கூடியது. சியா விதை நார்ச்சத்து, புரதம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த ஒரு சத்தான மூலப்பொருள். உணவில் சியா விதைகளைச் சேர்ப்பது குறைந்த இரத்த சர்க்கரை அளவு மற்றும் டயஸ்டாலிக் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
வாழைப்பழ ஐஸ்கிரீம் எளிமையான பொருட்களை கொண்டு செய்யக்கூடிய ஒரு சிற்றுண்டி. வாழைப்பழங்கள் நார்ச்சத்துக்கான நல்ல ஆதாரம் மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருக்கின்றன. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதற்கு இதுவும். 4 வாரம் தொடர்ந்து வாழைப்பழம் சாப்பிடுபவர்களின் இரத்த சர்க்கரை அளவு கணிசமாக குறைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றனர்.