முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » இந்த 6 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு வைட்டமின் ஏ குறைபாடு இருக்கலாம்!

இந்த 6 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு வைட்டமின் ஏ குறைபாடு இருக்கலாம்!

சிறுவயதிலேயே பார்வைத் திறன் இழப்பு ஏற்படும் குழந்தைகள் பலருக்கும் வைட்டமின் ஏ குறைபாடு உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • 19

  இந்த 6 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு வைட்டமின் ஏ குறைபாடு இருக்கலாம்!

  நமது உடலின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் ஒவ்வொரு வைட்டமின்கள் உதவுகின்றன. குறிப்பாக சில குறிப்பிட்ட உறுப்புக்கள் ஆரோக்கியமாக செயல்படுவதற்கு குறிப்பிட்ட வகையான வைட்டமின்களே அதிகம் தேவைப்படுகின்றன. ஆனால் சில வைட்டமின்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன. அவற்றில் ஒன்றுதான் வைட்டமின் ஏ. உடலின் செல்களின் வளர்ச்சி முதல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவது, கன்பார்வை மேம்படுத்துவதென பல்வேறு வகையான செயல்பாடுகளுக்கும் வைட்டமின் ஏ இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது.

  MORE
  GALLERIES

 • 29

  இந்த 6 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு வைட்டமின் ஏ குறைபாடு இருக்கலாம்!

  நமது பார்வை திறனை மேம்படுத்துவதற்கு வைட்டமின் ஏ அதிக அளவு உணவில் சேர்த்துக் கொள்ளும்படி மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதைத் தவிர நமது சருமத்தில் உள்ள திசுக்கள், நுரையீரல் ஆரோக்கியம், குடல் மற்றும் சிறுநீரகத்தின் ஆரோக்கியமாக மற்ற மேம்படுத்துவதிலும் வைட்டமின் முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தைகள் கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்கள் ஆகியோர்களை வைட்டமின் ஏ குறைபாடு அதிகம் உள்ளதாக அறியப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 39

  இந்த 6 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு வைட்டமின் ஏ குறைபாடு இருக்கலாம்!

  உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்றுகளுக்கு வைட்டமின் ஏ குறைபாடு காரணமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. சிறுவயதிலேயே பார்வைத் திறன் இழப்பு ஏற்படும் குழந்தைகள் பலருக்கும் வைட்டமின் ஏ குறைபாடு உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வைட்டமின் ஏ குறைபாட்டு உங்களுக்கு இருந்தால் உடலில் சில அறிகுறிகள் தோன்றும் அவை என்னென்ன என்பதை பற்றி போது பார்ப்போம்.

  MORE
  GALLERIES

 • 49

  இந்த 6 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு வைட்டமின் ஏ குறைபாடு இருக்கலாம்!

  வறண்ட சறுமும் : நமது சருமத்தில் உள்ள செல்களை சரி செய்வதற்கும் அழற்சியிலிருந்து பாதுகாப்பு அளிப்பதற்கும் வைட்டமின் ஏ முக்கியமான ஒரு ஊட்டச்சத்தாக விளங்குகிறது. உடலில் வைட்டமின் ஏ சத்துக் குறைபாடு ஏற்படும்போது இவை சருமத்தில் எரிச்சல், சரும வறட்சி ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன. எனவே வைட்டமின் ஏ ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்களை உட்கொள்வது இவற்றை சரி செய்ய உதவும்.

  MORE
  GALLERIES

 • 59

  இந்த 6 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு வைட்டமின் ஏ குறைபாடு இருக்கலாம்!

  வறண்ட கண்கள் : நமது கண்களில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளையும் வைட்டமின் ஏ ஊட்டச்சத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் நம்மால் சரி செய்ய முடியும். முக்கியமாக வைட்டமின் ஏ குறைபாடு ஏற்படும்போது கண்ணீர் சுரப்பது தடை செய்யப்படுகிறது மேலும் பார்வை இழப்பு மற்றும் மாலை கண் நோய் ஆகியவையும் இதனால் உண்டாக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 69

  இந்த 6 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு வைட்டமின் ஏ குறைபாடு இருக்கலாம்!

  குழந்தை பெற்றுக் கொள்வதில் பிரச்சனை : வைட்டமின் ஏ குறைபாடு இருக்கும் பட்சத்தில் கருத்தரிப்பது சவாலான விஷயமாக மாறிவிடுகிறது. எனவே குழந்தை பெற்றுக்கொள்வதில் பிரச்சனை உள்ளவர்கள் முடிந்தவரை வைட்டமின் ஏ உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 79

  இந்த 6 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு வைட்டமின் ஏ குறைபாடு இருக்கலாம்!

  வளர்ச்சி குன்றிய குழந்தைகள் : குழந்தைகளில் சிலருக்கு வயதுக்கு ஏற்ற வளர்ச்சி இருப்பதில்லை. பொதுவாகவே இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு பிரச்சினையாக இருப்பது வைட்டமின் ஏ ஊட்டச்சத்து குறைபாடு தான். எனவே முடிந்தவரை அவர்களுக்கு வைட்டமின் ஏ ஊட்டச்சத்து அதிகம் உள்ள பொருட்களை உணவளிக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 89

  இந்த 6 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு வைட்டமின் ஏ குறைபாடு இருக்கலாம்!

  அடிக்கடி நோய் தொற்று பாதிப்பு : குழந்தைகளுக்கு தொண்டை மற்றும் நெஞ்சு பகுதிகளில் நோய் தொற்றுகள் உருவாவது பொதுவான விஷயம்தான் இவை வைட்டமின் ஏ குறைபாட்டினால் உண்டாகிறது மேலும் மற்றவர்களை விட குழந்தைகளுக்கு செரிமான கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

  MORE
  GALLERIES

 • 99

  இந்த 6 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு வைட்டமின் ஏ குறைபாடு இருக்கலாம்!

  காயங்கள் குணமாவதில் தாமதம் : நமது உடலில் ஏற்படும் காயங்களை குணப்படுத்துவதில் வைட்டமின் ஏ முக்கிய பங்காற்றுகிறது. முக்கியமாக நமது ஒரு தோல் வளர்ச்சிக்கு ஊக்கப்படுத்துவதில் வைட்டமின் ஏ மிகவும் முக்கியமானது. வைட்டமின் ஏ தான் நமது சருமத்தில் கொலாஜனை உற்பத்தி செய்து ஆரோக்கியமான சருமத்திற்கு உதவுகிறது.

  MORE
  GALLERIES