நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வீட்டு உபயோக பொருட்கள் சமையல் வேலையை மிகவும் எளிதாக்கி வருகின்றன. ஃப்ரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றைப் பயன்படுத்துவது இன்றைக்குத் தவிர்க்க முடியாததாகிவிட்டது. அதேபோல் இப்போதெல்லாம் பெரும்பாலானோரின் வீடுகளில் ‘மைக்ரோவேவ்’ பயன்படுத்துவதையும் காண முடிகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை இது சமைக்க பயன்படுவதை விட, ஏற்கனவே சமைக்கப்பட்ட உணவுகளை மீண்டும் சூடாக்கி பரிமாறவே அதிக அளவில் பயன்படுகிறது.
`மைக்ரோவேவ் அலை’ எனப்படும் மின்காந்த அலைகள் உருவாகி அவை உணவில் உள்ள நீர்ச்சத்தில் அதிர்வை ஏற்படுத்துகின்றன. அதனால் உணவில் உள்ள மூலக்கூறுகள் ஒன்றுடன், ஒன்று ஊராசி, அதிலிருந்து உருவாகும் வெப்பம் மூலமாக உணவு சமைக்கப்படுகிறது. எனவே தான் கதிர்வீச்சு மூலம் ஓவனில் சமைக்கப்படும் உணவுகள் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமற்றவையாக கருதப்படுகிறது.
உணவைத் தொடர்ந்து சூடுபடுத்துவதற்கு மைக்ரோவேவ் ஓவன்களை பயன்படுத்துவது பெரிய உடல்நல விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. பசி அடிவயிற்றைக் கிள்ளும் அவசரமான நேரங்களில், உணவை மைக்ரோவேவில் சூடாக்குவோம். ஏனெனில் அது விரைவாகவும் வசதியாகவும் இருக்கும். இருப்பினும், இந்த பழக்கத்தை நாம் ஏன் செய்யக்கூடாது என்பதற்கு பல காரணங்கள் உள்ளன, அதில் முக்கியமான 5 காரணங்களை இங்கு பார்க்கலாம்...
நோயெதிர்ப்பு மண்டலத்தில் தீவிர தாக்கம்: மைக்ரோவேவ் மூலமாக சமைக்கப்பட்ட அல்லது சூடாக்கப்பட்ட உணவை உண்ணுவது ரத்த சீரத்தின் அளவு மற்றும் நிணநீர் சுரப்பிகளில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். மேலும் மைக்ரோவேவ் மூலம் சூடாக்கப்பட்ட உணவுகள், நோயெதிர்ப்பு மண்டலத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது, அது செயல்படும் விதத்தை பாதிக்கிறது.
புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும்: காய்கறிகளை மைக்ரோவேவில் வைத்து சூடாக்கும் போது, அதில் உள்ள அத்தியாவசிய தாதுப்பொருட்கள், ஃப்ரீ ரேடிக்கல்களாக மாற்றப்படுகின்றன, இது உடலில் புற்றுநோய் செயல்பாட்டிற்கு வழிவகுக்க கூடியது. மைக்ரோவேவில் எந்த காய்கறிகளையும் சூடுபடுத்தாமல் இருப்பது நல்லது, ஏனெனில் அவற்றை அதிக வெப்பநிலையில் சூடாக்குவது தீவிர உடல் நல பாதிப்புகளை கொடுக்கும்.
உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சியை பாதிக்கும்: மைக்ரோவேவ் ஓவனில் தயாரிக்கப்பட்ட உணவைத் தொடர்ந்து சாப்பிடுவது நீண்டகால, நிரந்தர மூளை பாதிப்பை ஏற்படுத்தும். மைக்ரோவேவ் செய்யக்கூடிய பொருட்களை தொடர்ந்து சாப்பிடுவதால், ஆண் மற்றும் பெண் ஹார்மோன்களின் வளர்ச்சி குறைந்து உடல் நலம் சார்ந்த தொந்தரவுகள் ஏற்படும்.
ஆரோக்கிய இழப்பு: ஆரோக்கியமான உணவைக்கூட நீங்கள் மைக்ரோவேவ்வில் வைத்து சூடுபடுத்தி சாப்பிட்டால், அது உங்கள் உடலுக்குத் தேவையான பலன்களைத் தராது. மாற்றாக அவை அதிக தீங்கு விளைவிக்கும் மற்றும் சில கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்க கூடும். மைக்ரோவேவ் மூலமாக உணவை சூடாக்குவது அல்லது சமைப்பது அதில் உள்ள சத்துக்களை இழக்கச் செய்கிறது. எனவே எவ்வித பதற்றமும் இன்றி, கொஞ்ச நேரத்தை கூடுதலாக செலவிட்டு கேஸ் மூலம் உணவை சூடுபடுத்தி சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்குவதோடு, ஊட்டச்சத்துக்களையும் பாதுகாக்க உதவும்.