கால் மேல் கால் போட்டு அமர்வது என்பதே தனி கம்பீரம்தான். நம் மீதான தன்னம்பிக்கை அதிகமாக இருந்தால்தான் இப்படி அமரத் தோன்றும். இது மற்றவர்களை நம் மீது கவனம் ஈர்க்கவும் செய்யும். குறிப்பாக பெண்கள் இப்படி அமரும் போது நிமிர்ந்து பார்க்காத தலைகளே இருக்காது. இது நல்ல தோற்றத்தை ஏற்படுத்தினாலும் உடலளவில் இதனால் ஆபத்துகள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அவை என்னென்ன பார்க்கலாம்.
இரத்த அழுத்தம் : ஒரு காலை கீழே ஊன்றி மற்றொரு காலை மேலே வைப்பதால் கீழே ஊன்றும் ஒரு கால் வழியாக மட்டுமே இரத்தம் அழுத்தப்பட்டு ஒரு பக்கமாக பாய்கிறது. ஆனால் ஒரு காலுக்கு அழுத்தம் இல்லாததால் இரத்த அழுத்தம் ஏற்படும்.உங்களுக்கு ஏற்கெனவே உயர் இரத்த அழுத்தம் இருந்தால் இந்த செயலால் மிகவும் மோசமடையக் கூடும்.