முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » வெண்டைக்காயை பிரியப்பட்டு சாப்பிடுபவரா நீங்கள்..? உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை.!

வெண்டைக்காயை பிரியப்பட்டு சாப்பிடுபவரா நீங்கள்..? உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை.!

பாக்டீரியா மற்றும் அல்சருக்கு எதிரான பண்புகள் வெண்டைக்காயில் உள்ளன. புற்றுநோய் எதிர்ப்பு சக்தியும் கூட வெண்டைக்காயில் உண்டு.

  • 18

    வெண்டைக்காயை பிரியப்பட்டு சாப்பிடுபவரா நீங்கள்..? உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை.!

    காய்கறிகளுக்கான ஆங்கிலப் பெயர்களில் வெண்டைக்காய்க்கு தனித்துவமான இடம் உண்டு. இதனை லேடிஸ்ஃபிங்கர் என்று குறிப்பிடுகின்றனர். இதில் அதிகப்படியான ஊட்டச்சத்து, நார்ச்சத்து மற்றும் ஆண்டி ஆக்ஸிடன்ட் சத்துக்கள் உள்ளன. வெண்டைக்காய் சாப்பிட்டால் ஞாபகத் திறன் அதிகரிக்கும் என்று பரவலாக கேள்விப்பட்டிருப்போம். அதேபோல சர்க்கரை நோயாளிகள் வெண்டைக்காய் சாப்பிடும் பட்சத்தில் ரத்த சர்க்கரை கட்டுக்குள் வரும் என்றும் தெரிந்து வைத்திருப்பீர்கள்.

    MORE
    GALLERIES

  • 28

    வெண்டைக்காயை பிரியப்பட்டு சாப்பிடுபவரா நீங்கள்..? உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை.!

    ஆனால், பலரும் கேள்விப்படாத விஷயம் என்னவென்றால், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப் போல, வெண்டைக்காயை கட்டுப்பாடு இன்றி சாப்பிடும் பட்சத்தில் உங்களுக்கு வயிறு உப்புசம், வயிற்றுப் பிடிப்பு, வாயுத்தொல்லை அல்லது வயிற்றுப்போக்கு போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். குறிப்பாக, வெண்டைக்காயில் உள்ள ஆக்ஸலேட்டுகள் காரணமாக சிறுநீரக கற்கள் உருவாகக் கூடும்.

    MORE
    GALLERIES

  • 38

    வெண்டைக்காயை பிரியப்பட்டு சாப்பிடுபவரா நீங்கள்..? உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை.!

    வெண்டைக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் : வெண்டைக்காயில் விட்டமின் ஏ, சி, இ மற்றும் கே ஆகிய சத்துக்கள் உள்ளன. மேலும் புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், ஃபேட்டி ஆசிட், தயமின், ஃபோலேட், அமினோ அமிலங்கள் போன்றவை வெண்டைக்காயில் உள்ளன.

    MORE
    GALLERIES

  • 48

    வெண்டைக்காயை பிரியப்பட்டு சாப்பிடுபவரா நீங்கள்..? உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை.!

    பாக்டீரியா மற்றும் அல்சருக்கு எதிரான பண்புகள் வெண்டைக்காயில் உள்ளன. புற்றுநோய் எதிர்ப்பு சக்தியும் கூட வெண்டைக்காயில் உண்டு. ஆகவே வெண்டைக்காய் சாப்பிடுவது பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் நலன் தரக் கூடியதுதான்.

    MORE
    GALLERIES

  • 58

    வெண்டைக்காயை பிரியப்பட்டு சாப்பிடுபவரா நீங்கள்..? உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை.!

    பக்கவிளைவுகள் : வெண்டைக்காயை மிக அதிகமான அளவில் எடுத்துக் கொள்பவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதிலும் உங்களுக்கு சிறுநீரகம் தொடர்புடைய நோய்கள் இருக்கிறது என்றால் இதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இதேபோல பித்தப்பை கல் உருவாகவும் வெண்டைக்காய் காரணமாக அமையும்.

    MORE
    GALLERIES

  • 68

    வெண்டைக்காயை பிரியப்பட்டு சாப்பிடுபவரா நீங்கள்..? உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை.!

    வெண்டைக்காயை கூட்டு செய்து சாப்பிட்டால் கூட பரவாயில்லை. சிலர் மிகுதியான எண்ணெய் ஊற்றி வறுவல் செய்து சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு சாப்பிட்டாலும் கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகரிக்குமாம். ஆகவே, குறைவான அளவில் எண்ணெய் சேர்த்து, அதனுடன் மசாலா பொருட்களையும் சேர்த்து வெண்டைக்காய் சாப்பிடுவது நலன் தரும்.

    MORE
    GALLERIES

  • 78

    வெண்டைக்காயை பிரியப்பட்டு சாப்பிடுபவரா நீங்கள்..? உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை.!

    சைனஸ் பிரச்சினை இருந்தால்… உங்களுக்கு இருமல் மற்றும் சைனஸ் போன்ற பிரச்சினைகள் இருப்பின் வெண்டைக்காய் சாப்பிடுவதை நீங்கள் தவிர்க்க வேண்டும். செரிமானக் கட்டமைப்பு பலவீனமாக இருப்பவர்கள் வெண்டைக்காய் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு பிரச்சினை ஏற்படக் கூடும்.

    MORE
    GALLERIES

  • 88

    வெண்டைக்காயை பிரியப்பட்டு சாப்பிடுபவரா நீங்கள்..? உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை.!

    பலன்கள் : பக்கவிளைவுகள் உண்டு என்பதால் வெண்டைக்காயை முற்றிலுமாக ஒதுக்கிவிட முடியாது. ஏனென்றால் வெண்டைக்காய் சாப்பிடுவதால் பல நன்மைகளும் உண்டு. ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க இது உதவும். மலக்குடல் புற்றுநோய் அபாயத்தை தடுக்கிறது. கண்களின் நலனுக்கு உகந்தது. உடல் எடையை கட்டுப்படுத்தவும், உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

    MORE
    GALLERIES