மிகவும் சத்தான ,ஆற்றும் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக கருதப்படும் வெள்ளை முட்டைகளும் இதற்கு விதிவிலக்கு இல்லை. முட்டைகளை தினசரி தவறாமல் எடுத்து கொள்வதால் சில பக்கவிளைவுகள் ஏற்படலாம். நீங்கள் தினசரி உங்கள் டயட்டில் முட்டைகளை சேர்த்து கொள்பவர் எனில் பின்வரும் பக்கவிளைவுகள் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். முட்டைகளை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்..
இதய ஆரோக்கியத்திற்கு மோசமானது : முட்டைகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் மற்றும் இறப்பு ஏற்படும் அபாயம் அதிகம் என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முட்டையில் உள்ள கொலஸ்ட்ரால் தான் காரணம் என நிபுணர்கள் கருதுகின்றனர். அதிக முட்டைகளை சாப்பிடுவது உங்கள் கொலஸ்ட்ரால் அளவையும் ஃபேட் அளவையும் அதிகரிக்கும். இதன் மூலம் இதய நோய் அபாயமும் அதிகரிக்கிறது.
வயிற்று வலியை ஏற்படுத்தலாம் : நீங்கள் அதிக முட்டைகளை சாப்பிட்டால், உங்கள் செரிமான அமைப்பு பாதிக்கப்படலாம் மற்றும் உங்களுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்படலாம். ஆம், அதிகமான முட்டைகளை எடுத்து கொள்வது சில நேரங்களில் வயிற்று வலிக்கு வழிவகுக்கலாம். வயிறு உப்புசம் போன்ற பிற செரிமான பிரச்சனைகளையும் ஏற்படுத்த கூடும்.