முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » அளவிற்கு அதிகமாக அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்.!

அளவிற்கு அதிகமாக அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்.!

அன்னாசிப் பழத்தின் அமிலத் தன்மையின் விளைவாக பற்கள் மற்றும் ஈறுகள் மிகவும் மோசமடையக் கூடும். மேலும், இது பல் சொத்தை மற்றும் ஈறு அழற்சியை ஏற்படுத்தலாம்.

  • 17

    அளவிற்கு அதிகமாக அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்.!

    அன்னாசிப்பழம் ஒரு சுவையான பழமாகும். பொதுவாக இது வெயில் காலங்களில் அதிக அளவில் விற்கப்படும் பழங்களில் ஒன்றாகும். இந்த பழத்தில் எண்ணற்ற வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடெண்ட்ஸ் நிரம்பியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 27

    அளவிற்கு அதிகமாக அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்.!

    இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. அன்னாசிப்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் சி, மாங்கனீஸ் மற்றும் செரிமான நொதிகள் போன்ற ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கூறுகள் நிறைந்துள்ளன. இருப்பினும், அதிகப்படியான அளவில் அன்னாசிப் பழங்களை உட்கொள்வது நெஞ்செரிச்சல் மற்றும் குமட்டல் போன்ற பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 37

    அளவிற்கு அதிகமாக அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்.!

    மேலும் இதை அதிகம் சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை அளவு பாதிக்கப்படும். எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு சாப்பிட கொடுக்கும் போது, இதன் அளவை முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டும். பர்டூ பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலைத் துறையின் கூற்றுப்படி, வைட்டமின் சி நிறைந்த பழங்களை பழுக்காமல் உட்கொள்ளக்கூடாது, ஏனெனில் இது கடும் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 47

    அளவிற்கு அதிகமாக அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்.!

    ரத்த போக்கு : அன்னாசிப் பழத்தின் சாறு மற்றும் தண்டில் ப்ரோமெலைன் என்சைம் உள்ளது. இது நமது உடலில் பல்வேறு எதிர்வினைகளை ஏற்படுத்த கூடும். இயற்கையான ப்ரோமைலைன் ஆபத்தானதாகத் தெரியவில்லை என்றாலும், ரத்தத்தை மெலிக்கும் மருந்துகளுடன் சேர்த்து எடுத்துக் கொண்டால், இது ரத்தப்போக்கை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

    MORE
    GALLERIES

  • 57

    அளவிற்கு அதிகமாக அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்.!

    ரத்த சர்க்கரை அளவு : அன்னாசிப் பழத்தில் அதிக அளவில் குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் நிறைந்துள்ளன. எனவே, சிலருக்கு இதை அதிகமாக சாப்பிடும் போது ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடும். பெரும்பாலான பழங்களில் சேர்க்கப்படும் கார்போஹைட்ரேட்டுகளால் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க முடியும். அந்த வகையில், அரை கப் அன்னாசிப்பழத்தில் உள்ள கார்போஹைட்ரேட் 15 கிராம் ஆகும். எனவே, இதன் அளவில் மிக கவனமாக இருத்தல் வேண்டும். இல்லையேல் சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    MORE
    GALLERIES

  • 67

    அளவிற்கு அதிகமாக அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்.!

    பற்கள் : அன்னாசிப் பழத்தின் அமிலத் தன்மையின் விளைவாக பற்கள் மற்றும் ஈறுகள் மிகவும் மோசமடையக் கூடும். மேலும், இது பல் சொத்தை மற்றும் ஈறு அழற்சியை ஏற்படுத்தலாம். நமது நோயெதிர்ப்பு அமைப்பு அன்னாசிப் பழத்தில் உள்ள புரதத்தை மகரந்தம் அல்லது வேறு ஒவ்வாமை என்று தவறாகக் கருதி கொள்ள கூடும் என்பதால் இந்த நிகழ்வு நிகழ்கிறது.

    MORE
    GALLERIES

  • 77

    அளவிற்கு அதிகமாக அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்.!

    வயிற்று போக்கு : அன்னாசி ஜூஸ் குடிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இது சில சமயங்களில் வயிற்று போக்கை ஏற்படுத்தலாம். அதனால் வெறும் வயிற்றில் இதை குடிக்க கூடாது. அதே போன்று, அன்னாச்சி ஜூஸை அதிக அளவிலும் எடுத்து கொள்ள கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

    MORE
    GALLERIES