எலுமிச்சை சாறைப் பிழிந்து உப்பு அல்லது சர்க்கரை கலந்துக் குடித்தால் அடிக்கும் வெயிலுக்கு அமிர்தமாய் இருக்கும். இந்த சுவையை தினமும் அருந்தத் தோன்றும். ஆனால் அப்படிக் குடிப்பதால் எலும்புகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. அதில் உள்ள ஆசிட் எலும்புகளை அரித்துவிடும் என்று கூறப்படுகிறது. அது உண்மையா..?
அப்படி ஊட்டச்சத்து நிபுணர் ரூபாளி தத்தா என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில், எலுமிச்சை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என இதுவரை எந்த ஆய்வுகளின் மூலமும் நிரூபிக்கப்படவில்லை. அதில் வைட்டமின் சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது என்பதால் மூட்டு வீக்கம், மூட்டு வலி இருப்போருக்கு நல்லது என நம்பப்படுகிறது.