நம்மில் பலரும் ஒரு குறிப்பிட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் அல்லது உணவு வகைகளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி மட்டுமே அதிகம் அறிந்து வைத்துக்கொள்கிறோம். அதே பழங்கள், காய்கறிகள் மட்டும் உணவு வகைகளின் பக்க விளைவுகளை பற்றி, தீமையான பக்கங்களை பற்றி பெரிதும் அக்கறை கொள்வதும் இல்லை; தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதும் இல்லை. அப்படியாக தன்னுள் பல நன்மைகளை உள்ளடக்கிய எலுமிச்சம் பழத்தின் பக்க விளைவுகளை பற்றியே நாம் இங்கே பார்க்க போகிறோம்.
எலுமிச்சைப்பழம் - இரண்டாம் சிந்தனையே இல்லாமல் நம் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் வைட்டமின் சி நிறைந்த ஆதாரங்களில் ஒன்றாகும். எலுமிச்சைப்பழத்தை ஒரு பல்நோக்கு பழம் என்றே கூறலாம். சருமம், முடி மற்றும் ஒப்பீட்டளவில் முழு உடலுக்கும் ஆரோக்கியம் அளிக்கும் ஒரு பழமாக அறியப்படுகிறது என்றாலும் கூட இந்த புளிப்புச் சுவையுடைய பழம் நமக்கு சில அசௌகரியங்களையும் ஏற்படுத்தும் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? அல்லது எலுமிச்சைப்பழத்திற்கு ஏதாவது தீமையான "குணங்கள்" இருக்குமா என்று எப்போதாவது கற்பனை செய்து பார்த்ததுண்டா? எலுமிச்சம் பழங்களில் போதுமான ஊட்டச்சத்து பண்புகள் இருக்கும் போதிலும் கூட ஒரு நபர் அதை அதிகமாக உட்கொள்ளும் போது, அது பல வகையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்
வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் : வெறும் வயிற்றில் தேனுடன் கலந்த்து எலுமிச்சை நீரை உட்கொள்வது செரிமான செயல்முறைக்கு உதவும் என்று நாம் பல முறை கேள்விப்பட்டிருக்கிறோம். இருப்பினும், அதிகப்படியான எலுமிச்சை சாறு வயிற்றை சீர்குலைக்கும், மேலும் இது செரிமான செயல்முறையையும் குறைக்கும், இது வயிற்று வலியையும் ஏற்படுத்தும்.
பல் அரிப்பை ஏற்படுத்தும் : எலுமிச்சை சாற்றில் அதிக அமிலத்தன்மை உள்ளது. எனவே ஒரு எலுமிச்சையில் சாறு அதிகமாக இருக்கும்போது, அது உங்கள் பற்களில் கூச்ச உணர்வை ஏற்படுத்தும். மேலும் இது காலப்போக்கில் பல் சிதைவையும் ஏற்படுத்தும். இங்கே பல் அரிப்பு என்பது கனிமமயமாக்கப்பட்ட பல் பொருட்களின் வேதியியல் இழப்பு (chemical loss of mineralized tooth substances) ஆகும். எனவே, உங்களுக்கு சென்சிடிவ் ஆன பற்கள் இருந்தால் நீங்கள் எலுமிச்சை போன்ற சிட்ரிக் உணவுகளை உட்கொள்வதைக் குறைக்க வேண்டும்.
ஆய்லி ஸ்கின்னிற்கு ஓகே.. ஆனால் ட்ரை ஸ்கின்னிற்கு அல்ல : இந்த பழம் உங்கள் சருமத்தில் வறட்சியை ஏற்படுத்தும் என்று அறியப்படுகிறது, அதனால் தான் ஆய்லி ஸ்கின் உள்ளவர்களுக்கு இது பரிந்துரைக்கப்படுகிறது. ஒருவேளை உங்களுக்கு ட்ரை ஸ்கின் இருக்கும் பட்சத்தில், லெமன் வாட்டர் / லெமனேட்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அது உங்கள் உடலில் மேலும் அதிக வறட்சியை ஏற்படுத்தும்.
டிஹைட்ரேஷன் : இங்கே நல்ல விஷயம் என்னவென்றால், எலுமிச்சை சாற்றை உட்கொள்ளும் போது, அது உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. ஆனால், அதிகப்படியான எலுமிச்சை உங்கள் சிறுநீர்ப்பையை பெரிதாக்கும் என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா? எனவே, எலுமிச்சையை அடிக்கடி உட்கொள்ளும் போது நீங்கள் நிறைய தண்ணீர் குடிப்பதையும் உறுதி செய்து கொள்ளவும்.
தலைமுடிக்கு அவ்வளவு நல்லதல்ல : எலுமிச்சை பழச்சாற்றை நேரடியாக தலைமுடியில் பயன்படுத்தினால் உங்கள் தலைமுடி வறண்டு நரைக்கும் என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா? எலுமிச்சையின் அமிலத்தன்மை, உங்கள் தலைமுடி தொடர்பான சிக்கலை இன்னும் மோசமாக்கலாம். இருப்பினும் பலரும் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட எலுமிச்சை பழத்தையே அதிகம் நம்புகின்றனர்.