தக்காளியின் நன்மைகளை சொல்ல வேண்டுமெனில் அவ்வளவு விஷயங்கள் உள்ளன. குறிப்பாக சரும பராமரிப்பில் தக்காளியைப் பயன்படுத்துவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும். இதில் உள்ள தாதுக்கள் சருமத்தை மேம்படுத்தி பொலிவாக்குகிறது. சமையலில் சேர்க்கும்போது உடலுக்கு பல சத்துக்களை அளிக்கிறது. ஆனால் தக்காளி விதைகள்? அது பயனுள்ளதா?
தக்காளி விதையில் வைட்டமின் சி மற்றும் உணவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. பழங்களைப் போலவே, விதைகளும் சருமத்தையும் இதயத்தையும் நன்றாக வைத்திருக்க உதவுகிறது. உடல் எடையை கட்டுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இதில் அமினோ அமிலங்கள் இருப்பதால், உணவின் ஊட்டச்சத்து தரத்தை அதிகரிக்கவும், உடலில் நல்ல கொழுப்பின் சமநிலையை பராமரிக்கவும் உதவுகிறது. உணவின் ஊட்டச்சத்தை உறிஞ்சி வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
அதாவது, செரிமான பிரச்சனைகள், அசிடிட்டி போன்ற பிரச்சனைகளால் நீண்ட நாட்களாக அவதிப்படுபவர்களுக்கு இது சிறிய அளவில் இருந்தாலும் நம் உடலுக்கு நச்சுத்தன்மை வாய்ந்தது. எனவே நீங்கள் இந்த பிரச்சனையில் இருந்தால், பச்சை தக்காளி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அதே நேரத்தில், நீங்கள் சமைக்கும் போது விதைகளை நீக்கிவிட்டு சமைப்பது நல்லது. இல்லையெனில், செரிமான பிரச்சனைகளுடன் நெஞ்செரிச்சல் போன்ற கடுமையான பிரச்சனைகள் தோன்றும், அதனுடன் மற்ற வழிகளில் உடல் அசௌகரியத்தை சந்திக்கும்.
சமைக்கும் நேரத்தில், சிலர் தக்காளியில் இருந்து விதைகளை நீக்கிவிடுவார்கள். மற்றவர்கள் விதைகளை ப்யூரியாக பயன்படுத்துவார்கள். விதைகளை நீக்கிவிட்டு சமைப்பதால் அதன் சுவையில் எந்த மாற்றமும் இருக்காது. எனவே நீங்கள் தக்காளி விதைகளை நீக்க விரும்பினால் தாராளமாக நீக்கிவிட்டு பயன்படுத்தலாம். ஒருவேளை எந்த பிரச்சனையும் உங்களுக்கு இல்லை எனில் விதைகளோடும் தக்காளியை சமையலில் சேர்க்கலாம்.