கோழி கறி : சிக்கனை எப்படி சமைத்தாலும் சுவையாக இருக்கும். அதற்காக மறுநாளும் சாப்பிட நினைத்து ஃபிரிஜ்ஜில் வைத்து மறுநாள் சூடுபடுத்தி சாப்பிட்டால் நிச்சயம் அது சிக்கன் அல்ல விஷம். அதில் புரோட்டின் சத்து நிறைந்துள்ளதால் முட்டையைப் போல் அதுவும் விஷமாக மாறும் அதேபோல் ஜீரண சக்தியையும் குறைத்துவிடும். அதேபோல் சிக்கனை அதிகளவிலான தீயில் சமைப்பதும் தவறு.
எண்ணெய் : ஆளிவிதை எண்ணெய், ஆலிவ் எண்ணெய், கடுகு எண்ணெய் ஆகியவற்றில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக இருக்கும். அவை மீண்டும் மீண்டும் சூடு படுத்தும் வகையில் வெப்ப நிலைக்கு உகந்ததல்ல. எனவே அவற்றை சமைக்கும்போதும் சேர்த்துக்கொள்வது தவறு. அவற்றை அப்படியே உணவில் , சாலட் வகைகளில் கலந்து சாப்பிடுவதுதான் சிறந்தது.