

மூலிகை டீ அருந்துவது உடலை ஆரோக்கிய வழியில் கொண்டு செல்வதற்காக காலையில் செய்யும் முதல் படி. இதை நீங்கள் தினமும் முறையாக செய்து வந்தாலே நோய் தாக்குதல்கள், உடல் உபாதைகளிலிருந்து தப்பிக்கலாம். அப்படி வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கும் மூலிகை டீ குறித்து பார்க்கலாம்.


லெமன் டீ : வைட்டமின் C சத்து நிறைந்த லெமன் உடலுக்கு ஆரோக்கியம் நிறைந்தது. கொழுப்பைக் குறைத்து உடல் எடையையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.


இஞ்சி டீ : அஜீரணக் கோளாறு, வாயுப் பிரச்சனைகளை நீக்கக் கூடியது. தினமும் ஒரு கப் குடித்தால் கெட்டக் கொழுப்புகளும் கரையும்.


செம்பருத்தி டீ : செம்பருத்திப் பூவினால் தயாரிக்கப்படும் இந்த டீ உடலுக்கு நல்ல இரத்த ஓட்டத்தை அளிக்கக் கூடியது.


துளசி டீ : துளசி இலைகளை அப்படியே சாப்பிட்டாலே பல நன்மைகளை தரும். அந்த வகையில் தினமும் டீயாக அருந்தும்போது இன்னும் பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.


பூண்டு டீ : பூண்டு டீ குடிப்பதால் இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம், வயிற்று புற்றுநோய், வாய் துர்நாற்றம், வாய் புண் போன்ற பிரச்னைகள் வராது. சளி, இறுமல் , காய்ச்சலுக்கு நல்ல மருந்தாக இருக்கும். குறிப்பாக பெண்களுக்கு வெஜினாவின் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த பூண்டு டீ உதவுமாம்.


பெப்பர் மிண்ட் டீ : இதில் வைட்டமின் A , C காப்பர், கால்சியம், மெக்னீசியம் என அனைத்தும் அடங்கிய மூலிகை டீ. மனதில் ஏற்பட்டிருக்கும் திடீர் அழுத்தத்திற்கும் இந்த டீ உதவும்.