தமிழகத்தில் இப்போது சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று டிரெண்ட் ஆகி வருகிறது. நன்கு கனிந்த வாழைப்பழத்தின் ஒரு பகுதியில் தோல் சிதைந்து, லேசாக அழுகியிருக்கும் நிலையில், அந்தப் பகுதியை வெட்டி எடுத்து ஒரு மைக்ரோஸ்கோப் கருவி மூலமாக பார்க்கின்றபோது அதில் எண்ணற்ற நுண் கிருமிகள் இருப்பதைப் போன்று அந்த வீடியோ உள்ளது. இவ்வாறு உள்ள பழத்தை சாப்பிடுவது உடல் நலனுக்கு கேடு என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அந்த வீடியோ அமைந்துள்ளது.
உடனே, கனிந்த வாழைப்பழம் என்றாலே அதை தூக்கி எறிந்து விட வேண்டுமா என்ற சந்தேகம் நம் மனதில் எழும். உண்மை என்னவென்றால் அதுபோல சிதைந்து, அழுகிய பழங்களை சாப்பிடக் கூடாது தான். ஆனால், வாழைப் பழத்தின் தோல் கொஞ்சம் கூட சிதையாமல், உள்ளே பழத்தின் வெள்ளை நிறம் மாறாமல் இருக்கின்ற கனிந்த பழங்களை நாம் தவறாமல் சாப்பிடலாம்.