இளைஞர்கள் மத்தியில் காஃபி பிரபலமாகி வருவதற்கு மாறிவரும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள், சோஷியல் மீடியாக்களில் காஃபி குறித்து ஷேர் செய்யப்படும் நல்ல விஷயங்கள் மற்றும் ட்ரெண்டி காஃபி ஷாப்களின் அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கலாம். இளைய தலைமுறையினரிடையே காஃபி பிரபலமாகி வருவது காஃபி தொழிலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேம்படுத்தப்பட்ட அறிவாற்றல் செயல்பாடு : காஃபின் என்பது மனம் மற்றும் உடலை இயற்கையாகவே சுறுசுறுப்படைய செய்யும் ஒரு நேச்சுரல் சிடிமுலேன்ட் ஆகும். இது உங்களை விழிப்புடன் மற்றும் கவனத்துடன் இருக்க உதவுகிறது. தற்போதைய தலைமுறை இளைஞர்கள் ஃபாஸ்ட்டான லைஃப் ஸ்டைலை கொண்டுள்ளனர். இத்தகைய வேகமான வாழ்க்கை முறைக்கு மத்தியில் மனதை புத்துணர்ச்சியடைய செய்ய மற்றும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வேலை செய்ய சரியான தீர்வாக காஃபி செயல்படுகிறது. நாம் ழுழுவதும் அதிக நேரம் வேலை செய்வதற்கும் சரி அல்லது இரவு நேரம் கண்விழித்து படிக்க வேண்டிய சூழலாக இருந்தாலும் சரி, ஒரு ஷாட் காஃபின் எடுப்பது உற்பத்தித்திறனில் அதிசயத்தக்க வகையில் மாற்றங்களை ஏற்படுத்தும்.
உடல் செயல்திறனை அதிகரிக்கிறது : காபியில் உள்ள காஃபின் நமது உடலில் அட்ரினலின் அளவை அதிகரிப்பதன் மூலம் உடல் செயல்திறனை (Physical Performance) அதிகரிக்கிறது. மேலும் இதய துடிப்பு, ரத்த அழுத்தம் மற்றும் தசைகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் காஃபின் வழிவகுக்கிறது, இது உடற்பயிற்சியின் போது மேம்படுத்தப்பட்ட செயல்திறனுக்கு உதவுகிறது. வொர்க்அவுட் செய்வதற்கு முன் காஃபி குடிப்பது சோர்வை குறைக்கவும், நீண்ட நேரம் ஒர்கவுட்ஸ்களை செய்வதற்கான திறனையும் அதிகரிக்க உதவும். எனவே ஜிம் செல்லும் இளைஞர்கள் மத்தியில் காஃபி கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகி வருகிறது.
ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் : ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்களின் சிறந்த மூலமாக காஃபி இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா.! கேன்சர் மற்றும் இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும் தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகளான ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களால் ஏற்படும் சேதத்திலிருந்து உங்கள் உடலைப் பாதுகாக்கும் கலவைகள் காஃபியில் அடங்கி இருக்கின்றன. எனவே, காஃபி நம் உடலை ஆரோக்கியமாக மற்றும் உற்சாகமாக வைத்திருக்கவும் உதவுகிறது.
டிப்ரஷனை குறைக்கிறது : வழக்கமான அடிப்படையில் காஃபி குடிப்பது டிப்ரஷன் அபாயத்தைக் குறைக்க உதவும் என சில ஆய்வுகள் பரிந்துரைத்துள்ளன. இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை முறைக்கு மத்தியில் காஃபியில் உள்ள காஃபின் அவர்களின் மனநிலை ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், டிப்ரஷன் அறிகுறிகள் ஏற்படும் அபாயத்தை குறைக்கவும் உதவுகிறது.