இதனால் அவர்கள் எப்போதும் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டியிருக்கும். ஜிங்க் (Zinc) அதாவது துத்தநாகம் பல உடல் செயல்பாடுகளுக்கு தேவைப்படும் முக்கிய மினரல் ஆகும். நோயெதிர்ப்பு மண்டலத்தின் முறையான செயல்பாடு, ப்ரோட்டீன் சிந்தஸிஸ், காயம் குணமாக, டிஎன்ஏ சிந்தஸிஸ் மற்றும் செல் டிவிஷன் உள்ளிட்ட பலவற்றுக்கு ஜிங்க் அவசியம். தவிர இயல்பான கரு வளர்ச்சி, குழந்தைகளின் வளர்ச்சி, இளம் பருவத்தினர் என அனைத்து தரப்பினரின் உடல் வளர்ச்சியையும் ஜிங்க் ஊக்குவிக்கிறது. எனவே பெண்கள் தங்கள் டயட்டில் அடிக்கடி ஜிங்க் சேர்த்து கொள்ள நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். பெண்கள் தங்கள் டயட்டில் ஜிங்க் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகளின் பட்டியல் இங்கே.
இனப்பெருக்க ஆரோக்கியம்: ஒரு பெண்ணின் இனப்பெருக்க அமைப்பின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளுக்கு துத்தநாகம் மிகவும் அவசியமானது. மேலும் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு ஜிங்க் சப்போர்ட் செய்கிறது. Sexual maturation, கருவுறுதல் மற்றும் வழக்கமான மாதவிடாய் சுழற்சிக்கு தேவையான ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் போன்ற முக்கிய ஹார்மோன்களை உடல் உற்பத்தி செய்வதில் ஜிங்க் முக்கிய பங்கு வகிக்கிறது.
சரும ஆரோக்கியம்: ஜிங்க்கில் அடங்கியிருக்கும் ஆன்டிமைக்ரோபியல் (antimicrobial) பண்புகள் முகப்பரு, அரிக்கும் தோலழற்சி மற்றும் பிற சரும பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை தவிர்க்க உதவுகிறது. மேலும் ஜிங்க்கானது கொலாஜன் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு ஆரோக்கிய சருமத்தை பாதுகாக்கவும் மற்றும் வயதான அறிகுறிகளை குறைக்கவும் உதவுகிறது.
பெண்களுக்கு எவ்வளவு தேவைப்படுகிறது? : Mayoclinic.org தகவலின்படி பெண்கள் ஒரு நாளைக்கு 8 மில்லிகிராம் (மி.கி) துத்தநாகம், ஆண்கள் ஒரு நாளைக்கு 11 மில்லிகிராம் துத்தநாகம் எடுத்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக பெண்கள் தங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு, அறிவாற்றல் திறன் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் உள்ளிட்டவற்றை சிறப்பாக பராமரிக்க தினசரி போதுமான அளவு துத்தநாகத்தை எடுத்து கொள்வது முக்கியம். துத்தநாகத்தின் சிறந்த ஆதாரங்களில் கடல் உணவு, சிக்கன், ரெட் மீட், பீன்ஸ், நட்ஸ் மற்றும் முழு தானியங்கள் உள்ளிட்டவை அடங்கும்.