ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » காலையில் வெறும் வயிற்றில் வெல்லம் கலந்த நீர் குடித்தால் உடலுக்கு நல்லது : ஏன் தெரியுமா..?

காலையில் வெறும் வயிற்றில் வெல்லம் கலந்த நீர் குடித்தால் உடலுக்கு நல்லது : ஏன் தெரியுமா..?

நமது மெட்டபாலிசத்தை மேம்படுத்தும் வகையிலும், உடல் எடையை குறைக்கவும் வெல்லத்தை நீங்கள் எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறித்து இந்தச் செய்தியில் டிப்ஸ் இடம்பெற்றுள்ளது.

 • 16

  காலையில் வெறும் வயிற்றில் வெல்லம் கலந்த நீர் குடித்தால் உடலுக்கு நல்லது : ஏன் தெரியுமா..?

  வெல்லம் நம் உடலை வெதுவெதுப்பான வெப்ப நிலையில் வைத்துக் கொள்ளும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். குளிர் காலத்தில் இதுதான் சிறப்பான மருந்து பொருளாக அமையும். பொதுவாக லட்டு, மைசூர்பாகு போன்ற இனிப்புகளில் வெல்லம் சேர்த்து நாம் திட வடிவ உணவுப் பொருள்களாக எடுத்துக் கொள்கிறோம்.

  MORE
  GALLERIES

 • 26

  காலையில் வெறும் வயிற்றில் வெல்லம் கலந்த நீர் குடித்தால் உடலுக்கு நல்லது : ஏன் தெரியுமா..?

  அதே சமயம், நமது மெட்டபாலிசத்தை மேம்படுத்தும் வகையிலும், உடல் எடையை குறைக்கவும் வெல்லத்தை நீங்கள் எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறித்து இந்தச் செய்தியில் டிப்ஸ் இடம்பெற்றுள்ளது. அதாவது வெல்லத்தை திட வடிவில் இல்லாமல் திரவ வடிவில் வெல்ல நீராக எடுத்துக் கொண்டால் இதன் மூலமாக நமக்கு பலன் கிடைக்கும்.

  MORE
  GALLERIES

 • 36

  காலையில் வெறும் வயிற்றில் வெல்லம் கலந்த நீர் குடித்தால் உடலுக்கு நல்லது : ஏன் தெரியுமா..?

  வெல்லத்தின் பலன்கள் : நம் உடல் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்கு வெல்லம் தீர்வாக அமையும். இது நம் உடலுக்கு வெப்பநிலையை தரும். இதில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலேட் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. அது நம் ரத்தத்தை சுத்திகரிக்கும். ஹீமோகுலோபின் அளவுகளை மேம்படுத்தி நம் மூளைக்கு செல்ல வேண்டிய ஆக்ஸிஜன் சப்ளையை அதிகரிக்கும். மூச்சுக்குழாய், நுரையீரல், வயிறு மற்றும் உணவுக் குழாய் போன்றவற்றை சுத்தம் செய்கிறது.

  MORE
  GALLERIES

 • 46

  காலையில் வெறும் வயிற்றில் வெல்லம் கலந்த நீர் குடித்தால் உடலுக்கு நல்லது : ஏன் தெரியுமா..?

  வெல்லம் கலந்த நீர் என்றால் என்ன? இயற்கையாகவே கழிவுகளை வெளியேற்றக் கூடிய திறன் வெல்லம் தண்ணீருக்கு உண்டு. இது உங்கள் செரிமானக் கட்டமைப்பை மேம்படுத்தும். வயிறு நிரம்ப சாப்பிடும் தருணங்களில் கூட செரிமானத்திற்காக நீங்கள் கொஞ்சம் வெல்லம் கலந்த நீரை அருந்தலாம். அதிகாலை பொழுதில் வெல்லம் கலந்த நீரை அருந்தினால் உடனடியாக அது உங்கள் உடலுக்கு ஆற்றல் கொடுக்கும்.

  MORE
  GALLERIES

 • 56

  காலையில் வெறும் வயிற்றில் வெல்லம் கலந்த நீர் குடித்தால் உடலுக்கு நல்லது : ஏன் தெரியுமா..?

  வெல்லம் கலந்த நீரை தயாரிப்பது எப்படி? ஒரு கடாயில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி அதை சூடேற்றவும். தண்ணிரி கொதித்தவுடன் சிறு துண்டு வெல்லத்தை போட்டு, அது கரையும் வரை கலக்கி விடவும். அந்த நீர் வெதுவெதுப்பாக இருக்கும்போதே அதிகாலைப் பொழுதில் அருந்தலாம். வெல்லம் கலந்த நீர் ஆறிவிட்டால் மீண்டும் பாகு போல ஆகிவிடும். ஆகவே, லேசான வெதுவெதுப்பில் பருகிவிடவும். வெறும் வெல்லம் கலந்த நீர் தித்திப்பாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் பாலில் கலந்து குடிக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 66

  காலையில் வெறும் வயிற்றில் வெல்லம் கலந்த நீர் குடித்தால் உடலுக்கு நல்லது : ஏன் தெரியுமா..?

  வெல்லத்தில் உள்ள சத்துகள் : வெல்லத்தில் பொட்டாசியம் மற்றும் சோடியம் ஆகிய சத்துகள் உள்ளன. இது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குறிப்பாக மூட்டு வலி உள்ளவர்களுக்கு இது நிவாரணம் தரும். காலைப் பொழுதில் வெல்ல நீர் அருந்தினால் அது நம் உடலில் உள்ள கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றுவதோடு மட்டுமல்லாமல் சருமத்திற்கு இயற்கையான பொலிவு தரும். வெல்ல நீர் பருகுவதால் பல நன்மைகள் உண்டு என்றாலும் சர்க்கரை நோயளிகள் உள்பட உடல் ரீதியாக சில பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.

  MORE
  GALLERIES