தென்னிந்திய உணவுகளுக்கு ஈடான ருசி வேறெதுவும் கிடையாது. குறிப்பாக தமிழ் கலாச்சாரத்தில் உணவே மருந்து என்றொரு பழமொழி உண்டு. ஏனென்றால் இங்கு உணவுகளில் மூலிகைகள் மற்றும் வாசனை பொருட்கள் நேரடியாக சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. செட்டிநாடு குழம்பு, இட்லி, தோசை என்று பிரபலமான உணவு வகைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இதில் எளிமையாக 60 நிமிடங்களுக்குள் தயார் செய்யக் கூடிய 5 உணவுகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
ரவா வடை : ரவை மற்றும் தயிர் சேர்ந்து பிசைந்து வைக்கவும். இதனுடன் வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சீரகம், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி சுமார் 15 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வடை தட்டி பொறித்து எடுக்கவும்.
ரவா ஊத்தப்பம் : நீங்கள் வெளியூருக்கு சென்று திரும்பி வரும் நிலையில், வீட்டில் எதுவும் இல்லாதபோது எளிமையாக இதை தயார் செய்யலாம். முதலில் ஒன்றுக்கு, ஒன்று என்ற சம அளவில் ரவை, தண்ணீர் சேர்த்து, பின்னர் தேவையான அளவு உப்பும் சேர்த்து, கலக்கி வைக்கவும். வெங்காயம், தக்காளி, காரட், மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். இதை தயிருடன் சேர்த்து கலக்கவும். இதை சூடான தோசைக்கல்லில் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து சுட்டு எடுக்கவும்.
தயிர் சாதம் : தயிர் சாதம், கருவாட்டுக் குழம்பு அல்லது மாவத்தல் ஊறுகாய்க்கு ஈடான எளிமையான, எல்லோருக்கும் உகந்த உணவு வேறெதுவும் கிடையாது. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளித்து, அதை தயிரில் ஊற்றவும். ஆறிய சாதத்தில் இந்த தயிர் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, கொத்தமல்லி தூவி பரிமாறலாம்.
ரவா வடை : ரவை மற்றும் தயிர் சேர்ந்து பிசைந்து வைக்கவும். இதனுடன் வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சீரகம், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி சுமார் 15 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வடை தட்டி பொறித்து எடுக்கவும்.
பனியாரம் : ஒரு பாத்திரத்தில் ரவை, உப்பு, தயிர் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்கவும். இதற்குப் பிறகு கடலைப் பருப்பு சேர்த்து வறுக்கவும். பிறகு பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இறுதியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இந்த தாளிதத்தை ரவை கலவையில் சேர்த்து கலக்கி, பனியார சட்டியில் எண்ணெய் விட்டு பொறித்து எடுக்கவும்.
ரசம் : வெங்காயம், பூண்டு இடித்து வைத்துக் கொள்ளவும். புளி கரைசல் எடுத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடகு போட்டு பொறிக்கவும். பின்னர் மிளகாய் வத்தல், கறிவேப்பில்லை போட்டு வதக்கவும். வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதங்கியதும், தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் சீரகம், மிளகுத் தூள் சேர்த்து வதங்கியதும் புளி கரைசலை ஊற்றவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கவும். கொத்தமல்லி தூவி பரிமாறலாம்.