சிவப்பு பீன்ஸ் என அழைக்கப்படும் ராஜ்மா ஆங்கிலத்தில் ரெட் கிட்னி பீன்ஸ் என அழைக்கபடுகிறது. இந்த ராஜ்மாவுக்கு சிவப்பு காராமணி என்று மற்றொரு பெயரும் உள்ளது. ராஜ்மாவில் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, புரோட்டின், நார்ச்சத்து இவைகள் அனைத்தும் அதிக அளவில் அடங்கியுள்ளது. ராஜ்மாவில் அடங்கியிருக்கும் அதிக அளவு நார்ச்சத்தானது உடல் எடையை சீராக வைக்கிறது. நார்ச்சத்து பசி உணர்வை கட்டுப்படுத்தும். இதன் மூலம் நாம் உண்ணும் உணவின் அளவானது குறையும். இந்த பிரபலமான இந்திய உணவு நிகரற்ற சுவைக்காக மட்டுமல்லாமல், இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. ராஜ்மாவின் அற்புதமான நன்மைகளைப் பற்றி, உணவியல் நிபுணரும் ஃபிடெலோவின் நிறுவனருமான மேக் சிங், இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ராஜ்மா எடை இழப்புக்கு சிறந்த உணவு என தெரிவித்துள்ளார். ராஜ்மாவில் இருக்கும் நன்மைகள்..
ராஜ்மாவில் அடங்கியிருக்கும் அதிக அளவு நார்ச்சத்தானது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது. நார்ச்சத்து பசி உணர்வை கட்டுப்படுத்தும். இதன் மூலம் நாம் உண்ணும் உணவின் அளவானது குறையும். இதனால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த பருப்பை தொடர்ந்து சாப்பிடலாம். இதனால் நீண்ட நேரம் பசி ஏற்படாமல் நம்மை வைத்திருக்க உதவும். மேலும் இது கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்க உதவுகிறது.
ராஜ்மா மற்றும் அரிசியில் 9 அத்தியாவசிய அமினோ அமிலங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதனை தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் அதன் பலன் அதிகரிக்கும் என்பதும் தெரியவந்துள்ளது. வெள்ளை அரிசியில் ஜிஐ அதிகமாக இருந்தாலும், குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்ட உணவுகளை உயர் நடுத்தர உணவுகளுடன் இணைப்பது உடல் எடையைக் குறைக்கிறது. ஒரு கப் சிவப்பு பீன்ஸில் கிட்டதட்ட 29 கிளைசெமிக் குறியீடு கொண்டிருக்கிறது. இது முட்டை, இட்லி ஆகிய எளிய உணவுகளின் கிளைசெமிக் குறியீட்டை விட குறைவானது.
ராஜ்மா சாவல் உடலில் இருந்து தேவையற்ற நீரை அகற்றி எடையை குறைக்கவும், உயர் இரத்த அழுத்தம் உள்ள நபர்களுக்கும் நன்மை பயக்கும் உணவாக உள்ளது. பொட்டாசியம் ரத்த சர்க்கரையை நிர்வகிப்பது மட்டுமல்லாமல் உடலில் சோடியத்தின் தாக்கத்தையும் குறைக்கிறது. இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் ஆபத்துகள் குறைகின்றன.
நீங்கள் விரும்பி உண்ணும் உணவின் மூலம் உடலில் மகிழ்ச்சியான ஹார்மோன்கள் வெளியேறுகின்றன. இதன் காரணமாக உங்கள் எடையை கணிசமாகக் குறைக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. ராஜ்மாவில் மெக்னீசியம், கால்சியம் மற்றும் மாலிப்டினம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன, இது உணவுகளில் அரிதாகவே காணப்படுகிறது. இவையனைத்தும் எலும்புகளை வலுவடையச் செய்யும்.
ராஜ்மாவை நீங்கள் சாப்பிட பயன்படுத்துவதற்கு முந்தைய நாள் இரவு அதை ஊறவைக்க வேண்டும்.. ராஜ்மாவில் அதிகப்படியான அமிலத்தன்மை உள்ளதாக கூறப்படும் நிலையில், அவற்றை குறைக்க ஒரு சிட்டிகை உப்பைச் சேர்த்து ஊறவைக்கவும். மறுநாள் காலையில் அதை நன்கு கழுவி, வேகவைத்து மதிய உணவு நேரத்தில் சாப்பிட வேண்டும். இதனை தயிர் மற்றும் புதினா சட்னியுடன் சேர்த்து சாப்பிடுவதன் மூலமும் அதன் அமிலத்தன்மையை குறைக்கலாம்.