ஒரு காலத்தில் வடை, பஜ்ஜி, முறுக்கு, கடலை மிட்டாய் ஆகியவை மட்டுமே நொறுக்கு தீனியாக இருந்தது. ஆனால் இப்போது நொறுக்குத்தீனிகளில் கூட ஏகப்பட்ட ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. குறிப்பாக வடமாநில உணவுகளான பானி பூரி, சமோசா, பாவ் பாஜி ஆகியவற்றிற்கு விரும்பி உண்ணாதவர்கள் இருக்க முடியாது. குறிப்பாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஸ்நாக்ஸ் வகைகள் தான் தமிழகத்தில் விற்பனையில் கொடி கட்டி பறக்கின்றன.
பாவ் பாஜி: ‘பாவ் பாஜி’ யாருக்கு தான் பிடிக்காது?. மகாராஷ்டிராவையும் கடந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல மாநில மக்களும் விரும்பி உண்ணும் ஸ்ட்ரீட் ஃபுட்டாக உள்ளது. இதில் பாவ் என்பது பட்டாணி, காலிஃபிளவர், தக்காளி, குடமிளகாய் ஆகியவற்றுடன் வெண்ணெய், மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மசாலா பொருட்கள் தயாரிக்கப்படும் கிரேவி ஆகும். அத்துடன் தவாவில் வெண்ணெய் சேர்த்து உருக்கி, பன்களைப் போட்டு இருபுறமும் டோஸ்ட் செய்து எடுத்தால் பாவ் ரெடி. இதனை எலுமிச்சை துண்டு, கொத்தமல்லி, வெங்காயம் தூவி சூட, சூட பரிமானால் சாப்பிட்டுக்கொண்டே இருக்க தோன்றும்.
ரகடா பட்டீஸ்: மகாராஷ்டிராவின் மிகவும் பிரபலமான ஸ்ட்ரீட் ஃபுட் ஒன்றாகும், இந்த காரமான சுவையான ரகடா பட்டீஸ் ரகடா மற்றும் பஜ்ஜி என இரண்டு பகுதிகளாக தயாரிக்கப்படுகிறது. உருளைக்கிழங்குடன் உப்பு, பிரெட் தூள், பச்சை மிளகாய் - பூண்டு விழுது, மஞ்சள்தூள், சீரகத்தூள், மல்லித்தூள், சாட் மசாலாத்தூள் சேர்த்துப் பிசையவும். பிறகு, மாவைச் சிறிய உருண்டைகளாக்கி சற்று தடிமனாக தட்டிக்கொண்டால் பாட்டீஸ் ரெடி, வெங்காயம், தக்காளி மற்றும் மல்லித்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், மாங்காய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு போன்ற மசாலா பொருட்களுடன் ஊறவைத்த வேகவைத்த பட்டாணி சேர்ப்பது ரகடா ஆகும். இந்த ரகடா பட்டீஸ் க்ரீன் சட்னி அல்லது ஸ்வீட் சட்னியுடன் பரிமாறப்படுகிறது.
வடா பாவ்: மகாராஷ்டிராவில் மட்டுமல்லாது நாட்டின் பெரும்பாலான மாநிலத்தவர்களின் மனம் கவர்ந்த மெனுவாக வடா பாவ் உள்ளது. இது நம்ம உருளைக்கிழக்கு போண்டாவிற்குள் வைப்பது போன்ற மசாலாவை பாவ் எனப்படும் பன்னுக்குள் வைத்து கொடுப்பது தான். வேகவைத்து மசாலா சேர்க்கப்பட்ட உருளைக்கிழங்கை வடா என அழைக்கின்றனர். அதனை பாவ் எனப்படும் பன்னிற்குள் வைத்து, கூடவே எண்ணெய்யில் நன்றாக வறுத்த பச்சை மிளகாய் உடன் காரசாரமாக பரிமாறுவது தான் ‘வடா பாவ்’ என அழைக்கப்படுகிறது.
பேல் பூரி: மகாராஷ்டிரா உணவு வகைகளிலேயே ஈஸியாக செய்யக்கூடியது இது தான். இதனை நாம் சுலபமாக வீட்டிலேயே 15 நிமிடங்களில் செய்து விடலாம். பாம்பே ஸ்டைல் பேல் பூரியை எப்படி செய்வது என பார்க்கலாம்... வாணலியில் எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும் கடலை பருப்பு, வேர்க்கடலை ஆகியவற்றை சேர்ந்து நன்றாக பொன்னிறமாகும் வரை வறுத்து, எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். மற்றொரு பவுலில் பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயம், தட்டுவடை, தக்காளி, உருளைக்கிழக்கு, பொறி, சிறிதளவு உப்பு, எலுமிச்சை சாறு கலந்து நன்றாக கலக்கி, கொந்தமல்லி தூவி பரிமாறுங்கள்.
கண்டா போஹா: மகாராஷ்டிரா எப்போதுமே போஹாவிற்கு பெயர் போனது. பல வகையான போஹா ரெசிப்பிக்களின் தாயகமாக மகாராஷ்டிரா உள்ளது.அதில் முக்கியமான உணவு கண்டா போஹா ஆகும். இதில் கண்டா என்பது வெங்காயத்தை குறிக்கிறது, போஹா நம் அனைவருக்கும் நன்கு அறிமுகமான அவுல் தான். வாணாலில் நன்றாக எண்ணெய் ஊற்றி, மஞ்சள், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்ந்து நன்றாக வதக்க வேண்டும், அத்துடன் ஊறவைத்து கழுவி எடுக்கபட்ட போஹாவை சேர்ந்து கிளறி இறக்கிக்கொள்ளுங்கள். இத்துடன் மஞ்சள் நிற சேவ், மொறுமொறுப்பான பாதாம் ஆகியவற்றை தூவினால் கண்டா போஹா ரெடி.