முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » சிவப்பு மிளகாய் தூள் தரும் இந்த 7 நன்மைகளை பற்றி தெரியுமா..?

சிவப்பு மிளகாய் தூள் தரும் இந்த 7 நன்மைகளை பற்றி தெரியுமா..?

இந்த சிவப்பு மிளகாய் தூளானது செரிமானத்திற்கும் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைப்பதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், ரத்த நாளங்களை இலகுவாக்குவதற்கும் உதவுகிறது.

  • 18

    சிவப்பு மிளகாய் தூள் தரும் இந்த 7 நன்மைகளை பற்றி தெரியுமா..?

    காரமான மசாலா உணவுகள் நம் உடலுக்கு பெரும்பாலும் ஆரோக்கியமானவை தான். பல நூற்றாண்டுகளாக இவற்றின் மருத்துவ தன்மைக்காகவும் சுவைக்காகவும் அறியப்பட்டு வருகின்றன. பெரும்பாலான இந்தியர்களின் உணவு வகைகளின் மிளகாய் இடம்பெறாமல் இருக்காது. என்ன விதமான உணவுப்பொருள் சமைத்தாலும் பெரும்பாலான நேரங்களில் அவற்றில் மிளகாய்த்தூள் பயன்படுத்தியே நாம் உணவுப் பொருட்களை தயார் செய்வோம்.

    MORE
    GALLERIES

  • 28

    சிவப்பு மிளகாய் தூள் தரும் இந்த 7 நன்மைகளை பற்றி தெரியுமா..?

    அவ்வாறு நாம் அடிக்கடி பயன்படுத்தும் மசாலா பொருட்களில் முக்கியமானது தான் சிவப்பு மிளகாய். நாடு முழுவதுமே பல விதமான உணவு வகைகளை தயாரிப்பதற்கு சிவப்பு மிளகாய்த்தூள் பயன்படுகிறது. மிளகாயை நன்றாக காய வைத்து பிறகு தூளாக அரைத்து மிளகாய் பொடி தயார் செய்யப்படுகிறது. இந்த சிவப்பு மிளகாய் தூளானது செரிமானத்திற்கும் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைப்பதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், ரத்த நாளங்களை இலகுவாக்குவதற்கும் உதவுகிறது. இதுபோல சிகப்பு மிளகாய் பயன்படுத்துவதால் கிடைக்கும் 7 நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.

    MORE
    GALLERIES

  • 38

    சிவப்பு மிளகாய் தூள் தரும் இந்த 7 நன்மைகளை பற்றி தெரியுமா..?

    ரத்த அழுத்தத்தை சரி செய்ய உதவுகிறது: சிவப்பு மிளகாயில் உள்ள பொட்டாசியம் ரத்த நாளங்களை இலகுவாக்கி ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. எனவே ரத்த அழுத்த குறைபாடு உள்ளவர்களுக்கு இது மிகப்பெரிய மருந்தாக இருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 48

    சிவப்பு மிளகாய் தூள் தரும் இந்த 7 நன்மைகளை பற்றி தெரியுமா..?

    உடல் எடை குறைப்பு: சிவப்பு மிளகாயில் உள்ள கேப்சைசின் என்பது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகப்படுத்த உதவுகிறது. இதன் காரணமாக நமது உடலின் கலோரிகள் அதிக அளவில் எரிக்கப்பட்டு உடல் எடையை குறைக்க உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 58

    சிவப்பு மிளகாய் தூள் தரும் இந்த 7 நன்மைகளை பற்றி தெரியுமா..?

    நோய் எதிர்ப்பு சக்தி: சிவப்பு மிளகாயில் உள்ள வைட்டமின் சி ஆனது அதிக அளவில் காணப்படுகிறது. இவை நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து அவ்வப்போது ஏற்படும் உடல் உபாதைகளை தவிர்க்க உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 68

    சிவப்பு மிளகாய் தூள் தரும் இந்த 7 நன்மைகளை பற்றி தெரியுமா..?

    தலைமுடி மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது: சிவப்பு மிளகாயில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ ஆகியவை நமது தலைமுடி மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆனால் நேரடியாக நாம் சிவப்பு மிளகாய் தூளை சருமத்தில் பயன்படுத்தக் கூடாது.

    MORE
    GALLERIES

  • 78

    சிவப்பு மிளகாய் தூள் தரும் இந்த 7 நன்மைகளை பற்றி தெரியுமா..?

    அழற்சி எதிர்ப்பு தன்மை: நமது தசைகளில் அல்லது மூட்டு இணைப்புகளிலும் வலி அதிகம் இருந்தால் சிவப்பு மிளகாய் அதற்கு நல்ல தீர்வாக அமையும். இது அழற்சி தன்மையை குறைப்பதுடன் வலியையும் குறைக்க உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 88

    சிவப்பு மிளகாய் தூள் தரும் இந்த 7 நன்மைகளை பற்றி தெரியுமா..?

    செரிமானத்திற்கு உதவுகிறது: சிவப்பு மிளகாய் நமது செரிமான திறனை அதிகரிக்க உதவுகிறது. மேலும் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு அதில் இருந்து நிவாரணம் அளிக்கவும் இது பயன்படுகிறது. ஆனால் அதிக அளவு சிவப்பு மிளகாய் தூளை நாம் உணவில் பயன்படுத்தும் போது அவை வயிற்றுப்போக்கு ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    MORE
    GALLERIES