முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » இதய ஆரோக்கியத்திற்கு உதவும்... மாதுளை பழத்தில் இத்தனை சத்துக்களா?

இதய ஆரோக்கியத்திற்கு உதவும்... மாதுளை பழத்தில் இத்தனை சத்துக்களா?

ரெட் வயின், க்ரீன் டீயில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்களை விட 3 மடங்கு அதிகமாக மாதுளையில் உள்ளது.

  • 17

    இதய ஆரோக்கியத்திற்கு உதவும்... மாதுளை பழத்தில் இத்தனை சத்துக்களா?

    இன்றைய காலகட்டத்தில் பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவு முறைகள் காரணமாக, கிட்டத்தட்ட ஒவ்வொரு நபரும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். மனிதனின் உடலில் சரியான இரத்த அழுத்தத்தை பராமரிப்பதில் உங்கள் உணவு ஒரு பெரிய பங்கு வகிக்கிறது. மேலும், உப்பு உட்கொள்ளலைக் குறைப்பதை விட சரியான இரத்த அழுத்தத்தை பராமரிக்க இன்னும் நிறைய இருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 27

    இதய ஆரோக்கியத்திற்கு உதவும்... மாதுளை பழத்தில் இத்தனை சத்துக்களா?

    பழங்கள், காய்கறிகள், குறைந்த கொழுப்புள்ள பால் உணவுகள், பீன்ஸ், பருப்புகள், முழு தானிய கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழங்கள் சரியான ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகின்றன. ஒவ்வொரு உணவிலும் போதுமான அளவு பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் சேர்க்கப்பட வேண்டும். இந்தப் பதிவில் உடலுக்கு மிகுந்த ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடிய மாதுளை பழத்தின் நன்மைகளைப் பற்றி பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 37

    இதய ஆரோக்கியத்திற்கு உதவும்... மாதுளை பழத்தில் இத்தனை சத்துக்களா?

    மாதுளை உங்கள் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் பழங்களில் ஒன்றாகும். மாதுளை பழத்தில் ஏராளமான சத்துக்கள் இருக்கின்றன. குறிப்பாக மாதுளம் பழம் சாப்பிடுவது பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், கருப்பையை ஆரோக்கியமாக்கும், மாதவிடாயை சீர்படுத்தும், ஹீமோகுளோபினை அதிகரிக்கும் என்று பல நன்மைகள் இருக்கின்றன.

    MORE
    GALLERIES

  • 47

    இதய ஆரோக்கியத்திற்கு உதவும்... மாதுளை பழத்தில் இத்தனை சத்துக்களா?

    கிரீன் டீயில் இருப்பதை விட மூன்று மடங்கு அதிகமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மாதுளையில் உள்ளன. மாதுளை இதய தமனிகளைச் சுத்தப்படுத்தவும், ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும் பழமாக உள்ளது. நம் அன்றாட காலை உணவில் மாதுளை பழம் தவறாமல் இடம்பெற வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 57

    இதய ஆரோக்கியத்திற்கு உதவும்... மாதுளை பழத்தில் இத்தனை சத்துக்களா?

    மாதுளை மிகவும் சக்தி வாய்ந்த ஆன்டி-அத்தரோஜெனிக் ஏஜென்ட். மாதுளை விதைகளின் சிவப்பு நிறத்திற்கு அதிலிருக்கும் பாலிபினால்கள் தான் காரணமாகும். ரெட் வயின், க்ரீன் டீயில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்களை விட 3 மடங்கு அதிகமாக மாதுளையில் உள்ளது. இதனால் செல் பாதிப்பு மற்றும் அழற்சி தொற்றுகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

    MORE
    GALLERIES

  • 67

    இதய ஆரோக்கியத்திற்கு உதவும்... மாதுளை பழத்தில் இத்தனை சத்துக்களா?

    இந்த சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், தமனிகளை சுத்தப்படுத்துகின்றன, இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன. இதயத்தைப் பாதுகாக்கின்றன.இரத்த நாளங்களில் அடைப்பைத் தடுக்கின்றன. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், ஒரு நாளைக்கு 3 மாதுளை பழங்களை தொடர்ந்து 3 மாதங்களுக்கு உட்கொள்வது நல்லது. இது அவர்களின் இருதய ஆரோக்கியத்திற்கு நல்ல பயனளிக்கும். இரத்தத்தில் ஆக்ஸிஜனேற்றத்தை வழங்குகிறது.

    MORE
    GALLERIES

  • 77

    இதய ஆரோக்கியத்திற்கு உதவும்... மாதுளை பழத்தில் இத்தனை சத்துக்களா?

    மாதுளை பழச்சாறுகளில் டானின்கள் மற்றும் அந்தோசயினின்கள் உள்ளன. அவை ஆன்டி-அத்தோஜெனிக் பண்புகளைக் கொண்டுள்ளன. இதயத்தின் பெருந்தமனி தடிப்பு மற்றும் இருதய நோய்களைத் தடுக்கின்றன. பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை சமன் செய்கிறது.

    MORE
    GALLERIES