தாவர அடிப்படையிலான உணவை உண்ணும் ஆண்களுக்கு குறிப்பிட்ட புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து குறைவாக இருப்பதாக ஒரு புதிய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இறைச்சிகள் நிறைந்த டயட்டை வழக்கமாக பின்பற்றுவதை விட தாவர அடிப்படையிலான காய்கறிகள் மற்றும் பழங்களை உள்ளடக்கிய டயட்டை பின்பற்றுவது ஆண்களில் குடல் புற்றுநோயின் அபாயத்தை குறைப்பதாக BMC மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு கூறுகிறது.
சிறந்த ஆரோக்கியத்தை பெற விரும்பும் ஆண்கள் இறைச்சி உணவுகளுக்கு பதிலாக காய்கறிகள், முழு தானியங்கள், பழங்கள் என தங்கள் டயட்டை மாற்றுவது குடல் சார்ந்த கேன்சர் அபாயங்களை பாதிக்கும் மேல் எளிதாக குறைக்கலாம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டு உள்ளனர். இந்த புதிய ஆய்வின்படி தென் கொரியாவை சேர்ந்த கியுங் ஹீ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், நட்ஸ்கள் மற்றும் பருப்பு வகைகளை அதிகம் டயட்டில் சேர்த்து கொள்ளும் ஆண்களுக்கு குடல் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பு சுமார் 22% குறைவாக இருப்பதை கண்டறிந்தது உள்ளனர்.
இது தொடர்பான ஆய்வு அமெரிக்காவில் சுமார் 80,000 ஆண்கள் மற்றும் சுமார் 93,000-க்கும் மேற்பட்ட பெண்களிடம் நடத்தப்பட்டது. சுமார் 80,000 ஆண்களை உள்ளடக்கிய இந்த ஆய்வில் மீட்-ஹெவி உணவுகளை அதிகம் எடுத்து கொள்பவர்களுடன் ஒப்பிடும்போது, தாவர அடிப்படையிலான உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு குடல் புற்றுநோயின் அபாயம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டதாக ஆய்வாசிரியர்களில் ஒருவரான ஜிஹியே கிம் கூறி இருக்கிறார். அமெரிக்காவை தளமாக கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பெண்களின் உணவு விருப்பங்களுக்கும் குடல் புற்றுநோய் ஆபத்துக்கும் இடையே ஒரு தொடர்பு கண்டறியப்படவில்லை. எனினும் பெண்களை விட ஆண்களுக்கு குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதால் உணவு தேர்வு - குடல் புற்றுநோய் இடையிலான இணைப்பு தெளிவாக இருப்பதாக ஜிஹியே கிம் கூறி இருக்கிறார்.
பெருங்குடல் புற்றுநோய் உலகளவில் மூன்றாவது பொதுவான புற்றுநோயாகும். வாழ்நாள் முழுவதும் இந்த கேன்சரை உருவாக்கும் அபாயம் 23-ல் ஒரு ஆணுக்கு உள்ளது. பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் ஆண்களுக்கு குடல் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை குறைக்கிறது மேலும் மேலும் நாள்பட்ட அழற்சியை அடக்க உதவுகிறது என பேராசிரியர் ஜிஹியே கிம் கூறியுள்ளார். பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நாள்பட்ட அழற்சியை கட்டுப்படுத்துவதன் மூலம் குடல் புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது.
ஆரோக்கியமான தாவர அடிப்படையிலான உணவை உட்கொள்வது குடல் புற்றுநோயின் அபாயத்துடன் தொடர்புடையது என்று எங்கள் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன. பெண்களை விட ஆண்களுக்கு குடல் புற்றுநோயின் ஆபத்து அதிகம் என்பதால், ஆரோக்கியமான தாவர அடிப்படையிலான உணவுகளை சாப்பிடுவது ஆண்களுக்கு இந்த கேன்சர் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைப்பதை விளக்க எங்கள் ஆய்வு உதவும், ஆனால் பெண்களுக்கு அல்ல என்றார் ஜிஹியே கிம். ஆய்வில் பங்கேற்றவர்களை சுமார் 1 வருடம் ஆய்வாளர்கள் கண்காணித்தனர். பங்கேற்றவர்கள் எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தனர் என்பதன் அடிப்படையில் ஆய்வாளர்கள்அவர்களின் உணவுமுறைகளை மதிப்பீடு செய்தனர்.
எனினும் இந்த ஆய்வில் முக்கிய குறைபாடாக பார்க்கப்படுவது என்னவென்றால் டயட்டில் சேர்க்கப்பட்ட இறைச்சியின் அளவுகளில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டதே தவிர தாவர அடிப்படையிலான உணவுகள் என்ன உட்கொள்ளப்படுகின்றன என்பதில் கவனம் செலுத்தப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட அளவில் உட்கொள்ளும் போது நம் உடலுக்கு ஆரோக்கியமானது என்ன்னும் நிலையில் பங்கேற்றவர்கள் டயட்டில் சேர்த்து கொண்ட இறைச்சி வகைகளையும் இந்த ஆய்வு வேறுபடுத்தவில்லை.