தூக்கமின்மை உங்களின் ஆரோக்கியம், எனர்ஜி லெவல் மற்றும் மனநிலை உள்ளிட்டவற்றில் எதிர்மறை பாதிப்புகளை ஏற்படுத்தலாம். உங்கள் வாழ்க்கை முறைகள் மட்டுமல்ல, முக்கிய ஊட்டச்சத்து குறைபாடுகளும் இது போன்ற கோளாறுகளை ஏற்படுத்தும். நட்ஸ், சீட்ஸ், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் தூக்கத்தில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்ய உதவகூடியவை.
அந்த வகையில் தூக்க பிரச்சனைகளுக்கு உதவ கூடிய நட்ஸ்-ஆக இருக்கிறது பிஸ்தா. நல்ல மற்றும் சிறப்பான தூக்கத்திற்கு பலனளிக்க கூடியது பிஸ்தா என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிரபல ஆயுர்வேத நிபுணரான Dixa Bhavsar Savaliya, ஒரு நல்ல இரவு தூக்கத்திற்கு பிஸ்தா எப்படி ஒரு மேஜிக் போல செயல்படுகிறது என்பதை பற்றி தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். இவர் தனது போஸ்ட்டில் கூறியிருப்பதாவது, பிஸ்தாக்களில் அதிக அளவு மெலடோனின் உள்ளது, எனவே தான் இவை தூக்கத்திற்கு உதவுவதில் சிறந்தவை.
படுத்தவுடன் விரைவாக தூங்க மற்றும் நீண்ட நேரம் தூங்க Melatonin உதவுகிறது. தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதோடு, அனைத்து உடல், மன-ஆரோக்கியம் மற்றும் ஆட்டோ-இம்யூன் கோளாறுகளை குணப்படுத்த அவசியமானவை என கூறி இருக்கிறார். தினசரி மிதமான அளவில் பிஸ்தாக்களை சாப்பிடுவது நம் உடலுக்கு மெக்னீசியம் மற்றும் வைட்டமின் B6-ஐ வழங்குகிறது என்பதையும் அவர் தனது போஸ்ட்டில் வெளிப்படுத்தி இருக்கிறார். மெக்னீசியம் நாம் தூங்க உதவுவது மட்டுமல்லாமல், ஆழ்ந்த மற்றும் அமைதியான தூக்கத்தை பெறுவதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. காபா, டிரிப்டோபான் மற்றும் செரோடோனின் ஆகியவற்றின் தொகுப்பில் வைட்டமின் பி6 முக்கிய பங்கு வகிக்கிறது, இவை அனைத்தும் தூக்கத்தை பாதிக்க கூடியவை.
Tryptophan ஒரு அமினோ ஆசிட் ஆகும், இது செரோடோனின் உற்பத்தியில் பங்கு வகிக்கிறது, இது நமது மனநிலையை வலுவாக வைக்க உதவும் "ஹேப்பி ஹார்மோன்" ஆகும். அதே போல ஆயுர்வேதத்தின் படி பிஸ்தாக்கள் வாத-ஷமாகா, குரு மற்றும் உஷ்ணா ஆகும். இவை கவலை, தூக்கமின்மை, மனச்சோர்வு உணவு பசி மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு சிறந்தவை. பிஸ்தாக்களின் நுகர்வு பசி, பாலியல் சக்தி, மனநிலை மற்றும் தூக்கத்தை மேம்படுத்துகிறது. இவை இதய ஆரோக்கியத்திற்கும் சிறந்தவை என்கிறார் Dixa. நல்ல தூக்கம் இல்லாமல் சிரமப்படுபவர்கள் தூங்க செல்வதற்கு சுமார் 1 மணி நேரத்திற்கு முன் ஒரு கைப்பிடி பிஸ்தா சாப்பிடலாம். தூக்கத்திற்காக மெக்னீசியம் மற்றும் மெலடோனின் மாத்திரைகளை சார்ந்திருக்க தேவையில்லை என்றும் கூறி இருக்கிறார்.
தூக்கமின்மை, தூக்கத்தில் தொந்தரவு, அதிக சிந்தனை, கவலை மற்றும் பதற்றம் உள்ளவர்கள்- பிராமி, அஸ்வகந்தா, ஜடாமான்சி, தாகர், ஷக்புஷ்பி போன்ற ஆயுர்வேத மூலிகைகள் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் மற்றும் தூக்கத்தை மேம்படுத்தும் ஆயுர்வேத மூலிகைகளை பால் அல்லது தண்ணீருடன் சேர்த்து சாப்பிடவும் நிபுணர் தனது போஸ்ட்டில் பரிந்துரைத்துள்ளார்.