பப்பாளி பழம் சுவையில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் சிறந்த நன்மைகளை தரக்கூடியது. இது பார்ப்பதற்கு ஆரஞ்சு நிறமாக இருப்பதோடு நல்ல சுவையாகவும் இருக்கும். இந்த பழத்தில் கருப்பு ஜெலட்டினஸ் விதைகள் உள்ளன. இது தவிர, பப்பாளிப் பழத்தின் மென்மையான, உண்ணக்கூடிய ஆரஞ்சு சதை மிகவும் சத்தானதாகும். இது பலவிதமான சுகாதார நலன்களை நமக்கு வழங்குகிறது. சரி வாருங்கள் பப்பாளி பழத்தில் வேறு என்னென்ன நன்மைகள் மறைந்துள்ளது என்று காண்போம்.
கொழுப்பைக் குறைக்கிறது: பப்பாளியில் நார்ச்சத்து, விட்டமின் C மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்கள் நிறைய உள்ளன. அவை தமனிகளில் கொழுப்பை தடுக்கிறது. அதிகப்படியான கொழுப்பு தமனிகளில் உருவாவதை தடுக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்படும். ஆனால் பப்பாளியை சாப்பிட்டால் நன்மை உண்டாகும். இயற்கையாகவே கொழுப்பின் அளவை குறைக்கும் தன்மை பப்பாளி பழத்திற்கு உண்டு.
செரிமானத்தை மேம்படுத்துகிறது: செரிமானத்திற்கு மோசமான விளைவுகளை தரும் ஆயில் உணவுகள், மசாலா உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. சமீபகாலங்களில் எண்ணெயில் தயாரிக்கப்பட்ட ஜங்க் ஃபுட் அல்லது ரெஸ்டாரன்ட் உணவை சாப்பிடுவது அதிகமாகி வருகிறது. இதனால் செரிமான சிக்கல் ஏற்பட்டு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். பப்பாளி சாப்பிடுவது உங்க செரிமான சக்தியை மேம்படுத்துகிறது. ஏனெனில் இதில் நார்ச்சத்துடன் சேர்த்து பாப்பேன் எனப்படும் செரிமான நொதிகள் அதிகளவு காணப்படுகின்றன. இது நம் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
மாதவிடாய்: பெண்களுக்கு மாதவிடாய் இயற்கையானது. இதனால் உண்டாகும் வலிகள், உடல் சோர்வு தவிர்க்க முடியாதது. ஒரு சில பெண்களுக்கு ரத்த போக்கு அதிகமாக இருக்கும். இந்த மாதவிடாய் நேரத்தின்போது உடலில் சிக்கல்கள் ஏற்பட்டால் அதற்கு பப்பாளி சிறந்த தீர்வை அளிக்கிறது. எனவே பெண்கள் பப்பாளி (Papaya) சாப்பிடுவது மிகவும் நல்லதாகும்.
கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: பப்பாளி பழத்தில் விட்டமின் A, ஜீயாக்சாண்டின், சிப்டோக்சாண்டின் மற்றும் லுடீன் போன்ற ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன. அவை கண்களில் உள்ள சளி சவ்வுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. அவை சேதமடையாமல் தடுக்கின்றன. விட்டமின் A மாகுலர் சிதைவின் வளர்ச்சியை தடுக்கிறது.
கீல்வாதத்தில் இருந்து பாதுகாக்கிறது: கீல்வாதம் நம்மை பலவீனப்படுத்தும் நோயாகும். பப்பாளி நம் எலும்புகளுக்கு நல்லது. ஏனெனில் அவற்றில் விட்டமின் C உடன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது. அன்னல்ஸ் ஆஃப் ருமேடிக் நோய்களில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், வைட்டமின் C குறைவாக உள்ள உணவுகளை உட்கொள்ளும் நபர்களுக்கு மூட்டுவலி வருவதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம் என்று தெரியவந்துள்ளது. எனவே பப்பாளி உங்களுக்கு நன்மையைத் தரும்.
சருமம் வயதாகுவதை தடுக்கிறது: நம் அனைவருக்குள்ளும் இளமையாக இருக்க ஆசை இருக்கும். அதற்கு தினமும் பப்பாளி சாப்பிடுவது உங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பப்பாளியில் வைட்டமின் C, வைட்டமின் E மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்கள் நிறைந்துள்ளன. இது உங்கள் சருமத்தை சுருக்கங்கள் மற்றும் வயதான அறிகுறிகளில் இருந்து காக்க உதவுகிறது. எனவே நீங்கள் இளமையாக இருக்கவும் உங்கள் சருமத்தை மிளிர வைக்கவும் பப்பாளியை தொடர்ந்து சாப்பிடுங்கள்.
கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது: சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் கூந்தல் வளர்ச்சிக்கும் பப்பாளி உதவுகிறது. இதிலுள்ள வைட்டமின் A முடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இது கூந்தலை மென்மையாக்கவும், பளபளப்பாகவும், ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் உதவுகிறது. பப்பாளி சாற்றை உச்சந்தலையில் பயன்படுத்துவது பொடுகுத் தொல்லையை போக்கும். இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் முடி உதிர்தலை கட்டுக்குள் வைக்கும். முடியின் பலத்தையும் இந்த பப்பாளி அதிகரிக்கும்.