வெஜ்ஜிஸ் மற்றும் ஹம்மஸ் சாண்ட்விச் (Veggies and Hummus sandwich): ஒரு வெஜ்ஜி & ஹம்முஸ் சாண்ட்விச் (veggie & hummus sandwich) சிறந்த நார்ச்சத்து நிறைந்த மதிய உணவை சாப்பிட விரும்புபவர்களுக்கு ஏற்றது. ஹம்மஸ் என்பது தஹினி, பூண்டு, ஆலிவ் ஆயில், லெமன் ஜூஸ் மற்றும் உப்பு சேர்த்து சமைத்த மற்றும் பிசைந்த கொண்டைக்கடலையில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு ஸ்ப்ரெட் அல்லது டிப் ஆகும். நீங்கள் இதை எந்த வகையான பிரெட்டுடன் இணைக்கலாம் அல்லது சாண்ட்விச்சஸ்களில் பயன்படுத்தலாம். மல்ட்டி- கிரெயின் பிரட்ஸ்களின் சில ஸ்லைஸ்களை எடுத்து, அனைத்து ஸ்லைஸ்களிலும் ஹம்முஸை ஸ்பிரெட் செய்யவும். பிறகு ஒரு சுவையான சாண்ட்விச் செய்ய குடைமிளகாய், வெள்ளரி, கீரை, வெங்காயம் மற்றும் தக்காளி போன்ற காய்கறிகளை சேர்க்கவும்.
ஓட்ஸ் கிச்சடி : எப்போதுமே ஓட்ஸ் மிக ஆரோக்கியமானது மற்றும் நமது வழக்கமான டயட்டின் ஒரு பகுதியாக இருக்க வேண்டியது என்பதை நாம் அறிவோம். பொதுவாக பலரும் ஓட்ஸை கஞ்சியாக வைத்து குடிப்பார்கள். ஆனால் சிலருக்கு ஓட்ஸ் கஞ்சி குடிக்க பிடிக்காது. எனவே ஓட்ஸை கிச்சடியாக செய்து சாப்பிடலாம். பருப்பு மற்றும் காய்கறிகளை சேர்த்து செய்யப்படும் ஓட்ஸ் கிச்சடி ஆரோக்கியமானது. நறுக்கிய கேரட், வெங்காயம், காலிஃபிளவர், தக்காளி, பிரஞ்சு பீன்ஸ் மற்றும் சில மிளகாய்களை சேர்த்து செய்யப்படும் ஓட்ஸ் கிச்சடி சுவையோடு சேர்த்து எடை இழப்பிற்கு பெரிதும் உதவும்.
உப்புமா : பலருக்கும் உப்புமா பிடிக்காது என்றாலும் எடை இழப்பு முயற்சியில் இருக்கும் போது உப்புமா சிறந்த பலன்களை தரும். சுவையான மற்றும் ஆரோக்கிய உணவான உப்புமாவை ரவை, பச்சை பட்டாணி, கேரட் மற்றும் வெங்காயம், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து சமைக்கலாம். பச்சைப் பட்டாணியில் ப்ரோட்டின் அதிகம் மற்றும் கலோரிகள் குறைவு. மேலும் இதில் வைட்டமின்ஸ் கே மற்றும் சி, மாங்கனீஸ் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.
ஓட்ஸ் தோசை : வழக்கமாக அரிசியை அரைத்து தயாரிக்கும் தோசை மாவிற்கு பதிலாக ஓட்ஸ் சேர்ப்பதன மூலம் கார்போஹைட்ரேட் நுகர்வை குறைக்கலாம். வழக்கமான தோசை மாவிற்கு அரிசியை ஊற வைப்பதை போல ஓட்ஸை ஊறவைக்க வேண்டிய அவசியமில்லை. ஊறவைத்த உளுத்தம்பருப்பை ஓட்ஸுடன் சிறிதளவு சேர்க்கலாம். ஊற வைத்த உளுத்தம் பருப்பு மற்றும் ஓட்ஸை ஒன்றாகக் கலந்து மாவாக அரைத்து சுமார் 10 - 12 மணிநேரம் புளிக்க வைக்கவும். பிறகு தோசையாக வார்த்து சாம்பார் & சட்னி தொட்டு சாப்பிடலாம்.
பேசன் சில்லா (Besan Chilla) : இந்த டிஷ் கடலை மாவு, வெங்காயம், தக்காளி, ஹெர்ப்ஸ் மற்றும்ஆரோக்கியமான மசாலாப் பொருட்களால் செய்யப்படுகிறது. இந்த டிஷ்ஷின் ஊட்டச்சத்தை அதிகரிக்க நீங்கள் இதில் நறுக்கிய காய்கறிகளை சேர்க்கலாம். காலை அல்லது மதிய உணவிற்கு ஏற்ற டிஷ் தான் தோசை போன்று ஊற்றி சாப்பிட கூடிய இந்த பேசன் சில்லா.