முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » இனி கிச்சனில் எதுவுமே வீணாகாது.. சமையலுக்கு தேவையான சில முக்கிய டிப்ஸ்...!

இனி கிச்சனில் எதுவுமே வீணாகாது.. சமையலுக்கு தேவையான சில முக்கிய டிப்ஸ்...!

Kitchen | சில சமயங்களில் கொத்தமல்லி சட்னி அரைத்தால் அப்படியே இருக்கும் அதனை என்ன செய்வது, கோதுமையை எப்படி பிசைவது என சின்ன சின்ன விஷயங்களை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

  • 110

    இனி கிச்சனில் எதுவுமே வீணாகாது.. சமையலுக்கு தேவையான சில முக்கிய டிப்ஸ்...!

    நம் அன்றாட சமையலில் நமக்கு தேவையான நிறைய விஷயங்கள் தெரியாமலேயே இருந்திருக்கும். அப்படியான விஷயங்களில் இந்த சில டிப்ஸ் ரொம்பவே முக்கியமானதாக இருக்கப் போகிறது. சில சமயங்களில்  கொத்தமல்லி சட்னி அரைத்தால் அப்படியே இருக்கும் அதனை என்ன செய்வது, கோதுமையை எப்படி பிசைவது  என சின்ன சின்ன விஷயங்களை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

    MORE
    GALLERIES

  • 210

    இனி கிச்சனில் எதுவுமே வீணாகாது.. சமையலுக்கு தேவையான சில முக்கிய டிப்ஸ்...!

    கொத்தமல்லி சட்னி மீந்து விட்டால் மோரில் கலந்து கரைத்து விடுங்கள், மசால மோர் தயார்.

    MORE
    GALLERIES

  • 310

    இனி கிச்சனில் எதுவுமே வீணாகாது.. சமையலுக்கு தேவையான சில முக்கிய டிப்ஸ்...!

    சப்பாத்திக்கு மாவு பிசையும்போது ஒரு தேக்கரண்டி பால் பவுடர் அல்லது தண்ணீருக்குப் பதில் இளநீர் சேர்த்துப் பிசைந்தால், சப்பாத்தி வித்தியாசமான சுவையில் இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 410

    இனி கிச்சனில் எதுவுமே வீணாகாது.. சமையலுக்கு தேவையான சில முக்கிய டிப்ஸ்...!

    ஆவக்காய், மாங்காய் ஊறுகாய் போடும் போது அதில் காய்ச்சாத நல்லெண்ணெய் மேலே நிற்குமாறு ஊற்றினால் நீண்டநாள் கெடாமல் இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 510

    இனி கிச்சனில் எதுவுமே வீணாகாது.. சமையலுக்கு தேவையான சில முக்கிய டிப்ஸ்...!

    அரிசி கழுவிய இரண்டாவது நீரில் சேப்பங்கிழங்கு, சேளைக்கிழங்கு முதலியவற்றை வேக வைத்து எடுக்கும்போது அதன் அரிப்புத் தன்மை நீங்கியிடும்.

    MORE
    GALLERIES

  • 610

    இனி கிச்சனில் எதுவுமே வீணாகாது.. சமையலுக்கு தேவையான சில முக்கிய டிப்ஸ்...!

    ஊறுகாய் தீர்ந்துவிட்டால், மீதமுள்ள விழுதில் கேரட்ஐ துண்டுகளாக்கிப் போட்டு ஊற வைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 710

    இனி கிச்சனில் எதுவுமே வீணாகாது.. சமையலுக்கு தேவையான சில முக்கிய டிப்ஸ்...!

    வெண்டைக்காய் பொரியல் செய்யும்போது வறுத்த வேர்க்கடலையைப் பொடித்துப் போட்டு வதக்கினால் பொரியலின் சுவை அலாதிதான்.

    MORE
    GALLERIES

  • 810

    இனி கிச்சனில் எதுவுமே வீணாகாது.. சமையலுக்கு தேவையான சில முக்கிய டிப்ஸ்...!

    ரசம் தாளிக்கும் போது புளி தண்ணீரில் பெருங்காயம், கறிவேப்பிலையைப் போடாமல், தாளிக்கும் எண்ணெய்யில் போட்டால் ரசம் நல்ல மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 910

    இனி கிச்சனில் எதுவுமே வீணாகாது.. சமையலுக்கு தேவையான சில முக்கிய டிப்ஸ்...!

    பூரி செய்யும்போது ஹோட்டல் பூரி போல் உப்பலாக வர கோதுமை மாவை பிசையும் போதே ஒரு தேக்கரண்டி சோள மாவு, அரைத் தேக்கரண்டி சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பூரி உப்பலாக வரும்.

    MORE
    GALLERIES

  • 1010

    இனி கிச்சனில் எதுவுமே வீணாகாது.. சமையலுக்கு தேவையான சில முக்கிய டிப்ஸ்...!

    குருமாவிற்கு தேங்காய் அரைக்கும்போது தேங்காயுடன் மூன்று நான்கு முந்திரியையும் சேர்த்து அரைத்துவிட்டால், குருமாவின் ருசியும் மணமும் பிரமாதமாக இருக்கும். முடிந்தால் வறுத்த முந்தரியை அரைத்து போட்டால் சுவையாக இருக்கும்.

    MORE
    GALLERIES