சாலட் எல்லாம் ஒரு பிரதான உணவா, அதை செய்வது என்ன அவ்வளவு பெரிய கஷ்டமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஒரு சாலட்டை அனைத்து ஊட்டச்சத்துக்கள் மிக்க காம்போவாக மாற்றுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. முற்றிலும் சுவை நிரம்பிய, திருப்திகரமாகவும், சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்க கூடிய சில சிம்பிளான சாலட் ரெசிப்பிக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை நீங்கள் உங்களுடைய சமையல் அறையில் கிடைக்க கூடிய பொருட்களை வைத்தே சில நிமிடங்களில் தயாரித்துவிடலாம்.
1. பசலைக்கீரை, முட்டை சாலட்: இந்த சாலட்டை தயாரிக்க உங்களுக்கு வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஒரு கடாயில் 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெ ஊற்றி, அதில் முட்டையை உடைத்து ஊற்றி, பொன்னிறமாக திருப்பி எடுக்கவும். அதே கடாயில் 3 முதல் 4 பாலாடைக் கட்டிகளை சேர்ந்து டாஸ் செய்யவும். கடைசியாக ஒரு பெரிய பவுலில் 1 கப் வேகவைத்த பேபி ஸ்பினச் கீரையை சேர்க்கவும், அத்துடன் நறுக்கிய தக்காளி, பூண்டு, மிளகுத்தூள், ஆர்கனோ, உப்பு, சிறிதளவு ஆலிவ் ஆயில், 1 டிஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து நன்றாக கலக்கினால், பசலைக்கீரை, முட்டை தயார்.
2. ஸ்ட்ராபெரி, ஸ்பினச் மற்றும் வால்நட் சாலட்: இந்த வகை சாலட்டில் மினரல்கள், வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகியவை நிறைந்துள்ளது. மேலும் இனிப்பு, புளிப்பு சுவையின் அசத்தலான காம்போவும் கிடைக்கும். இதனை தயாரிக்க, முதலில் பசலைக்கீரையை வேகவைக்கவும். ஒரு கிண்ணத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, தேவையான அளவு மிளகு, தேன், உப்பு ஆகியவற்றை கலந்து சாலட்டிற்கான டிரஸ்ஸிங்கை தயார் செய்து கொள்ளுங்கள். இப்போது மற்றொரு கிண்ணம் அல்லது தட்டில் ஸ்ட்ராபெர்ரி துண்டுகள், வேகவைத்த கீரை, பொடியாக்கப்பட்ட வால்நட்ஸ், ஃபெட்டா சீஸ் ஆகியவற்றுடன், டிரஸ்ஸிங்கை சேர்த்தால் சுவையான, ஆரோக்கியமான சாலட் 5 நிமிடத்தில் தயார்.
3. மசாலா கொண்டைக்கடலை சாலட்: புரதம் நிறைந்த கொண்டைக்கடலையுடன் தயாரிக்கப்படும் இந்த எளிய மற்றும் ஆரோக்கியமான சாலட்டை சுவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம். இந்த சாலட்டை செய்ய, ஊறவைத்து கொண்டைக்கடலையை வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தை எடுத்து, அதில் 1 டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயில், தேவையான அளவு மிளகு, உப்பு, மிளகு மற்றும் எலுமிச்சை சாறு மற்றும் மிக்ஸ்டு ஹேர்ப்ஸ் கலந்து நன்றாக கலந்து டிரஸ்ஸிங் தயார் செய்து கொள்ளுங்கள். இப்போது ஒரு பவுலில் வேகவைத்த கொண்டைக்கடலை, செர்ரி தக்காளி, நறுக்கிய வெள்ளரி துண்டுகள், சிவப்பு வெங்காயம், சிறிதளவு கொத்தமல்லி இலைகளை கலந்து கொள்ளுங்கள், அதன் மீது தயார் செய்து வைக்கப்பட்டுள்ள டிரஸ்ஸிங்கை சேர்ந்து ரசித்து சுவைக்கலாம்.
4. கிரீமி பச்சை பட்டாணி சாலட்: ஒரு கடாயை எடுத்து, பீன்ஸை வேகவைக்கவும். மற்றொரு கடாயை எடுத்து 1 தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து, அதில் 4 நறுக்கிய பூண்டு மற்றும் 1 தேக்கரண்டி இஞ்சி விழுது சேர்த்து வதக்கவும். அத்துடன் வேகவைத்த பச்சை பீன்ஸ் சேர்த்து 1 கப் குறைந்த கொழுப்புள்ள கிரீமை சேர்க்கவும். இந்த கலவையில் சில ஹேர்ப்ஸ், தேவையான உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும். கடைசியாக நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும். சிறிது பார்மேசன் சீஸ் கொண்டு அலங்கரித்தால் நாவிற்கு மட்டுமின்றி கண்களுக்கும் நல்ல அலங்காரமாக இருக்கும்.
5. மீதமான சிக்கனில் சுவையான சாலட்: ஒரு கடாயை எடுத்து 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில், 1 டீஸ்பூன் பூண்டு மற்றும் இஞ்சி விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். அத்துடன் மீதமுள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, ½ தேக்கரண்டி சோயா சாஸ், கருப்பு மிளகு மற்றும் உப்பு சேர்த்து சேர்க்கவும். இதற்கிடையில், ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் பசலைக்கீரை, செர்ரி தக்காளி, பிரட் க்ரூட்டன்கள் சேர்த்து, அத்துடன் வேகவைத்த சிக்கன் கலவையை சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது விரைவான மற்றும் சுவையான சிக்கன் சாலட் தயாராகிவிடும்.