கேரட்டை துருவி பொறியல் செய்வது என்பது கொஞ்சம் சிரமமான விஷயம்தான். கேரட்டை ஓரளவு துண்டு துண்டுகளாக வெட்டி, கொஞ்சம் கொஞ்சமாக மிக்ஸி ஜாரில் போட்டு விட்டு விட்டு அரைத்தால் கேரட், துருவிய கேரட் போல நமக்கு கிடைத்துவிடும். சீக்கிரம் கேரட் பொரியல் செய்து எடுத்து விடலாம். அது வேகவும் நேரம் எடுத்துக் கொள்ளாது.
எல்லோருக்குமே பூண்டை உரிப்பது கஷ்டமான விஷயம்தான். முதலில் பூண்டை தனித்தனி பல்லாக பிரித்து எடுத்து விடுங்கள். மேல் காம்பு பக்கத்தை மட்டும் கத்தியை வைத்து நீக்கி விடுங்கள். மேலே தலை பாகம் வெட்டப்பட்ட பூண்டுகளை ஒரு தட்டில் வைத்துவிட்டு, மைக்ரோவேவில் 10 வினாடிகள் வைத்து வெளியே எடுத்தால் போதும். பூண்டின் வால் பகுதியை பிடித்து இழுத்தால் பூண்டில் இருக்கும் தோல் அத்தனையும் வந்து விடும்.