முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » உணவில் கடுகு கீரையை சேர்ப்பதால் இத்தனை நன்மைகளா? தெரிஞ்சுக்கலாம் வாங்க!

உணவில் கடுகு கீரையை சேர்ப்பதால் இத்தனை நன்மைகளா? தெரிஞ்சுக்கலாம் வாங்க!

குளிர்காலத்தில் கடுகு கீரைகளைக் கொண்டு பரோட்டா செய்யலாம். எப்படி உருளைக்கிழங்கைக் கொண்டு ஆலு பரோட்டா செய்கிறோமோ?அதே போன்று இந்த கீரைகளைக் கொண்டு நாம் பரோட்டா செய்யலாம்.

  • 17

    உணவில் கடுகு கீரையை சேர்ப்பதால் இத்தனை நன்மைகளா? தெரிஞ்சுக்கலாம் வாங்க!

    வட இந்தியாவில் மிகவும் பிரபலமான சார்சன் கா சாங் என்று அழைக்கப்படும் கடுகு இலை சுவை மிகுந்ததாக மட்டுமில்லாமல், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் உள்ளது. இதனால் தான் மக்கள் அதிகளவில் இதை சமையலில் பயன்படுத்தத் தொடங்குகின்றனர். குறிப்பாக இதில் நார்ச்சத்துகள், வைட்டமின்கள், இரும்பு சத்து, ஃபோலிக் அமிலம், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளதால் உடல் ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கின்றது இந்த கடுகு இலைகள். இதை நாம் சூப்கள், காய்கறிகளுடன் சேர்த்து சமைக்கும் போது நமக்கு கூடுதல் சுவையைத் தருகிறது. மேலும் இது குளிர்காலத்தில் மிகவும் பிரபலமான ஊட்டச்சத்துள்ள உணவுகளில் ஒன்றாக உள்ளது என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பாத்ரா. இவற்றில் என்னென்ன நன்மைகள் உள்ளன. என்னவெல்லாம் இதை வைத்து சமைக்கலாம் என்பது குறித்து இங்கே தெரிந்துக் கொள்ளலாம்.

    MORE
    GALLERIES

  • 27

    உணவில் கடுகு கீரையை சேர்ப்பதால் இத்தனை நன்மைகளா? தெரிஞ்சுக்கலாம் வாங்க!

    வைட்மின் கே கடுகு இலைகளில் உள்ளதால் இதய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதோடு எலும்புகளை வலுவாக்குகிறது. மேலும் இதில் உள்ள பித்த அமிலங்கள் செரிமானப் பிரச்சனைக்குத் தீர்வாக அமைகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும் குறைக்கிறது.

    MORE
    GALLERIES

  • 37

    உணவில் கடுகு கீரையை சேர்ப்பதால் இத்தனை நன்மைகளா? தெரிஞ்சுக்கலாம் வாங்க!

    பொதுவாக கீரைகள் சாப்பிடுவது கண் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இதே போன்று தான் கடுகு கீரையில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கண்களைப் பராமரிக்க உதவியாக உள்ளதோடு, பார்வை இழப்பையும் குறைக்கிறது.

    MORE
    GALLERIES

  • 47

    உணவில் கடுகு கீரையை சேர்ப்பதால் இத்தனை நன்மைகளா? தெரிஞ்சுக்கலாம் வாங்க!

    இதுப்போன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கடுகு கீரைகள் கொண்டிருந்தாலும் என்ன இதில் சமைக்கலாம் என்ற எண்ணம் தோன்றும். இதோ சில குக்கிங் டிப்ஸ்கள் இங்கே.

    MORE
    GALLERIES

  • 57

    உணவில் கடுகு கீரையை சேர்ப்பதால் இத்தனை நன்மைகளா? தெரிஞ்சுக்கலாம் வாங்க!

    குளிர்காலத்தில் கடுகு கீரைகளைக் கொண்டு பரோட்டா செய்யலாம். எப்படி உருளைக்கிழங்கைக் கொண்டு ஆலு பரோட்டா செய்கிறோமோ?அதே போன்று இந்த கீரைகளைக் கொண்டு நாம் பரோட்டா செய்யலாம். காலை உணவில் எடுத்துக்கொள்ளும் போது உடல் சுறுசுறுப்புடன் இருக்கும். இதோடு சூப்கள், பருப்பு கீரைக்கூட்டு போன்றவற்றையும் நாம் செய்யலாம்.

    MORE
    GALLERIES

  • 67

    உணவில் கடுகு கீரையை சேர்ப்பதால் இத்தனை நன்மைகளா? தெரிஞ்சுக்கலாம் வாங்க!

    மேலும் தயிர் பாசிப்பருப்பு விழுது, துருவிய வெள்ளரி, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து கடுகு கீரை ரைதா செய்யலாம். காய்கறி சாலட்டுகளிலும் நாம் இதைச்சேர்த்துக் கொள்ளலாம். இதோடு அனைத்துக்குழம்புகளிலும் சிறிதளவு சேர்த்து செய்யும் போது நமக்கு கூடுதல் சுவையைத் தருகிறது.

    MORE
    GALLERIES

  • 77

    உணவில் கடுகு கீரையை சேர்ப்பதால் இத்தனை நன்மைகளா? தெரிஞ்சுக்கலாம் வாங்க!

    பொதுவாக வட இந்தியாவில் கடுகு எண்ணெய் தான் மிகவும் பிரபலமானதாக இருக்கும். அதே வேளையில் கடுகு கீரையும் இந்த குளிர்கால உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக உள்ளது. வெளுத்து வாங்கும் குளிரை சமாளிக்க இதுப்போன்ற உணவுகளை நாம் சாப்பிடும் போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பருவக் காலங்களிலும் ஏற்படும் சில உடல் நலப்பிரச்சனைகளையும் குணமாக்குகிறது.

    MORE
    GALLERIES