இந்தியாவின் சாதி, மதம், பண்பாடு, மொழி, பழக்க வழக்கம் என பல்வேறு விஷயங்களில் வேற்றுமையில் ஒற்றுமை காண்பது போலவே உணவு விஷயத்திலும் மாநிலங்களுக்கு மாநிலம் மாறுபட்ட மணம் மற்றும் சுவையை கொண்டுள்ளது. டெல்லி தொடங்கி வரை இந்தியாவின் பராம்பரியம் மற்றும் நமது மசாலா பொருட்களின் பெருமையை பறைசாற்றும் வகையிலான உணவு வகைகள் ஏராளம். அதில் நீங்கள் கட்டாயம் முயற்சித்து பார்க்க வேண்டிய 7 ரீச்சான உணவு வகைகளை கொண்டு வந்துள்ளோம்.
இந்திரஹார்: ரேவா வம்சத்தின் சமையல் பாரம்பரியத்தைச் சேர்ந்தது. ரேவாவின் மகாராஜாவான புஷ்ப்ராஜ் சிங் விருப்பத்தின் பேரில், ரேவா சாம்ராஜ்யத்தில் உள்ள உணவுகள் பருப்பு, கீரை மற்றும் குறைந்த தண்ணீர் ஆகியவற்றைக் கொண்டு இந்த உணவு வகை தயாரிக்கப்பட்டது. இரவில் 5 வகையான பருப்புகளை ஊறவைத்து, நன்றாக புளிக்கவைக்கப்பட்டு, பின்னர் வேகவைக்கப்படுகின்றன. இத்துடன் சில மசாலாக்களை சேர்த்து பாரம்பரிய முறைப்படி சமைக்கப்படுகிறது.
கோஷ் கடா மசாலா: கோஷ் கடா மசாலா, இந்தியாவை ஆட்சி செய்த நிஜாம் வம்சத்து அரசு விருத்தில் மிகவும் முக்கியமானது. இறைச்சி மற்றும் மசாலா பொருட்கள் கலந்த இதன் அற்புதமான செய்முறை, சாலர் ஜங் குடும்பத்தைச் சேர்ந்தது. ஹக்கீம்களின் வழிகாட்டுதல்களின் படி, நிஜாம்களின் ராஜ குடும்பத்து பெண்கள் மேற்பார்வையில் ஆரோக்கியமாக தயார் செய்யப்படும் உணவு ஆகும்.