முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » கொளுத்தும் வெயிலில் ஏற்படும் உடல் சூட்டை தணிக்க உதவும் உணவுகள்!

கொளுத்தும் வெயிலில் ஏற்படும் உடல் சூட்டை தணிக்க உதவும் உணவுகள்!

கோடை காலத்தில், ஐஸ் வாட்டர் குடிப்பதை விட மண் பானையில் உள்ள தண்ணீரைக் குடிப்பதே மிகவும் நல்லது.

  • 19

    கொளுத்தும் வெயிலில் ஏற்படும் உடல் சூட்டை தணிக்க உதவும் உணவுகள்!

    ஒவ்வொரு நாளும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதுபோன்ற கோடை காலத்தில் நாம் பெரும்பாலும் சந்திக்கும் ஒரு பிரச்சனை - உடல் சூடு. ஆனால் இங்கே நமக்கிருக்கும் நல்ல விஷயம் என்னவென்றால் நாம் சரியான உணவு முறையை பின்பற்றும் பட்சத்தில் உடல் சூட்டை குறைக்க, கட்டுப்படுத்த முடியும். அதெப்படி? உடல் சூடு ஏற்பட என்ன காரணம்? எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்? என்னென்ன உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்? இதோ அதற்கான பதில்கள்!

    MORE
    GALLERIES

  • 29

    கொளுத்தும் வெயிலில் ஏற்படும் உடல் சூட்டை தணிக்க உதவும் உணவுகள்!

    வயிறு சூடாக, உடல் சூடாக என்ன காரணம்? வயிற்றுக்குள் அதிகப்படியான செரிமானம் ஏற்படும் போது, ​​வயிறு சூடாகும். அதிக வெப்பம் இருக்கும்போது, ​​உடலின் இயற்கையான குளிர்ச்சி அமைப்பு அதிகமாக வேலை செய்யும் என்றாலும் கூட காரமான மற்றும் மசாலா உணவுகளை தவிர்க்க வேண்டும்; மேலும், காஃபி தவிர்க்கப்பட வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 39

    கொளுத்தும் வெயிலில் ஏற்படும் உடல் சூட்டை தணிக்க உதவும் உணவுகள்!

    கோடை காலத்தில் என்னென்ன உணவுகளை சாப்பிடலாம்? கோடையில் வயிற்றைக் குளிர்ச்சியாக வைத்திருக்கவும், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கவும் குளிர்ச்சியான உணவுகளை உண்ண வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 49

    கொளுத்தும் வெயிலில் ஏற்படும் உடல் சூட்டை தணிக்க உதவும் உணவுகள்!

    பூசணிக்காய் மற்றும் பூசணி போன்ற காய்கறிகள்: சுரைக்காய் மற்றும் பூசணிக்காய் போன்ற அதிக நீர்ச்சத்து கொண்ட காய்கறிகள் கோடைகால உணவுக்கு சிறந்தவை. இது ஒரு ஆரோக்கியமான காய்கறியாகும், இது வயிற்றை ஆற்றும் மற்றும் வெப்பத்தை குறைக்கும். இந்த காய்கறிகள் செரிமானம் மற்றும் செரிமான அமைப்பின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 59

    கொளுத்தும் வெயிலில் ஏற்படும் உடல் சூட்டை தணிக்க உதவும் உணவுகள்!

    வெங்காயம் சாப்பிடுங்கள் : வெங்காயம் நம்மை குளிர்ச்சியூட்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம்! வெங்காயத்துடன் வெள்ளரி, முள்ளங்கி மற்றும் கேரட்டையும் சேர்த்து ஒரு சாலட் ஆக சாப்பிடலாம். உடன் எலுமிச்சை மற்றும் பிளாக் சால்ட் சேர்க்க செரிமான அமைப்பும் ஆரோக்கியமாக பராமரிக்கப்படும்.

    MORE
    GALLERIES

  • 69

    கொளுத்தும் வெயிலில் ஏற்படும் உடல் சூட்டை தணிக்க உதவும் உணவுகள்!

    சட்டு மற்றும் கோண்ட் கதிரா (Sattu And Gond Katira) : கோண்ட் கதிரா உடல் வெப்பநிலையை சீராக்க உதவுகிறது. இதை குடித்த பிறகு, உங்கள் உடல் உடனடியாக ஆற்றலைப் பெறும் மற்றும் நீங்கள் மிகவும் ஃபிட்டாக உணர்வீர்கள். மேலும் சர்பத் குடல் இயக்கத்தை சீராக்கி கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.

    MORE
    GALLERIES

  • 79

    கொளுத்தும் வெயிலில் ஏற்படும் உடல் சூட்டை தணிக்க உதவும் உணவுகள்!

    பெல் கா ஷர்பத் (Bel Ka Sharbat) : பெல் கா ஷர்பத்தும் ஹீட் ஸ்ட்ரோக்கை தடுக்க உதவும். இதிலுள்ள நார்ச்சத்து உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது. இருப்பினும், பெல் கா சர்பத் தயாரிக்கும் போது அதிக சர்க்கரையைப் பயன்படுத்த வேண்டாம்.

    MORE
    GALLERIES

  • 89

    கொளுத்தும் வெயிலில் ஏற்படும் உடல் சூட்டை தணிக்க உதவும் உணவுகள்!

    மண்பானை தண்ணீரை குடிக்கவும் : கோடை காலத்தில், ஐஸ் வாட்டர் குடிப்பதை விட மண் பானையில் உள்ள தண்ணீரைக் குடிப்பதே மிகவும் நல்லது. மண் பானையில் உள்ள நீர் உங்கள் செரிமானத்திற்கு நன்மை பயக்கும். இது உடல் வெப்பநிலையைக் குறைப்பதன் மூலம் ஹீட் ஸ்ட்ரோக் ஆபத்தை குறைக்கவும் உதவுகிறது. மேலும் மண் பானையில் உள்ள தண்ணீரில் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் உள்ளன.

    MORE
    GALLERIES

  • 99

    கொளுத்தும் வெயிலில் ஏற்படும் உடல் சூட்டை தணிக்க உதவும் உணவுகள்!

    கோடையில் உண்ணக்கூடிய பிற உணவு மற்றும் பானங்கள் : தர்பூசணி, முலாம்பழம், காய்ச்சிய தண்ணீர், மோர், தயிர் மற்றும் வெள்ளரி போன்ற உணவுகளையும் சாப்பிடலாம். இந்த உணவுகளில் நல்ல அளவிலான தண்ணீர் உள்ளது, இது டிஹைட்ரேஷன் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். மேலும் வயிறு உப்புசம், வாயு, அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளுக்கும் நிவாரணம் அளிக்கும்.

    MORE
    GALLERIES