நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதே வழியில்தான் நம் உடலும் மனமும் செயல்படுகின்றன. உதாரணமாக, நாம் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொண்டால், நம் உடலும் மனமும் ஆரோக்கியமாக வேலை செய்யும். அதே சமயம் ஆரோக்கியமற்ற உணவை சாப்பிட்டால், நம் உடலும் மனமும் ஆரோக்கியமற்ற முறையில் செயல்படும். அத்தகைய சூழ்நிலையில், சிறந்த ஆரோக்கியத்திற்காக சாப்பிடுவதும் குடிப்பதும் நல்லது. அதைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.
ஹெல்த்சைட்டின் கூற்றுப்படி, உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காத உணவை தேர்வு செய்வது ஆரோக்கியமான வாழ்வுக்கு வழி வகுக்கும். ஆனால், பெரும்பாலானோர் தினமும் காலையில் வீட்டில் காலை உணவைச் சாப்பிடுகிறார்கள், ஆனால் மதிய உணவுக்கு, வெளியில் சாப்பிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அப்படி நீங்கள் பசிக்காக சாப்பிடும் அந்த உணவுகள்தான் உங்கள் ஆரோக்கியத்திற்கு கேடு தருபவையாக இருக்கின்றன. அவை என்னென்ன பார்க்கலாம்.
சாண்ட்விச் : என்னதான் காய்கறிகளை வைத்து ஆரோக்கியமான முறையில் நீங்கள் சாண்ட்விச்கள் சாப்பிட்டாலும், கடையில் வாங்கக் கூடிய அவை கெட்டுப்போனவையாக இருக்கலாம் அல்லது அவற்றில் உள்ள தக்காளி, முட்டைக்கோஸ் போன்றவற்றில் பாக்டீரியாக்கள் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது உங்கள் வயிற்றுக்குள் சென்றால், உங்கள் உடல்நிலை மோசமாகிவிடும். ஃபுட் பாய்சனும் உண்டாகலாம்.
மாவு பொருட்கள் : மதியம் பல சமயங்களில் ஹோட்டலில் கிடைக்கும் பராட்டா, பாஸ்தா, பர்கர் போன்றவற்றை சாப்பிட்டு வயிற்றை நிரப்புகிறார்கள். ஆனால் பாஸ்தா அல்லது பரோட்டாவில் நார்ச்சத்து இல்லை என்பதையும், மாவில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பொருட்களை உட்கொள்வதால் செரிமான பிரச்சனை ஏற்படலாம் என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம். எனவே, முடிந்தவரை சர்க்கரை மற்றும் மாவில் தயாரிக்கப்பட்ட உணவைத் தவிர்க்கவும்.
பஜ்ஜி : சிலர் மதிய வேளையில் பசி எடுக்கும் போது சாலையோரத்தில் கிடைக்கும் உருளைக்கிழங்கு பஜ்ஜி, சிக்கன் பஜ்ஜிகளை சாப்பிடுவார்கள். அதேசமயம் பெரும்பாலான பஜ்ஜிகள் பழையதாக இருக்கலாம். பழைய எண்ணெயில் சுட்டதாக இருக்கலாம். இதுபோன்ற உணவுகள் வயிற்றில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களை அழிக்கிறது. இதன் காரணமாக உங்கள் செரிமான அமைப்பு கெட்டுப்போகலாம். எனவே இதையெல்லாம் சாப்பிடுவதற்கு மதிய உணவை வீட்டிலிருந்தே கொண்டு செல்லலாம்.
பழம் மற்றும் காய்கறி சாறு : காய்கறி அல்லது பழச்சாறுகளை மதிய உணவின் போது குடித்தால், வயிற்றில் வாயுவை உண்டாக்கும். அதுமட்டுமின்றி, அவ்வாறு குடிக்கும் பழச்சாறு அல்லது காய்கறி சாறுகள் ஆரோக்கியமானதாக அல்லாமல் அர்க்கரை, எசன்ஸ் என தேவையற்றதை சேர்த்து அதன் ஆரோக்கியத்தை கெடுக்கலாம். சில சமயங்களில் அதில் பயன்படுத்தப்படும் ஐஸ்கட்டிகள் கூட ஹெபடைடிஸை ஏற்படுத்தும்.