பொதுவாக நம் வீட்டு சமையல் அறையிலும். நாம் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களிலும் என எங்கேயும் காளான்களை நம்மால் பார்க்க முடியும். முக்கியமாக இன்றைய நிலையில் அழகு சாதனப் பொருட்களை தயாரிக்கும் பல்வேறு நிறுவனங்கள் காளான்களை கொண்டுதான் தங்களது ப்ராடெக்டுகளை தயாரிக்கின்றனர். ஏனெனில் காளான்களில் உள்ள ஆன்ட்டி ஏஜிங் குணாதிசயத்தின் மூலம் எப்போதும் இளமையாக தோற்றம் அளிக்க அது உதவுகிறது. மேலும் நமது சருமம் மற்றும் முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் சரியான தீர்வுகளை கொடுக்கிறது.
ஆனால் இப்போதும் கூட பல்வேறு நபர்களுக்கு காளான்களை பிடிப்பதில்லை. ஆனால் உண்மையில் காளான்களை உட்கொள்வதினால் நமக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கின்றன. சரும சம்பந்தப்பட்ட பிரச்னைகள் மற்றும் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் காளான்கள் மிகப் பெரும் உதவி செய்கின்றன. மேலும் அழகு சாதன பொருட்களை பொறுத்தவரை நம் அன்றாடம் பயன்படுத்தும் எண்ணெய், சோப்புகள், சீரம் போன்ற பல்வேறு சாதன பொருட்களில் காளான்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ரேய்ஷீ மற்றும் சகா காளான்கள்: பல்வேறு வித காளான்களில் சருமத்திற்கு நன்மையளிக்கும் பல்வேறு குணாதிசயங்கள் நிறைந்துள்ளன. அதில் முக்கியமாக ரேய்ஷி மற்றும் சகா என்ற காளான் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் துறையில் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. ஜப்பானில் காளான்களை சாகா வரத்தை கொடுப்பவை என்ற அளவிற்கு மக்கள் கொண்டாடுவார்கள். கொரியா மற்றும் சீனாவில் பெரும்பாலும் சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு காளான்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சகா என்ற காளானானது ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக வயதாகும் தோற்றத்தை குறித்து எப்போதும் இளமையாக தோற்றமளிக்க உதவுகிறது. இந்த இரண்டு காளான்களும் காஸ்மெட்டிக் துறையில் மிகப் பெரும் இடத்தை பிடித்துள்ளனர்.
சான்றெல்லிஸ் மற்றும் பட்டன் காளான் : இந்த காலான்களில் உடலுக்கு நன்மை செய்யும் ஊட்டச்சத்துக்கள் மிக அதிக அளவில் நிறைந்துள்ளன. மேலும் இதில் பொட்டாசியம் மிகவும் நிறைந்து காணப்படுவதால் தலைமுடி ஆரோக்கியமாக வளர்வதற்கு உதவுகிறது. மதரா காஸ்மெட்டிக் என்ற நிறுவனம் இந்த காளான்களை தான் தங்களது முக்கிய உப பொருட்களாக பயன்படுத்தி தங்களது அழகு சாதன பொருட்களை தயார் செய்து வருகின்றனர். நம் சாதாரணமாக பார்க்கும் வெள்ளை நிற காளான்கள் பெரும்பாலும் உணவாக பயன்படுத்தப்படுகின்றன. அது அதிக அளவு தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. எனவே இவற்றின் நற்பலன்களை அறிந்து கொண்ட பல்வேறு காஸ்மெட்டிக் நிறுவனங்கள் காளான்களை தங்களது அழகு சாதன பொருட்கள் சேர்த்து அவற்றிற்கு மதிப்பு கூட்டி வருகின்றனர்.