உலகம் முழுவதும் மே 8ம் தேதி, அன்னையர் தினம் கொண்டாடப்பட உள்ளது. உங்கள் மீது அன்பை பொழிந்து வளர்த்த அம்மாவிற்கு கிப்ட் கொடுக்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், நாங்கள் சொல்லும் இந்த ஐடியாவை முயற்சித்து பாருங்கள். என்ன தான் உலகம் முழுவதும் உள்ள பிரபல ஓட்டல்களில் சாப்பிட்டாலும், ‘எங்க அம்மாவின் கைப்பக்குவம் மாதிரி வருமா?’ என்ற எண்ணம் அனைவருக்கும் தோன்றும். ஏனென்றால் அம்மாவின் சமையலில் மட்டும் சரியான அளவு உப்பு, புளி, காரத்துடன் அளவுக்கு அதிகமான அன்பும், ஆரோக்கியமும் கலந்து இருக்கும்.
3. கோலாபுரி வெஜிடபிள்ஸ்: சூப்பராக சமையல் செய்து கொடுத்து அம்மாவை அசத்தவும் வேண்டும், அதே நேரத்தில் வேலை நேரமும் குறைவாக இருக்க வேண்டும் என நினைக்கிறீர்களா? அப்போது உங்களுக்கு இந்த ‘கோலாபுரி வெஜிடபிள்ஸ்’ மெனு சிறப்பாக இருக்கும். பிரபலமான மகாராஷ்டிரா உணவான இதனைச் சமைக்க வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே ஆகும். மேலும் இது காய்கறிகள் மற்றும் மசாலாப் பொருட்களின் சுவையான கலவையைக் கொண்டுள்ளது, இது உங்கள் அம்மாவின் சுவை மொட்டுகளை நிச்சயம் மலரச்செய்யும்.
4. காஷ்மீரி ராஜ்மா: கிட்னி பீன்ஸ் என்றும் அழைக்கப்படும் ராஜ்மா பிரபலமான உணவாகும். அதிக புரோட்டீன் நிறைந்த இது உங்கள் அம்மாவிற்கான ஆரோக்கியமான உணவாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே இந்த காஷ்மீரி ராஜ்மா ரெசிபி மூலம், அன்னையர் தினத்தன்று மதிய உணவிற்கு ஆரோக்கியமான திருப்பத்தை கொடுங்கள்.
5. மலபார் மீன் பிரியாணி: கேரளாவின் பிரபலமான உணவான இதற்கு இந்தியாவில் ஏராளமான உணவுப்பிரியர்கள் ரசிகர்களாக உள்ளனர். இதை செய்ய சீர் மீன் போன்ற இறைச்சி மீனை பயன்படுத்தவும். மசாலாவில் ஊறவைக்கப்பட்ட மீன், பாசுமதி அரிசி மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மசாலாப் பொருட்கள் கொண்ட கலவை இந்த மீன் பிரியாணியை சிறந்த அன்னையர் தின சர்ப்ரைஸாக மாற்றிவிடும்.
6. அரிசி சாதத்துடன் ஆட்டுக்கறி குழம்பு: ஆட்டு கறியைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த உணவு தென்னிந்தியாவின் அசைவப் பிரியர்களுக்கு பிடித்த உணவாகும். உங்கள் அம்மாவுக்கு சுவையான ஆட்டுக்கறி கறியை பரிமாறும் போது, அதை வறுத்த தேங்காய் துண்டுகள், காய்ந்த மிளகாய் மற்றும் கொத்தமல்லி துருவல் கொண்டு அலங்கரித்து, வேகவைத்த சாதத்துடன் பரிமாறுங்கள்.
7. பெங்காலி டோய் மாச்: மேற்குவங்கத்தைச் சேர்ந்த ஒவ்வொரு பெங்காலி குடும்பத்தினரும் இந்த உணவின் சுவைக்கு நிச்சயம் அடிமையாக இருப்பார்கள். தயிர் சார்ந்த குழம்பில் மீன் கலந்து செய்யப்படும் ஒரு வித்தியாசமான ரெசிபி இது. இதில் மென்மையான மீன் துண்டுகள் பல்வேறு மசாலா மற்றும் தயிரில் ஊறவைக்கப்பட்டு, பின்னர் வேகவைத்த அரிசியுடன் பரிமாறப்படுகிறது.
8) கேட்டே கி சப்ஜி: இது ராஜஸ்தானைச் சேர்ந்த பாரம்பரிய உணவு. கேட்டே கி சப்ஜி என்பதை ராஜஸ்தானின் உருண்டை குழம்பு என்றும் சொல்லலாம். ஏனெனில் நாம் காரக்குழம்பு மற்றும் பருப்பை வைத்து செய்யும் அதே உருண்டை குழம்பு செய்முறை தான். துவரம் பருப்பிற்கு பதிலாக இதில் உளுத்தம் பருப்பை ராஜஸ்தான் மக்கள் பயன்படுத்துகிறார்கள். இது நிச்சயமாக உங்கள் தாயாரின் மனம் கவரும் சுவையில் இருக்கும்.