குறிப்பாக டயட்டில் இருப்பது முதல் உடற்பயிற்சி செய்வது போன்ற பல விஷயங்களை தொடர்ச்சியாக கடைபிடித்துவருகின்றனர். இருந்த போதும் சில நேரங்களில் முயற்சியில் தோல்வியை சந்திக்கின்றனர். இந்த சூழலில் தான், மோனோ டயட் அல்லது மோனோட்ரோபிக் டயட் போன்ற புது விதமான டயட் முறையைப் பலர் பின்பற்ற தொடங்குகின்றனர். எனவே மோனா டயட் என்றால் என்ன..? இந்த டயட்டில் வாழைப்பழம் சாப்பிட்டால் மட்டும் உடல் எடை குறையுமா..? என்பது பற்றி இங்கே அறிந்து கொள்வோம்.
மோனோ டயட் என்றால் என்ன? உணவுக் கட்டுப்பாடுகளில் ஒரு வகை தான் மோனோடயட் அல்லது மோனோட்ரோபிக் டயட். இந்த உணவுக்கட்டுப்பாட்டில் நாம் ஏதாவது ஒரு உணவு அல்லது ஒரே விதமான உணவுப்பொருள்களை நீண்ட காலத்திற்கு எடுத்து கொள்கிறோம். அதாவது இந்த டயட்டைப் பின்பற்றக்கூடிய மக்கள், ஒரே வகை உணவுகளையே திரும்ப திரும்ப சாப்பிடுவதற்கு அறிவுறுத்தப்படுவதால் எடை இழப்பிற்கு நன்மை அளிப்பதாக உள்ளது.
மோனோடயட் நன்மை மற்றும் தீமைகள் : இந்த டயட் முறையைப் பின்பற்றி தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் மட்டும் உடல் எடையை குறைக்க முடியுமா? என்ற சந்தேகம் எழக்கூடும். மோனோ டயட் முறையானது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்பது உண்மை தான். ஆனால் இதன்படி நீங்கள் ஒரே உணவுகளை மட்டும் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவைான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், ஊட்டச்சத்து குறைபாட்டையும் நமக்கு ஏற்படுத்திவிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இதோடு மோனோ டயட்டில் நாம் ஆரோக்கியமான உணவுகள் எதையும் உட்கொள்ளவில்லை என்பதால், உடலுக்குக் கிடைக்ககூடிய பிற ஊட்டச்சத்துக்களும் கிடைப்பதில்லை . இதனால் நம் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையவும் வாய்ப்புள்ளது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். அதே சமயம் விரைவில் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த டயட் முறையைப் பின்பற்றலாம் என கூறுகின்றனர்.
மோனோ டயட் முறையைப் பின்பற்றுபவர்கள் விரைவாக மற்றும் எளிதாக உடல் எடையைக் குறைக்க முடியும். குறிப்பாக இந்த டயட்டில் குறைவான கலோரிகளை உட்கொள்வதால், குறுகிய காலத்தில் எடை இழப்பு பயணத்தை தொடங்க உதவியாக உள்ளது. மேலும் இதோடு சிலர் பல உடற்பயிற்சிகளைச் செய்வதன் மூலம் உடல் எடையை கணிசமாக குறைக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.