கோடைக்காலம் நெருங்கி வருகிறது. இரவில் பனி பெய்தாலும் பகலில் வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துள்ளது. இந்த கோடைக்கு ஏற்ற பழமாக முலாம் பழம் உள்ளது. அந்த முலாம் பழத்தில் 95% நீர்ச்சத்தும், பலவிதமான வைட்டமின்களும், நார்ச்சத்தும் நிறைந்துள்ளதால், இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மேலும் இதில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி போன்ற இயற்கை ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இது உங்களின் சருமத்தை பளபளக்க செய்கிறது. மேலும் கோடை காலத்தில் உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதில் சிறந்த பழமாகவும் உள்ளது. மேலும் அவை நெஞ்செரிச்சலைக் குறைக்கவும், சிறுநீரகத்தைச் சுத்தப்படுத்தவும் உதவுகின்றன.
முலாம்பழத்தில் இனோசிட்டால் இருப்பதால் உங்கள் தலைமுடியில் முலாம்பழ கூழ் தடவி அதன் பிறகு கழுவுவதன் மூலம் முடி உதிர்தலை எதிர்த்துப் போராடலாம். முலாம் பழ சாற்றை குடிப்பதன் மூலம் வயதான சுருங்கிய சருமத்தை போக்கலாம். மேலும் உங்களுக்கு டார்க் உதடுகள் இருந்தால், அவற்றின் மீது அரைத்த முலாம்பழத்தை தடவி வாருங்கள் வித்தியாசத்தை காணலாம். மேலும் இந்த பழத்தில் வேறு என்ன நன்மைகள் எல்லாம் நிறைந்துள்ளது என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக காண்போம்.
உடலுக்கு குளிர்ச்சியை தரும்: கோடைகாலங்களில் வெப்பம் காரணமாக அனல் கற்று வீசுவதால் உடலில் இருகின்ற நீர்சத்துகள் வெளியேறி, உடல் சுலபத்தில் வெப்பமடைகிறது. இதனால் நமக்கு சீக்கிரத்தில் சோர்வு மற்றும் உடலில் அத்தியாவசிய உப்புகள் இழப்பு ஏற்படுகிறது. இதனை போக்க முலாம் பழங்களை துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதனுடன் சர்க்கரை அதிகம் சேர்த்து கரைத்து, பின்னர் அந்த கலவையில் முலாம் பழ துண்டுகளை ஊற வைத்து பருகி வந்தால் உடல் உஷ்ணம் தணியும்.
சரும அழகை பராமரிக்க உதவுகிறது: முலாம் பழத்தில் உள்ள கொலாஜென் என்னும் புரதக் கலவை, சரும செல்களை பாதுகாக்கிறது. மேலும், உடலில் ஏற்படும் காயங்களை வேகமாக குணப்படுத்தவும், தோலின் உறுதித்தன்மையைக் காக்கவும் கொலாஜென் உதவுகிறது. இதனால், முலாம் பழம் சாப்பிடுபவர்களின் சருமம், வறட்சியாகவோ, சொரசொரப்பாகவோ இருக்காது.
கண் ஆரோக்கியம்: கண்களுக்கு வைட்டமின் ஏ மிகவும் அவசியம். முலாம் பழத்தில் பீட்டா கரோட்டின் வடிவில் இந்த வைட்டமின் உள்ளது. தினமும் மூன்று கப் அல்லது அதற்கு அதிகமாகவோ பீட்டா கெராட்டின் நிறைந்த பழங்களைத் சாப்பிடுபவர்களுக்கு, தினமும் 1.5 கப் அல்லது அதற்கும் குறைவாகவோ சாப்பிடுபவர்களை விட, மாகுலர் சீரழிவு எனப்படும் சுகாதார நிலை ஏற்படுவது 36% குறைவு என்று கூறுகிறது. இந்த மாகுலர் சீரழிவு நிலை, பிற்காலத்தில் குருட்டுத்தன்மையை விளைவிக்கும்.
சிறுநீரகம் பாதிப்பை குணப்படுத்தும் : கோடைகாலங்களில் மற்ற காலங்களை விட தாகம் அதிகம் ஏற்படும். இக்காலங்களில் நீர்சத்து நிறைந்துள்ள முலாம் பழங்களை சர்க்கரை சேர்த்து அதிகம் சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயலாற்றுவதோடு, சிறுநீர் பைகளில் அடைப்பு, நீர் சுருக்கு போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கலாம்.
ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது : உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது அவசியம். கோடைகாலங்களில் உடலின் நீர் வியர்வையாக வெளியேறிவிடுவதால் ரத்தத்தில் நீர்சத்து குறைந்து ரத்த ஓட்டத்தின் வேகம் குறைகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் முலாம் பழங்களை சாப்பிடுவதாலும் அல்லது முலாம் பழ சாறு அருந்துவதாலும் ரத்தத்தில் நீர் சத்து சேர்ந்து, ரத்த ஓட்டம் சீராகி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.
புற்று நோய்யை தடுக்கிறது : நமது உடலில் இருக்கும் செல்களில் ஏற்படும் பல மாற்றங்களாலும், உடலில் சேரும் பல வகையான நச்சுக்களின் சேர்மானத்தினாலும் புற்றுநோய் ஏற்படுவது அதிகரிக்கிறது. முலாம் பழங்களில் கரோட்டினாய்டு வேதிப்பொருள் அதிகமுள்ளது. எனவே முலாம் பழம் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நுரையீரல் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவதாக மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.