முகப்பு » புகைப்பட செய்தி » லெமன் கிராஸ் தினமும் எடுத்துக்கொள்வது நல்லதா..? கெட்டதா..? இதோ முழு விபரம்...

லெமன் கிராஸ் தினமும் எடுத்துக்கொள்வது நல்லதா..? கெட்டதா..? இதோ முழு விபரம்...

லெமன் கிராஸில் டீ போட்டு சாப்பிடும் போது இதில் உள்ள ஹிப்னாடிக் உள்ளிட்ட பண்புகள் தூக்கமின்னை பிரச்சனைக்குத் தீர்வாக அமைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றனர். சரியான தூக்கம் நிச்சயம் ஒருவரின் மனதை ஒருநிலைப்படுத்தும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

 • 16

  லெமன் கிராஸ் தினமும் எடுத்துக்கொள்வது நல்லதா..? கெட்டதா..? இதோ முழு விபரம்...

  “எலுமிச்சை புல், இஞ்சி புல், வாசனை புல் என பல பெயர்களைக் கொண்டது தான் லெமன் கிராஸ்“. சிட்ரஸ் வாசனை மற்றும் இஞ்சியின் சுவையை சற்றுக் கொண்டுள்ளதால் இந்த பெயரை பெற்றுள்ளது. புல் இன வகையை சேர்ந்த இந்த மூலிகை தாவரம் இந்தியா, இலங்கை, பர்மா உள்ளிட்ட பல நாடுகளில் பயிரிடப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 26

  லெமன் கிராஸ் தினமும் எடுத்துக்கொள்வது நல்லதா..? கெட்டதா..? இதோ முழு விபரம்...

  லெமன் கிராஸ் பயன்படுத்துவதால் நன்மைகள்: லெமன் கிராஸ் அதாவது எலுமிச்சைப் புல்லில் டையூரிடிக் பண்புகள் அதிகளவு உள்ளதால் உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுக்கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. இதோடு சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் உள்பட உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளின் ஒழுங்குமுறையை மேம்படுத்துவதோடு, உடலில் யூரிக் அமில அளவையும் குறைக்கிறது. இதைத் தொடர்ச்சியாக பருகுவதன் மூலம் உடலின் உள்ள உறுப்புகள் அனைத்தும் சீராக செயல்பட உதவியாக உள்ளது.

  MORE
  GALLERIES

 • 36

  லெமன் கிராஸ் தினமும் எடுத்துக்கொள்வது நல்லதா..? கெட்டதா..? இதோ முழு விபரம்...

  எலுமிச்சைப் புல்லை நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது செரிமான சக்தி மேம்படுவதோடு, பசியின்மையையும் போக்குகிறது. மேலும் இதில் உள்ள பல வேதிப் பொருள்கள் மனச்சோர்வை நீக்கி உற்சாகம் தரக்கூடியதாகவும் பாக்டீரியாக்களை அழிக்கக்கூடியதாகவும் பயன்படுகிறது. ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை மேம்படுத்துவதோடு உடலின் நோய் சக்தியையும் பலப்படுத்துகிறது.

  MORE
  GALLERIES

 • 46

  லெமன் கிராஸ் தினமும் எடுத்துக்கொள்வது நல்லதா..? கெட்டதா..? இதோ முழு விபரம்...

  உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லாது லெமன் கிராஸ் சரும பராமரிப்பிற்கும் உதவியாக உள்ளது. ஆம் நீண்ட காலமாக எண்ணெய் அல்லது முகப்பரு பாதிப்புள்ள சருமத்திற்குத் தீர்வு காணும் மருந்தாகிறது. இதை நம்முடைய சருமத்தில் அப்ளே செய்யும் போது சருமத்துளைகளைக் குறைக்கவும், சருமத்தைப் பிரகாசமாக வைத்திருக்கவும் உதவியாக உள்ளது.

  MORE
  GALLERIES

 • 56

  லெமன் கிராஸ் தினமும் எடுத்துக்கொள்வது நல்லதா..? கெட்டதா..? இதோ முழு விபரம்...

  லெமன் கிராஸில் டீ போட்டு சாப்பிடும் போது இதில் உள்ள ஹிப்னாடிக் உள்ளிட்ட பண்புகள் தூக்கமின்னை பிரச்சனைக்குத் தீர்வாக அமைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றனர். சரியான தூக்கம் நிச்சயம் ஒருவரின் மனதை ஒருநிலைப்படுத்தும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

  MORE
  GALLERIES

 • 66

  லெமன் கிராஸ் தினமும் எடுத்துக்கொள்வது நல்லதா..? கெட்டதா..? இதோ முழு விபரம்...

  லெமன் கிராஸ் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்: லெமன் கிராஸில் பல்வேறு நன்மைகள் இருந்தாலும், தொடர்ச்சியாக நாம் பயன்படுத்தும் போது பல உடல்நல பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும். அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது சோர்வு, மயக்கம், வாய் வறட்சி மற்றும் சில நேரங்களில் சொறி, அரிப்பு போன்ற ஒவ்வாமை பிரச்சனைகள் ஏற்படும். எனவே நீங்கள் இதுபோன்ற அறிகுறிகள் எதுவும் இருந்தாலும் உடனடியாக மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வதை மறந்து விடாதீர்கள்.

  MORE
  GALLERIES